ஏப்ரல் 6-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஏப்ரல் 6-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 42 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 16-18 (8 நிமி.)
எண் 1: 1 சாமுவேல் 18:17-24 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: நமக்கு வரும் கஷ்டங்களுக்கு கடவுள்தான் காரணமா?—அறிமுகம் பக். 14 பாரா. 1-4 (5 நிமி.)
எண் 3: பாராக்—தலைப்பு: தைரியமாக இருங்கள், மற்றவர்கள் உங்களை புகழ வேண்டும் என்று ஆசைப்படாதீர்கள்—நியா 4:1-24; 5:9-31; எபி 11:32-34 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாசத்துக்கான வசனம்: ‘எல்லா விதமான நற்செயல்களையும் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.’—தீத்து 3:1.
10 நிமி: ஏப்ரல் மாதத்தில் பத்திரிகைகளை கொடுங்கள். கலந்தாலோசிப்பு. முதலில், ஏப்ரல்-ஜூன் காவற்கோபுரத்தை எப்படி ஊழியத்தில் கொடுக்கலாம் என்று நடித்து காட்ட ஏற்பாடு செய்யுங்கள். (என்ன பேச வேண்டும் என்று இதே பக்கத்தில் இருக்கிறது.) நடிப்பு எப்படி இருந்தது என்று கலந்தாலோசியுங்கள்.
10 நிமி: எப்படி செய்தோம்? கலந்தாலோசிப்பு. “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட—பத்திரிகை மார்க்கம்” என்ற கட்டுரையில் சொல்லியிருப்பது போல் செய்ததால் என்ன பலன் கிடைத்தது என்று கேளுங்கள். நல்ல அனுபவங்கள் இருந்தால் சொல்ல சொல்லுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
பாட்டு 106; ஜெபம்