தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 26, 2013-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். கீழேயுள்ள கேள்விகள் எந்த வாரத்தில் சிந்திக்கப்படும் என்பதைத் தெரிந்துகொள்ள தேதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்காகத் தயாரிக்கும்போது ஆராய்ச்சி செய்ய அது உதவும்.
1. மனிதர்களிடமிருந்து மகிமையையும் புகழையும் ஏற்றுக்கொண்ட ஏரோது ராஜாவுக்கு ஏற்பட்ட முடிவு, நமக்கு என்ன முக்கியமான பாடத்தைக் கற்றுத்தருகிறது? (அப். 12:21-23) [ஜூலை 1, காவற்கோபுரம் 08 5/15 பக். 32 பாரா 7]
2. தீமோத்தேயுவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதன் மூலம் கிறிஸ்தவ இளைஞர்கள் எப்படிப் பயனடையலாம்? (அப். 16:1, 2) [ஜூலை 8, காவற்கோபுரம் 08 5/15 பக். 32 பாரா 10]
3. எபேசுவிலிருந்த ஜெபக்கூடத்தில் அப்பொல்லோ ‘தைரியமாகப் பேசுவதை’ கேட்ட பிறகு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவருக்கு எப்படி அன்பாக உதவினார்கள்? (அப். 18:24-26) [ஜூலை 15, காவற்கோபுரம் 10 6/15 பக். 11 பாரா 4]
4. பிரசங்கிக்கும் உரிமையைப் பாதுகாக்க யெகோவாவின் சாட்சிகள் நீதிமன்றங்களின் உதவியை நாடலாம் என்பதற்கு என்ன வேதப்பூர்வ அடிப்படை இருக்கிறது? (அப். 25:10-12) [ஜூலை 22, ‘சாட்சி கொடுங்கள்’ பக். 198 பாரா 6]
5. ரோமில் சிறைப்பட்டிருந்தபோதுகூட அப்போஸ்தலன் பவுல் எப்படித் தொடர்ந்து பிரசங்கித்தார், அவருடைய முன்மாதிரியை இன்று யெகோவாவின் ஊழியர்கள் எப்படிப் பின்பற்றுகிறார்கள்? (அப். 28:17, 23, 30, 31) [ஜூலை 29, ‘சாட்சி கொடுங்கள்’ பக். 216 பாரா. 19-23]
6. ஓரினச்சேர்க்கை இயல்புக்கு மாறானது, ஆபாசமானது என்று பைபிள் ஏன் கண்டனம் செய்கிறது? (ரோ. 1:26, 27) [ஆக. 5, விழித்தெழு! 4/12 பக். 28 பாரா 7]
7. கி.பி. 33-ல் “கிறிஸ்து இயேசு செலுத்திய மீட்புவிலை” எப்படி “முற்காலத்தில் செய்யப்பட்ட பாவங்களை” நீக்க முடியும்? (ரோ. 3:24, 25) [ஆக. 5, காவற்கோபுரம் 08 6/15 பக். 29 பாரா 6]
8. எதைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டும் என்றே தெரியாத அளவுக்கு நாம் குழம்பிப்போயிருக்கும் சமயங்களில், நமக்கு உதவ யெகோவா என்ன அன்பான ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்? (ரோ. 8:26, 27) [ஆக. 12, காவற்கோபுரம் 08 6/15 பக். 30 பாரா 10]
9. “உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்ற அறிவுரை எதை அர்த்தப்படுத்துகிறது? (ரோ. 12:13) [ஆக. 19, காவற்கோபுரம் 09 10/15 பக். 5-6 பாரா. 12-13]
10. பவுலின் அறிவுரைப்படி நாம் எப்படி ‘எஜமானராகிய இயேசு கிறிஸ்துவை அணிந்துகொள்ள’ முடியும்? (ரோ. 13:14, அடிக்குறிப்பு) [ஆக. 26, காவற்கோபுரம் 05 1/1 பக். 11-12 பாரா. 20-22]