அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு செப்டம்பர்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஒருவேளை வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே அந்தப் புத்தகம் இருந்தால், அதோடு அவர் பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற வேறு ஏதாவது பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ கொடுக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம் உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியை அளித்து பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். நவம்பர்: பைபிள்—ஒரு கண்ணோட்டம். இந்தச் சிற்றேட்டுடன் அல்லது இந்தச் சிற்றேட்டுக்குப் பதிலாக உங்கள் மொழியிலுள்ள 32 பக்க சிற்றேடு எதையாவது சேர்த்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும். அது உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர். நீங்கள் போகும் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளியுங்கள்.
◼ 2012 நினைவுநாள் அனுசரிப்பு காலத்திற்கான விசேஷ பொதுப்பேச்சு ஏப்ரல் 2-ல் துவங்கும் வாரத்தில் கொடுக்கப்படும். பேச்சின் தலைப்பு பிற்பாடு அறிவிக்கப்படும். எந்த சபையிலும், நினைவுநாள் அனுசரிப்புக்கு முன்பு விசேஷ பேச்சு கொடுக்கப்படக்கூடாது.
◼ மார்ச் 2012-ல் துணைப் பயனியர் செய்பவர்கள் 30 மணிநேரம் அல்லது 50 மணிநேரம் அறிக்கை செய்யலாம். அதோடு, அந்த மாதத்தில் வட்டார கண்காணி சந்திக்கும் சபைகளில் உள்ள அனைத்து துணைப் பயனியர்களும், ஒழுங்கான பயனியர்களுக்கான முழு கூட்டத்திலும் கலந்துகொள்ளலாம்—அவர்கள் 30 மணிநேரம் செய்தாலும் சரி 50 மணிநேரம் செய்தாலும் சரி.
◼ செப்டம்பர் மாதத்தில் “கடவுளுடைய சந்தோஷமுள்ள மக்களுடன் ஒன்றுபட்டிருங்கள்” என்ற பேச்சை வட்டாரக் கண்காணி கொடுப்பார்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
கடவுளது அரசைப் பற்றி ‘முழுமையாகச் சாட்சி கொடுங்கள்’ —தமிழ், மலையாளம்
இரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைச் சமாளிக்க உதவி—டிவிடி —அமெரிக்க சைகை மொழி
யெகோவாவுக்குப் புகழ் பாடுங்கள்—பாடல்கள்—சிடி, டிஸ்க் 3 —ஆங்கிலம்
யெகோவாவுக்குப் புகழ் பாடுங்கள்—பாடல்கள்—சிடி, டிஸ்க் 4 —ஆங்கிலம்