உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/14 பக். 8
  • இதோ சில அணுகுமுறைகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இதோ சில அணுகுமுறைகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இதே தகவல்
  • எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • நம்முடைய வெப் சைட் துண்டுப்பிரதியைப் பயன்படுத்துங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • இப்படி பேசிப் பாருங்கள்...
    நம் ராஜ்ய ஊழியம்—2015
  • இப்படிப் பேசலாம்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்-பயிற்சி புத்தகம்-2016
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2014
km 7/14 பக். 8

இதோ சில அணுகுமுறைகள்

வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குப் பதில் எங்கே கிடைக்கும்?

துண்டுப்பிரதியை வீட்டுக்காரரிடம் கொடுத்து இப்படிச் சொல்லுங்கள்: “இந்தத் துண்டுப்பிரதியை உலகம் முழுவதும் கொடுக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. நீங்களும் இதை படித்துப்பாருங்கள்.”

பூட்டப்பட்ட வீடுகளில் துண்டுப்பிரதிகளை வைக்கும்போது, அதை மற்றவர்களுடைய கண்களில் படாதபடி வைத்துவிடுங்கள், தேவையில்லாமல் அதை மடிக்காதீர்கள்.

ஊழியத்தில் நீங்கள் சந்திக்கும் நபர் ஆர்வம் காட்டினால், துண்டுப்பிரதியின் முன்பக்கத்தில் இருக்கும் கேள்வியைக் காட்டி அவருடைய கருத்தைக் கேளுங்கள். வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்குக் கடவுளுடைய வார்த்தை தரும் பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா என்று கேளுங்கள். பிறகு, அடுத்த பக்கத்திலுள்ள, சங்கீதம் 119:144, 160 வசனங்களைக் காட்டுங்கள். இந்தத் துண்டுப்பிரதியில், ஒரு வெப் சைட்-ஐ பற்றிய தகவல் இருப்பதாகச் சொல்லுங்கள். அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் திருப்தியான பதில்களைப் பைபிளிலிருந்து கண்டுபிடிக்க அது உதவுவதாகச் சொல்லுங்கள். முடிந்தால், “பைபிளை ஏன் படிக்க வேண்டும்?” என்ற வீடியோவைக் காட்டுங்கள். கடைசியாக, துண்டுப்பிரதியின் பின்பக்கத்திலுள்ள மூன்று கேள்விகளைக் காட்டுங்கள்; எந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்று கேளுங்கள். அடுத்த முறை வரும்போது, அதற்கான பதிலை jw.org-ல் எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுங்கள். அவரை மறுபடியும் சந்திக்கும்போது அதற்கான பதிலை, jw.org-ல் வெளியீடுகள் > புத்தகங்கள், சிறுபுத்தகங்கள் என்ற தலைப்பில் காட்டுங்கள். உங்கள் மொழி வெப் சைட்டில் இந்தப் பகுதி இல்லையென்றால் உங்கள் மொழியிலிருக்கும் ஆன்லைன் லைப்ரரியைக் காட்டலாம். அல்லது அவருடைய கேள்விக்கான பதில் நம் பிரசுரத்தில் வெளிவந்திருந்தால் அதைக் காட்டலாம்.

உங்களுடைய மண்டல மாநாட்டிற்கும் அழைப்பிதழ்களைக் கொடுத்து வருகிறீர்கள் என்றால், துண்டுப்பிரதியோடு அழைப்பிதழையும் சேர்த்துக்கொடுத்துவிட்டு, “நடக்கப்போகும் இலவச பொது நிகழ்ச்சிக்காகவும் உங்களை அழைக்கிறோம்” என்று சொல்லுங்கள்.

காவற்கோபுரம் ஜூலை – செப்டம்பர்

வார இறுதி நாட்களில், பொருத்தமான சமயத்தில் காவற்கோபுர பத்திரிகையைக் கொடுங்கள். அப்போது இப்படிச் சொல்லுங்கள்: “நீங்கள் விரும்பினால் எங்கள் பத்திரிகைகளையும் படித்துப் பார்க்கலாம். “புகைப்பழக்கம்—கடவுள் என்ன நினைக்கிறார்” என்ற தலைப்பில் இந்தக் காவற்கோபுரம் இருக்கிறது.”

விழித்தெழு! ஜூலை – செப்டம்பர்

வார இறுதி நாட்களில், பொருத்தமான சமயத்தில் விழித்தெழு! பத்திரிகையைக் கொடுங்கள். அப்போது இப்படிச் சொல்லுங்கள்: “நீங்கள் விரும்பினால் எங்கள் பத்திரிகைகளையும் படித்துப் பார்க்கலாம். “வாழ்வதற்கான மூன்று காரணங்களைப் பற்றி இந்த விழித்தெழு! பத்திரிகை சொல்கிறது. அதன் தலைப்பு, வாழ்க்கை வாழ்வதற்கே!”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்