செப்டம்பர் 26-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
செப்டம்பர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 5; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 8 பாரா. 18-22, பெட்டி 86 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 142-150 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 144:1–145:4 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய அரசாங்கம் முதல் நூற்றாண்டிலேயே ஆட்சி செய்ய தொடங்கியதா?—rs பக். 232 பாரா. 2-4 (5 நிமி.)
எண் 3: நாம் ஏன் ‘ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்ள’ கூடாது?—யாக். 2:1-4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். “பைபிள் ஒரு கண்ணோட்டம் சிற்றேட்டை அளிக்க ஒரு வழி...”. கலந்தாலோசிப்பு. பக்கம் 4-ல் உள்ள மாதிரி அணுகுமுறையைப் பயன்படுத்தி அக்டோபர் 1 சனிக்கிழமை அன்று பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிக்கலாமென நடித்துக்காட்டுங்கள். அன்று பைபிள் படிப்பு ஆரம்பிக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. கலந்தாலோசிப்பு. மார்ச் 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ல் உள்ள தகவலையும் பயன்படுத்துங்கள்.
15 நிமி: அக்டோபர் மாதத்தில் பத்திரிக்கைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. உங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் சில கட்டுரைகளை ஓரிரு நிமிடங்களுக்குக் குறிப்பிடுங்கள். இரண்டு அல்லது மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுங்கள். அதில் ஒன்றை எடுத்துக்கொண்டு அதை எப்படி அளிக்கலாம் என சபையாரைக் கேளுங்கள். அப்படியே அடுத்தடுத்த கட்டுரைகளைச் சிந்தியுங்கள். ஆர்வத்தைத் தூண்டுகிற என்ன கேள்வியைக் கேட்கலாம் என்றும் எந்த வசனத்தை வாசிக்கலாம் என்றும் கேளுங்கள். அக்டோபர்-டிசம்பர் விழித்தெழு!, சிறப்பிதழ் என்பதால் இந்தப் பத்திரிக்கை முக்கியமாக யாருக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்றும் இதை எப்படி பரவலாக அளிக்கலாம் என்றும் சபையாரைக் கேளுங்கள். ஒவ்வொரு பத்திரிகையையும் எப்படி அளிக்கலாம் என நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 41; ஜெபம்