டிசம்பர் 15-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
டிசம்பர் 15-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 72; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 23, 24 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: யோசுவா 6-8 (10 நிமி.)
எண் 1: யோசுவா 8:18–29 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: ஒருவருக்கு “பரிசுத்த ஆவி” இருப்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?—நியாயங்காட்டி பக். 381 பாரா 3-பக். 382 பாரா 2 (5 நிமி.)
எண் 3: பிசாசாகிய சாத்தான் மிக மோசமான எதிரி—எஸ்றா 4:1; நெ. 4:11; எஸ்தர் 7:6; யோபு 1:6-11; 2:1-5; எபே. 6:11, 12; 1 பே. 5:8, 9; யூதா 3 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: “உள்ளத்தில் புதைத்து வைத்திருக்கிற நல்ல விஷயங்களையே” பேசுங்கள்.—மத். 12:35.
15 நிமி: “நன்றாக பைபிள் படிப்பு எடுக்க...” கேள்வி-பதில். 3-வது பாராவை படித்து முடித்த பிறகு இரண்டு நடிப்பு இருக்கும். இரண்டு நடிப்பிலும், ஒரு பிரஸ்தாபி பைபிள் படிப்பு நடத்துவார். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருந்து (பக்கம் 148 பாரா 8) அல்லது, நற்செய்தி சிறுபுத்தகத்தில் இருந்து (பக்கம் 21-ல முதல் பாரா) படிப்பு நடத்துவார். முதல் நடிப்பில் பிரஸ்தாபியே நிறைய நேரம் பேசுவார். இரண்டாவது நடிப்பில், பைபிள் படிப்பவர் என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள கேள்விகளை கேட்பார்.
15 நிமி: சபைக்கு உதவும் உதவி ஊழியர்கள். (1 தீ. 3:13) இரண்டு உதவி ஊழியர்களை பேட்டி எடுங்கள். சபையில் அவர்களுக்கு என்னென்ன பொறுப்பு இருக்கிறது? அதற்காக அவர்கள் என்னெல்லாம் செய்கிறார்கள்? உதவி ஊழியர் ஆக அவர்கள் ஏன் ஆசைப்பட்டார்கள்? மூப்பர்களுக்கும், சபைக்கும் உதவி செய்வதை நினைத்து அவர்கள் ஏன் சந்தோஷப்படுகிறார்கள்?
பாட்டு 2; ஜெபம்