அக்டோபர் 31-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 18; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 10 பாரா. 11-17 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நீதிமொழிகள் 22-26 (10 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை (20 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். “என்ன நிலையில் இருக்கிறது?” பேச்சு. பேச்சுக்குப் பிறகு பக்கம் 8-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி நவம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமை அன்று பைபிள் படிப்பை எப்படித் துவங்குவது என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: ஊழியத்தில் சிறந்த தோற்றம் ஏன் முக்கியம்? ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக். 131-134-ன் அடிப்படையில் ஒரு மூப்பர் கலந்தாலோசிக்கிறார்.
10 நிமி: நவம்பர் மாதத்தில் பத்திரிகைகளை அளிக்கத் தயாரியுங்கள். கலந்தாலோசிப்பு. உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளை ஓரிரு நிமிடங்களுக்குச் சிந்தியுங்கள். பின்பு, காவற்கோபுரத்தின் அட்டைப்பட கட்டுரைகளை அறிமுகப்படுத்த ஆர்வத்தைத் தூண்டுகிற என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். இதேபோல் விழித்தெழு! பத்திரிகையின் அட்டைப்பட கட்டுரைகளுக்கும் செய்யுங்கள். நேரம் இருந்தால் இன்னொரு கட்டுரையை எடுத்துக்கொண்டு அதேபோல் செய்யுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 4; ஜெபம்