நவம்பர் 4-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 49; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 26 பாரா. 16-22, பெட்டி பக். 209 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: தீத்து 1—பிலேமோன் (10 நிமி.)
எண் 1: தீத்து 2:1–15 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மதத்தைச் சேர்ந்திருப்பது தேவையா?—நியாயங்காட்டி பக். 326 பாரா 3–பக். 327 பாரா 2 (5 நிமி.)
எண் 3: நாம் ஏன் ‘கட்டுக்கதைகளுக்கு கவனம் செலுத்த’ கூடாது?—1 தீ. 1:3, 4; 2 தீ. 4:3, 4 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: நவம்பர் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. அக்டோபர்-டிசம்பர் விழித்தெழு! மக்களை எப்படிக் கவரும் என்பதை 30-60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு விழித்தெழு!-வின் அட்டைப்பட கட்டுரைகளைக் காண்பித்து, என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று கேளுங்கள். இந்தப் பத்திரிகையை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
10 நிமி: கடவுளுடைய வார்த்தை . . . வல்லமையுள்ளது. (எபி. 4:12) மே 2001 நம் ராஜ்ய ஊழியத்தில் உள்ள கட்டுரையின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு.
பாட்டு 114; ஜெபம்