அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜூலை, ஆகஸ்ட்: உங்கள் மொழியிலுள்ள 32 பக்க சிற்றேடு எதையாவது அளியுங்கள். அது உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே அந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம் உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை அளித்து பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.
◼ மாவட்ட மாநாட்டிற்கு முந்தின வார ஊழியக் கூட்டத்தில், சபையாருக்குப் பொருந்துகிற ஆலோசனைகளையும் நினைப்பூட்டுதல்களையும் கலந்தாலோசிப்பதற்கு வசதியாக ஊழியக் கூட்டத்தின் அட்டவணையை மாற்றியமைக்கலாம். மாநாடு முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு, பிரஸ்தாபிகள் ஊழியத்தில் பயனுள்ளதாக இருப்பதாய்க் கண்ட மாநாட்டுக் குறிப்புகளைச் சபைத் தேவைகள் பகுதியில் கலந்தாலோசியுங்கள்.