ஜனவரி 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 4; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 14 பாரா. 10-16 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 38-42 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 39:1–40:5 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எதிர்கால வாழ்க்கைக்கான எதிர்பார்ப்புகள் எவ்வாறு உண்மையாகும்?—நியாயங்காட்டி பக். 246 பாரா 9–பக். 247 பாரா 1 (5 நிமி.)
எண் 3: தெய்வீகக் கல்வியே ஒப்பற்றது—பிலி. 3:8. (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். ஓரிரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையை அடுத்த வாரம் ஊழியக் கூட்டத்திற்கு எடுத்து வரும்படி சபையாரிடம் சொல்லுங்கள்.
10 நிமி: என்ன கற்றுக்கொள்கிறோம்? கலந்தாலோசிப்பு. மாற்கு 10:17-30-ஐ வாசியுங்கள். இவற்றை ஊழியத்தில் எப்படிப் பின்பற்றலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி: “‘எல்லாருக்கும்’ நற்செய்தியைச் சொல்லுங்கள்.” கேள்வி-பதில். உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சிற்றேட்டின் நோக்கத்தையும் பற்றிக் கலந்தாலோசியுங்கள். பின்பு, உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களுக்குப் பயனுள்ள இரண்டு சிற்றேடுகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் சிறப்பம்சங்களைச் சிந்தியுங்கள். ஒவ்வொரு சிற்றேட்டையும் எப்படி அளிப்பது என்பதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 13; ஜெபம்