ஜூலை 13-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
ஜூலை 13-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 68; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 59 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 இராஜாக்கள் 9-11 (8 நிமி.)
எண் 1: 1 இராஜாக்கள் 9:24–10:3 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: கவலைகளை மறக்க பைபிள் நமக்கு உதவும்—அறிமுகம் பக். 24 பாரா 4–பக். 25 பாரா 2) (5 நிமி.)
எண் 3: கோரேசு—தலைப்பு: கடவுள் சொல்வது நிச்சயமாக நடக்கும்—ஏசா. 44:26–45:7 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடர்களாக்குங்கள்.’—மத். 28:19, 20.
13 நிமி: நீங்கள் புறப்பட்டுப் போய் சீடர்களாக்குங்கள். இந்த மாதத்திற்கான வசனத்தை சார்ந்த பேச்சு. “என்னைப் பின்பற்றி வா” புத்தகத்தில் 87-89-ல் உள்ள விஷயங்களையும் சொல்லுங்கள். இந்த மாதத்திற்கான வசனத்தோடு, இந்த மாத ஊழியக் கூட்டத்தில் இருக்கும் பகுதிகள் எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது என்று சொல்லுங்கள்.
17 நிமி: “சீடர்களாக்குவது ரொம்ப முக்கியமான வேலை.” கேள்வி-பதில். பைபிள் படிப்பு ஆரம்பிப்பதிலும் நன்றாக நடத்துவதிலும் திறமையானவர்களாக இருக்கும் ஒன்று அல்லது இரண்டு நபர்களை பேட்டி எடுங்கள். யெகோவாவை பற்றி மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும்போது அவர்களுக்கு கிடைக்கிற சந்தோஷத்தை பற்றி கேளுங்கள்.
பாட்டு 16; ஜெபம்