அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் அல்லது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் அல்லது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளிக்கலாம். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை அளியுங்கள். ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு உண்மைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? என்ற துண்டுப்பிரதியைக் கொடுத்து பைபிள் படிப்பைத் தொடங்க முயலுங்கள். ஆர்வமுள்ளவர்களையும், சபையுடன் முழுமையாகக் கூட்டுறவு கொள்ளாமல் நினைவுநாள் அனுசரிப்புக்கோ வேறு ஏதாவது தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கோ மட்டுமே வந்து போகும் நபர்களையும் மீண்டும் சந்திக்கும்போது, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை அளித்து ஒரு பைபிள் படிப்பைத் தொடங்க முயற்சி செய்யுங்கள்.
◼ வட்டாரக் கண்காணிகள் பிப்ரவரி மாதத்திலிருந்து “யெகோவாவை முழுமையாக நம்புகிறீர்களா?” என்ற தலைப்பில் பொதுப் பேச்சைக் கொடுப்பார்கள்.
◼ கிளை அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்க 15 பேரோ அல்லது அதற்கு அதிகமானோரோ வருவதாக இருந்தால் முன்னதாகவே கிளை அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும். எத்தனை பேர் வருவார்கள், எந்தத் தேதியில் வருவார்கள், எந்த நேரத்தில் வருவார்கள் என்பதைக் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும். போவதற்கு முன்பு மார்ச் 2008 நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கும் கேள்விப் பெட்டியைத் தயவுசெய்து படித்துவிட்டு வரவும். சுற்றிப் பார்ப்பதற்கான நேரம்: காலை 8.00 மணி, 10.00 மணி, மதியம் 1.00 மணி, 3.00 மணி. மே 25, வெள்ளிக்கிழமை அன்று பெத்தேல் அங்கத்தினர் தங்கள் அறைகளை சுத்தம் செய்வார்கள்; எனவே, அன்று கிளை அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்க முடியாது. அதேபோல், ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, 30, 31, அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும் பெத்தேலைச் சுற்றிப் பார்க்க முடியாது.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் —நேப்பாளி
கடவுள் சொல்வதைக் கேளுங்கள் மற்றும் கடவுள் சொல்வதைக் கேளுங்கள் காலமெல்லாம் வாழுங்கள் —நிவாரி