பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 6-8
புதிய கிறிஸ்தவ சபை சோதிக்கப்படுகிறது
புதிதாக ஞானஸ்நானம் எடுத்திருந்த கிரேக்க மொழி பேசிய விதவைகள், எருசலேமிலேயே ரொம்ப நாள் தங்கியிருந்தார்கள். அந்தச் சமயத்தில், அவர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டார்கள். அந்த அநீதியை நினைத்து அவர்கள் இடறல் அடைந்தார்களா அல்லது நிலைமையை யெகோவா சரிசெய்வார் என்று பொறுமையோடு காத்திருந்தார்களா?
ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்ட சமயத்தில், எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்தார்கள். அதனால், யூதேயா மற்றும் சமாரியா முழுவதிலும் சிதறிப்போக வேண்டிய நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இருந்தாலும், ஊழியம் செய்வதில் அவர்கள் மந்தமாகிவிட்டார்களா?
யெகோவாவின் உதவியோடு புதிதாக உருவான கிறிஸ்தவ சபை நிலைத்திருந்தது; தொடர்ந்து வளர்ந்தது.—அப் 6:7; 8:4.
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு வரும் சோதனைகளை நான் எப்படிச் சமாளிக்கிறேன்?’