மே 3-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 3-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 6, பாரா. 10-15, பக். 77-ல் உள்ள பெட்டி
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 சாமுவேல் 1-3
எண் 1: 2 சாமுவேல் 2:12-23
எண் 2: இயேசு ஊழியம் செய்யும்போது கடவுளுடைய பெயரைப் பயன்படுத்தினாரா?
எண் 3: “மரித்தோரின் ஆவிகளின்” நினைவுக் குறிப்பான விடுமுறைநாட்களின் அடிப்படையில் இருப்பதென்ன? (rs பக். 180 பாரா 4–பக். 181 பாரா 4)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: “‘கடவுளது அன்பு’ புத்தகத்தை பைபிள் படிப்புகளில் பயன்படுத்துதல்.” அறிமுகக் குறிப்புகளை ஒரு நிமிடத்திற்குள் முடித்துக்கொண்டு, கேள்வி-பதில் முறையில் கட்டுரையைக் கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: “‘பாதகமான காலத்தில்’ ஊழியம் செய்யப் பயிற்சி பெறுதல்.” சபையாருடன் கலந்தாலோசிப்பு. முந்தைய நம் ராஜ்ய ஊழியத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளிலிருந்து பொருத்தமான குறிப்புகளைச் சபையாருக்கு நினைப்பூட்டுங்கள். ஊழியக் கண்காணியைப் பேட்டி காணுங்கள். கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைச் சபையார் எப்படிக் கடைப்பிடித்திருக்கிறார்கள்? இது சபைக்கு எப்படிப் பலன் தந்திருக்கிறது? இன்னும் எந்தெந்த விஷயங்களில் சபையார் முன்னேற்றம் செய்ய வேண்டியுள்ளது? பிரச்சினைகள் வந்தபின் அவற்றைத் தீர்ப்பதற்குப் பதிலாக, பிரச்சினைகளே வராதபடி சாதுரியத்தோடும் விவேகத்தோடும் நடந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துங்கள்.