அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? பிரஸ்தாபிகள் இந்தப் புத்தகத்தை வீட்டுக்காரருக்குக் கொடுத்தால் அல்லது அது அவரிடம் ஏற்கெனவே இருந்தால் பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய வேண்டும். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே நம் குறிக்கோளாய் இருக்க வேண்டும். ஜூன்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தை அளியுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால், 1995-க்கு முன்பு பிரசுரிக்கப்பட்ட ஏதாவதொரு 192 பக்க புத்தகத்தை அளியுங்கள். ஜூலை: சபையில் மிக அதிகமாகத் தேங்கியுள்ள, யெகோவாவின் சாட்சிகள்—அவர்கள் யார்? அவர்களது நம்பிக்கை என்ன? போன்ற ஏதேனும் ஒரு சிற்றேட்டை அளியுங்கள். சபையின் கையிருப்பிலுள்ள மற்ற சிற்றேடுகளையும் அளிக்கலாம்.
◼ காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் சபைக்கு வந்தவுடன் அவற்றை விநியோகித்துவிடுங்கள். வெளி ஊழியத்தில் இந்தப் பத்திரிகைகளை அளிப்பதற்குமுன் பிரஸ்தாபிகள் இவற்றிலுள்ள தகவலை அறிந்துகொள்ள அது உதவியாய் இருக்கும்.
◼ இந்த வருடம் மார்ச் 30, செவ்வாய்க் கிழமை அன்று இயேசுவின் மரண நினைவுநாள் அனுசரிக்கப்படும். அன்று உங்களுக்குச் சபைக்கூட்டம் இருந்தால் அதை வேறொரு நாளுக்கு மாற்றி வைத்துக்கொள்ளுங்கள். ஒரே ராஜ்ய மன்றத்தைப் பல சபைகள் உபயோகிப்பதன் காரணமாக, சபைக் கூட்டத்தை வேறொரு நாளுக்கு மாற்ற முடியாவிட்டால் அன்றைய கூட்டத்தை ரத்து செய்துவிடலாம். உங்கள் சபைக்கு முக்கியமாய்ப் பொருந்துகிற ஊழியக் கூட்டத்தின் பகுதிகள் வேறொரு வாரத்தில் நடக்கிற ஊழியக் கூட்டத்தோடு சேர்க்கப்படலாம்.