தலைப்பு பக்கம்/ பிரசுரிப்போர் பக்கம்
யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2010
2009 ஊழிய ஆண்டு அறிக்கை-உள்ளே
இது என்னுடைய புத்தகம். என் பெயர் ...................................
அன்பு எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது.’—1 கொரிந்தியர் 13:7, 8.
இந்த “கடைசி நாட்களில்” அதிகமதிகமான மக்கள் “சுயநலக்காரர்களாக, பண ஆசைபிடித்தவர்களாக, . . . கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1-4) யெகோவாவைச் சேவிப்பவர்கள் அவர்களுக்கு நேர்மாறாக இருப்பது மனதுக்கு எவ்வளவு புத்துணர்ச்சி அளிக்கிறது! கடவுளுடைய வார்த்தையை அறிவிக்க அன்பே நம்மைத் தூண்டுகிறது. ‘எல்லாருக்கும் நன்மை செய்ய’ அன்பே நம்மை உந்துவிக்கிறது. (கலா. 6:10) கிறிஸ்துவின் உண்மையுள்ள சீடர்களாக அன்பே நம்மை அடையாளம் காட்டுகிறது.—யோவா. 13:35.
யெகோவாவும் அவருடைய அன்பு மகன் இயேசு கிறிஸ்துவும் நமக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து அவர்களிடம் நாம் தொடர்ந்து அன்பை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானது! நம்முடைய சகோதரர்களிடமும் இன்னும் யெகோவாவை அறியாத ஆட்களிடமும் மேன்மேலும் அன்பு காட்டுவதுகூட முக்கியமானது. நமக்குச் சோதனைகள் வருமென்றாலும் அவற்றைச் சகித்துக்கொள்ள அன்பு உதவும். அன்பு என்ற அருமையான பண்பை அதிகமதிகமாக வளர்த்துக்கொள்ள 2010-ன் வருடாந்தர வசனம் நமக்கு எப்போதும் நினைப்பூட்டுவதாக!
[பக்கம் 2-ன் படங்களுக்கு நன்றி]
படங்களுக்கு நன்றி: பக்கம் 66: சைக்கிளில் செல்லும் வியாபாரி: FAO Photo/K. Dunn; பக்கம் 200: ஜாகுவார் சிறுத்தைப் புலி: Jaguar: © Lynn Stone/Index Stock/age fotostock; மாயா நாகரிகத்தின் சிதிலங்கள்: © Jane Sweeney/Robert Harding Picture Library/age fotostock