டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 8-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 43; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 21, 22 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 1-5 (10 நிமி.)
எண் 1: யோசுவா 1:1–18 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பரிசுத்த ஆவி என்றால் என்ன?—நியாயங்காட்டி பக். 380 பாரா 3-பக். 381 பாரா 1 (5 நிமி.)
எண் 3: யாக்கோபு ஆரானுக்குப் போகிறார்—பைபிள் கதை 18 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: “உள்ளத்தில் புதைத்து வைத்திருக்கிற நல்ல விஷயங்களையே” பேசுங்கள்.—மத். 12:35.
10 நிமி: இந்த மாதம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்? பேச்சு. இந்த மாதத்திற்கான வசனத்தை விளக்குங்கள். (மத். 12:35) நமக்கு பைபிள் படிப்பு எடுத்தவர்கள், பைபிளில் இருந்து அவர்கள் தெரிந்துகொண்ட “நல்ல விஷயங்களை” நமக்கு சொல்லிக்கொடுத்தார்கள். (ஏப்ரல் 1, 2002 காவற்கோபுரம் பக். 16-17 பாரா. 5-7-ஐ பாருங்கள்.) அதேபோல், பைபிளில் இருந்து நாம் தெரிந்துகொண்ட “நல்ல விஷயங்களை” மற்றவர்களுக்கும் சொல்ல வேண்டும். (கலா. 6:6) மற்றவர்களுக்கு நாம் எப்படி இன்னும் நன்றாக சொல்லிக்கொடுக்கலாம் என்று இந்த மாசம் தெரிந்துகொள்ளப் போகிறோம். ஊழியக் கூட்டத்தில் இந்த மாதம் நாம் கற்றுக்கொள்ளப் போகிற “நல்ல விஷயங்களை” பற்றி இந்தப் பேச்சில் சொல்லுங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... பைபிள் படிப்பை நடத்தி காட்டுங்கள்.” கலந்தாலோசிப்பு. ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். முன்மாதிரியான பிரஸ்தாபி அல்லது ஒரு பயனியர் இந்த நடிப்பை செய்ய வேண்டும். நடிப்பில், பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருந்து அல்லது, நற்செய்தி சிறுபுத்தகத்தில் இருந்து பைபிள் படிப்பு எடுக்க வேண்டும்.
பாட்டு 96; ஜெபம்