ஜூலை 18-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 29; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 5 பாரா. 9-15 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 74-78 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 77:1–20 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: என்னென்ன விதங்களில் நாம் பிசாசை எதிர்த்து நிற்கலாம்?—யாக். 4:7 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அரசாங்கம் யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்தும்—rs பக். 227 பாரா. 3-5 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. யோவான் 4:3-24-ஐ வாசித்து கலந்தாலோசியுங்கள். ஊழியத்தில் இயேசுவை எப்படிப் பின்பற்றலாம் என்பதைச் சிந்தியுங்கள். பிறகு, ஒரு பிரஸ்தாபி சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதைப் போன்ற யதார்த்தமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “நம் பத்திரிகைகள்—பலதரப்பட்ட மக்களுக்காக.” கேள்வி-பதில். பாரா 2-ஐ கலந்தாலோசித்த பிறகு ஜூலை-செப்டம்பர் விழித்தெழு! இதழின் பொருளடக்கத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசியுங்கள். பிறகு, என்ன கேள்விகளைக் கேட்டு எந்த வசனங்களைப் பயன்படுத்தி அந்தப் பத்திரிகையை அளிக்கலாம் என சபையாரிடம் கேளுங்கள்; அதை அளிக்கிற ஒரு நடிப்பிற்கும் ஏற்பாடு செய்யுங்கள். பாரா 3-க்குப் பிறகு ஜூலை-செப்டம்பர் காவற்கோபுரத்தை எடுத்துக்கொண்டு இதேபோல் செய்யுங்கள்.
பாட்டு 51; ஜெபம்