காட்டுத் தேன்
காட்டுத் தேனீக்கள் கட்டுகிற ஒரு கூட்டின் படமும் (1), தேன் நிறைந்த ஒரு கூட்டின் படமும் (2) இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. யோவான் சாப்பிட்ட தேன், அந்தப் பகுதியில் வாழும் ஒரு வகையான காட்டுத் தேனீக்களின் (ஆப்பிஸ் மெல்லிஃபெரா சிரியாக்கா) கூட்டிலிருந்து கிடைத்திருக்கலாம். யூதேயா வனாந்தரத்தின் வெப்பமான, வறண்ட சீதோஷ்ண நிலையை அந்தத் தேனீக்கள் நன்றாகத் தாக்குப்பிடிக்கின்றன. ஆனால், அவை ஆக்ரோஷமாகத் தாக்கும் என்பதால் அவற்றை மனிதர்களால் வளர்க்க முடியாது. இருந்தாலும், இஸ்ரவேலில் வாழ்ந்த மக்கள் ரொம்பக் காலத்துக்கு முன்பே, அதாவது கி.மு. ஒன்பதாம் நூற்றாண்டிலேயே, களிமண் உருளைகளில் தேனீக்களை வளர்த்தார்கள். இப்படிப்பட்ட நிறைய தேன்கூடுகளின் எஞ்சிய பகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்த ஒரு நகர்ப்புறப் பகுதியின் (இன்று டெல் ரெஹோவ் என்று அழைக்கப்படும் பகுதியின்) நடுவிலிருந்து அவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கூடுகளில் இருந்த தேன், வேறொரு இடத்திலிருந்து (இன்றைய துருக்கியிலிருந்து) இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகையான தேனீக்களால் உற்பத்தி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
சம்பந்தப்பட்ட வசனங்கள்: