அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர். நீங்கள் போகும் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் அல்லது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி எடுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் அல்லது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளிக்கலாம்.
◼ 2013-ஆம் ஆண்டிற்கான நினைவு நாள் அனுசரிப்பு மார்ச் 26 அன்று வருகிறது.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ —குஜராத்தி