ஏப்ரல் 23-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஏப்ரல் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 102; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 18 பாரா. 19-23, பெட்டி பக். 191 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 29-31 (10 நிமி.)
எண் 1: எரேமியா 31:15-26 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: வாராந்தர ஓய்வுநாளை கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டுமெனக் கடவுள் எதிர்பார்க்கிறாரா? (5 நிமி.)
எண் 3: இயேசுவைப் பெற்றபோது மரியாள் உண்மையில் கன்னியாக இருந்தாளா?—நியாயங்காட்டி பக். 255 பாரா. 3-4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: மே மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? உங்கள் பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கட்டுரைகளைப் பற்றி ஏப்ரல்-ஜூன் பத்திரிகைகளிலிருந்து ஓரிரு நிமிடங்களுக்கு சொல்லுங்கள். பின்பு, காவற்கோபுரத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆர்வத்தைத் தூண்டுகிற என்ன கேள்வியைக் கேட்கலாம், அதன் பிறகு எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரைக் கேளுங்கள். இதேபோல், விழித்தெழு! பத்திரிகைக்கும் செய்யுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: “ஆளும் குழுவிடமிருந்து ஒரு கடிதம்.” பேச்சின் ஆரம்பத்தில் மார்ச் 2012 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையில் உள்ள கடிதத்தின் குறிப்புகளைப் பயன்படுத்துங்கள். பின்பு, பிப்ரவரி 2012 நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள வருடாந்தர அறிக்கையிலிருந்து ஆர்வமூட்டும் குறிப்புகளைச் சொல்லுமாறு சபையாரைக் கேளுங்கள்.
பாட்டு 33; ஜெபம்