“நான் எவ்வளவு மணிநேரம் அறிக்கை செய்ய வேண்டும்?”
இந்தக் கேள்வியை நீங்கள் எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? இது சம்பந்தமான சில ஆலோசனைகள், ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 86-87-ல் இருக்கின்றன. அதோடு, கூடுதல் தகவல்கள் அவ்வபோது நமக்கு வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, செப்டம்பர் 2008 நம் ராஜ்ய ஊழியத்தின் கேள்வி பெட்டியில் இது பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொருவருடைய சூழ்நிலைமை வேறுபடுவதால் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்ற ஆலோசனைகள் நமக்குக் கொடுக்கப்படுவதில்லை. எனவே, மூப்பர்களும் சரி மற்றவர்களும் சரி, புதுப்புது ஆலோசனைகளை அளிப்பது சரியாக இருக்காது.
ஒருவேளை இது சம்பந்தமாக ஒரு கேள்வி நம் மனதிற்குள் வருகிறது என வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் அது பற்றிய எந்த ஆலோசனையும் நம்முடைய பிரசுரங்களில் வெளிவரவில்லை என்றால், நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘அந்த மணிநேரங்களை நான் ஊழியத்தில்தான் செலவிட்டேனா? அல்லது வேறு ஏதாவது செய்ய செலவிட்டேனா?’ வெளி ஊழிய அறிக்கையில் நாம் ஒவ்வொரு மாதமும் அறிக்கை செய்யும் மணிநேரங்களை நினைத்து நம் மனம் மகிழ வேண்டுமே தவிர குறுகுறுக்கக் கூடாது. (அப். 23:1) நேரத்தை எப்படிக் கணக்கிடுவது என்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அந்த நேரத்தை நாம் எப்படிப் பயனுள்ள விதத்தில் சுறுசுறுப்பாக பயன்படுத்தலாம் என்பதற்கே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.—எபி. 6:11.