ஜூன் 27-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 5; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 4 பாரா. 11-18 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 52-59 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். “நான் எவ்வளவு மணிநேரம் அறிக்கை செய்ய வேண்டும்?” மூப்பர் கொடுக்கும் பேச்சு. பேச்சுக்குப் பிறகு பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி ஜூலை மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று பைபிள் படிப்பை எப்படித் துவங்குவது என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். அன்று ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி எல்லாரையும் ஊக்குவியுங்கள்.
10 நிமி: ஜூலை மாதத்தில் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. ஓரிரு நிமிடங்களுக்குப் பத்திரிகைகளின் பொருளடக்கத்தைச் சிந்தியுங்கள். பின்பு, இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள்; என்ன கேள்விகளைக் கேட்டு, எந்த வசனங்களைப் பயன்படுத்தி, பத்திரிகைகளை அளிக்கலாம் எனச் சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: பிரசங்கிக்கையில் சாதுரியமாக இருத்தல். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 197-199 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. வீட்டுக்காரர் எதிர்ப்பு தெரிவிக்கையில் ஒரு பிரஸ்தாபி எப்படிச் சாதுரியமற்ற விதத்தில் பதிலளிக்கிறார் என்பதை நடித்துக் காட்டுங்கள். அடுத்த நடிப்பில், அதே பிரஸ்தாபி அந்த எதிர்ப்புக்கு எப்படிச் சாதுரியமான விதத்தில் பதிலளிக்கிறார் என்பதைக் காட்டுங்கள்.
பாட்டு 47; ஜெபம்