தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 29, 2011-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
1. “ஜீவனைப்பார்க்கிலும்” யெகோவாவின் கிருபை, அதாவது அன்புமாறா கருணை, எவ்விதத்தில் சிறந்தது? (சங். 63:3) [w01 10/15 பக். 15 பாரா 17]
2. எழுபதாம் சங்கீதம் தாவீதைப் பற்றி என்ன தெரிவிக்கிறது? [w08 9/15 பக். 4 பாரா 4]
3. சங்கீதம் 75:5 எதைக் குறித்து எச்சரிக்கிறது? [w06 7/15 பக். 11 பாரா 2]
4. முக்கியமாக நாம் எதைப் பற்றி ஜெபிக்கும்போது யெகோவா நம் ஜெபங்களைக் கேட்பார் என எதிர்பார்க்கலாம்? (சங். 79:9) [w06 7/15 பக். 12 பாரா 5]
5. சங்கீதம் 90:7, 8-ல் சொல்லப்பட்டுள்ள ‘அந்தரங்க பாவங்கள்’ யாவை? [w01 11/15 பக். 12-13 பாரா. 14-16]
6. சங்கீதம் 92:12-15-ல் குறிப்பிட்டுள்ளபடி சபையிலுள்ள முதியோருக்கு என்ன முக்கிய பொறுப்பு இருக்கிறது? [w04 5/15 பக். 13-14 பாரா. 15-18]
7. ஆபிரகாம் மற்றும் அவருடைய சந்ததியார் விஷயத்தில் சங்கீதம் 105:14, 15 எப்படி நிறைவேறியது? [w10 4/15 பக். 8 பாரா 5]
8. பகுத்துணர்வு காட்டுவது ஏன் முக்கியம் என்பதைப் பற்றி சங்கீதம் 106:7-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? [w95 9/1 பக். 19 பாரா 4-பக். 20 பாரா 2]
9. சங்கீதம் 110:1, 4-லுக்கு இசைய வாக்குப்பண்ணப்பட்ட வித்துவுக்கு, அதாவது மேசியாவுக்கு, யெகோவா என்ன ஆணை இடுகிறார், இதன்படி மனிதர் எல்லாரும் எப்படி ஆசீர்வதிக்கப்படுவார்கள்? [cl பக். 194 பாரா 13]
10. கடவுளுக்குச் சேவை செய்ததால் கிடைத்த நன்மைகளை தியானித்துப் பார்த்த சங்கீதக்காரன் எப்படி உணர்ந்தார்? (சங். 116:12, 14, NW) [w09 7/15 பக். 29 பாரா. 4-5]