அக்டோபர் 10-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 9 பாரா. 10-16 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 7-11 (10 நிமி.)
எண் 1: நீதிமொழிகள் 8:1-21 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால்: “கடவுளுடைய அரசாங்கம் என் வாழ்நாளில் வராது”—rs பக். 233 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: ‘மிஞ்சின நீதிமானாய்’ இருப்பதைக் குறித்து பைபிள் ஏன் எச்சரிக்கிறது?—பிர. 7:16 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: முயற்சி செய்து பார்த்தீர்களா? கலந்தாலோசிப்பு. “ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் ஊழியத்தில் ஈடுபட முடியுமா?” (km 5/11) மற்றும் “பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் புதிய கட்டுரை” (km 6/11) என்ற தலைப்புகளில் நம் ராஜ்ய ஊழியத்தில் சமீபத்தில் வெளிவந்த கட்டுரைகளில் உள்ள தகவலைச் சுருக்கமாகத் தொகுத்து பேச்சாகக் கொடுங்கள். இந்தக் கட்டுரைகளில் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைச் சபையார் எப்படிக் கடைப்பிடித்தார்கள், என்ன பலன்களைப் பெற்றார்கள் என்று கேளுங்கள்.
15 நிமி: “நியாயங்காட்டிப் பேசுங்கள்.” கேள்வி-பதில். பாரா 3-ஐக் கலந்தாலோசித்த பிறகு, இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பில், வீட்டுக்காரர் கேள்வி கேட்கும்போது அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும்போது பிரஸ்தாபி அவரிடம், தான் சொல்வதுதான் சரி என்பதுபோல பேசுகிறார். இரண்டாவது நடிப்பில், வீட்டுக்காரர் அதே கேள்வி கேட்கும்போது அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும்போது நியாயங்காட்டி பேசுகிறார்.
பாட்டு 28; ஜெபம்