மார்ச் 9-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
மார்ச் 9-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 115; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 38 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 1-4 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 2:30-36 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: மேசியாவை பற்றி என்னென்ன தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இருக்கிறது?—அறிமுகம் பக். 10 (5 நிமி.)
எண் 3: ஆசா—தலைப்பு: யெகோவாவை மட்டும்தான் நாம் வணங்க வேண்டும்—2 நா. 14:1-15; 15:1-15 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘எல்லா விதமான நற்செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’—தீத்து 3:1.
10 நிமி: ‘எல்லா விதமான நற்செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’ இந்த மாதத்திற்கான வசனத்தின் அடிப்படையில் பேச்சு. இந்த பேச்சில் நீதிமொழிகள் 21:5, தீத்து 3:1, 1 பேதுரு 3:15 வசனங்களை படித்து விளக்குங்கள். முன்கூட்டியே தயாராக இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லுங்கள். இந்த நம் ராஜ்ய ஊழியத்தில் இருக்கிற சில கட்டுரைகளுக்கும் இந்த மாதத்திற்கான வசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சுருக்கமாக சொல்லுங்கள்.
10 நிமி: ஊழியப் பள்ளி கண்காணியை பேட்டி எடுங்கள். பள்ளி கண்காணியாக நீங்கள் என்னென்ன செய்ய வேண்டியிருக்கிறது? பள்ளியை நடத்துவதற்கு ஒவ்வொரு வாரமும் எப்படி தயாரிக்கிறீர்கள்? பள்ளியில் பேச்சு கொடுப்பவர்கள் ஏன் நன்றாக தயாரிக்க வேண்டும்? பள்ளியில் நடக்கப்போகிற விஷயங்களை எல்லாரும் முன்பே படித்துவிட்டு வரும்போது என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
10 நிமி: “நினைவு நாளுக்கு நீங்கள் தயாரா?” கலந்தாலோசிப்பு. மார்ச் 2013 நம் ராஜ்ய ஊழியத்தின் 2-வது பக்கத்தில் இருக்கிற விஷயங்களை பற்றியும் சுருக்கமாக சொல்லுங்கள். நினைவு நாள் நிகழ்ச்சிக்கு புதிதாக வந்திருக்கிற ஒருவரிடம் ஒரு பிரஸ்தாபி பேசுவது போல் ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 8; ஜெபம்