ஜூன் 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 3 பாரா. 20-24, பெட்டி 34 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 38-44 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 41:1–42:5 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: நெருங்கிய நட்பும், நல்ல பண்புகளும்—நாம் பின்பற்றுவதற்கு ஏற்ற பைபிள் உதாரணங்கள் (5 நிமி.)
எண் 3: இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இன்று யாருக்குள் நிறைவேற்றமடைகின்றன?—rs பக். 224 பாரா 3-பக். 225 பாரா 3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். அடுத்த வார ஊழியக் கூட்டத்திற்கு ஜூலை–செப்டம்பர் 2011, தேதியிட்ட காவற்கோபுரத்தை எடுத்துவரும்படி எல்லாரிடமும் சொல்லுங்கள்.
10 நிமி: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் முறைகள்—வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துதல். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 98, பாரா 1 முதல் பக்கம் 99, பாரா 1 வரை உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒருவருக்குச் சத்தியத்தைக் கற்பிக்கையில் அவர் ஆன்மீக முன்னேற்றங்கள் செய்வதைப் பார்க்கும்போது கிடைக்கிற சந்தோஷங்களைப் பற்றிச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். தங்களுடைய அனுபவத்தைச் சொல்லும்படி ஓரிருவரை முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: திருமணம், விவாகரத்து, பிரிந்து வாழ்தல் ஆகியவற்றைப் பற்றிய கிறிஸ்தவ தராதரங்கள் என்ன? ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 194-195-ல், 1-3 கேள்விகளின் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.
10 நிமி: “ஊழியத்தில் தேவை—பொறுமை.” கேள்வி-பதில்.
பாட்டு 16; ஜெபம்