உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g86 6/8 பக். 3-4
  • ஐ.நா.—ஒரு மனிதனின் தரிசனம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஐ.நா.—ஒரு மனிதனின் தரிசனம்
  • விழித்தெழு!—1986
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஐ.நா.-வும் சர்ச்சுகளும்
  • ஐ.நா.—அது நாடுகளை ஐக்கியப்படுத்தியிருக்கிறதா?
    விழித்தெழு!—1986
  • ஐ.நா.—சமாதானத்துக்கான கடவுளுடைய வழியா?
    விழித்தெழு!—1986
  • போப்பின்—ஐநா விஜயம் அது எதை நிறைவேற்றினது?
    விழித்தெழு!—1996
  • ஒரு வியப்பூட்டும் இரகசியம் தெளிவாக்கப்பட்டது
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
மேலும் பார்க்க
விழித்தெழு!—1986
g86 6/8 பக். 3-4

ஐ.நா.—ஒரு மனிதனின் தரிசனம்

ஆல்பர்டினா, நான்கு என்ஜின்களைக் கொண்ட DC-6B விமானம், ஆப்ரிக்க வனங்களுக்கு மேல் மிகவும் தாழ பறந்தது. ஸாம்பியா என்று அழைக்கப்படும் வடக்கு ரொடீஷியாவின் நடோலா விமான நிலையத்தை சற்று முன்புதான் கடந்து வந்தது. அதில் பயணம் செய்த 16 பேரில் ஒருவர் அந்த சமயத்தில் உலக பிரசித்தி பெற்ற முக்கியமான நபராயிருந்தார்.

இருள் சூழ்ந்துவிட்டது, விமான ஓட்டி விமானத்தை இறக்குகிறதற்காக அதைத் திருப்புகிறான். “ஒரு சில நிமிடங்கள் கழிந்தன, விமானத்தின் விசிறிகள் மரங்களின் உச்சிக் கிளைகளை முறித்தன . . . விமானத்தின் இறக்கைகளின் முனை சிதைந்தது, சில வினாடிகளுக்குள் அவை முற்றிலும் நாசமடைந்தன . . . அந்த வனங்களின் மரக்கிளைகள் முறிந்த அந்த நிலைக்குக் கீழே சுமார் எண்ணூறு அடிகள் ஆல்படீனாவின் இடது இறக்கை தாழ இருந்த ஒரு எறும்புப் புற்றில் பட்டு சிதறியது. விமானமோ இடது பக்கமாக சுழன்று சுழன்று தரையைத் தொட்டதும், அது வந்த திசையை நோக்கியவாறு கொழுந்துவிட்டு எறிந்து சாம்பலாயிற்று.”

மீட்புப் பணியாட்கள் நொறுங்கிய விமானத்தை வந்தடைந்தனர். அதில் எறிந்து இறந்துகிடந்த 14 பேரின் சடலத்தைக் கண்டெடுத்தனர். அந்த விபத்தைத் தப்பிய ஒருவரோ ஐந்து நாட்கள் உயிருடன் இருந்து பின்பு மரித்தார். அந்த நொறுங்கிய விமானத்திலிருந்து ஒரு சில அடிகள் தள்ளி முறிந்த நிலையில் இருந்ததுதான் ஐக்கிய நாடுகளின் தலைமைக் காரியதரிசியின் உடல்—டேக் ஹாமர்ஸ்கோல்ட். திருவாளர் ஐ.நா. என்று சிலரால் அழைக்கப்பட்ட உலகப் புகழ் வாய்ந்த பொதுநலத் தொண்டர் காலமானார்—ஆர்த்தர் ட. கேவ்ஷன் எழுதிய டேக் ஹாமர்ஸ்கோல்டின் மரணம் ஒரு புதிர், (ஆங்கிலம்).

ஐ.நா.-வும் சர்ச்சுகளும்

டேக் ஹாமர்ஸ்கோல்டின் மரணம் உலகத்துக்கே அதிர்ச்சியாயிருந்தது. தலைமைக் காரியதரிசியின் ஸ்தானத்தில் தன்னைத் திறமைபடைத்தவராக நிரூபித்து வந்த புத்திக்கூர்மையுடைய இந்தத் தனிமனிதனின் தலைமை இழந்த ஐ.நா. எப்படி தொடர்ந்து செயல்படும் என்று சிலர் யோசிக்கவும் செய்தனர்.

டேக் ஹாமர்ஸ்கோல்ட் ஒரு கிறிஸ்தவ மறைஞானி என்று விவரிக்கப்பட்டிருக்கிறார். தன்னுடைய வாழ்க்கையை ஐ.நா. சபையிலேயே முடிக்க வேண்டும் என்பதற்காகக் கடவுள் தன்னை அழைத்திருப்பதாகத் தான் நம்பினதையே அவருடைய எழத்துக்கள் காண்பிக்கின்றன. சர்ச் தொகுதியினிடம் பேசும்போது, கடவுள் பேரிலுள்ள விசுவாசமும் ஐ.நா.-வின் மேலுள்ள விசுவாசமும் இனைந்து செல்ல வேண்டும் என்று கூறினார். ஒரு சமயம் அவர் குறிப்பிட்டாதவது: “பூமியில் சமாதானத்தை நிறுவதற்காக மக்களுடைய மத நம்பிக்கையும் வழிபாடும் என்னவாக இருந்தபோதிலும், தற்பிரியமுள்ள அனைத்து மக்களின் முயற்சிகளிலும் பங்குபெறுகிறவர்களாக [ஐ.நா.] சபையும் சர்ச்சுகளும் பக்கம் பக்கமாக நிற்கின்றன.” அவர் தொடர்ந்து உரிமை பாராட்டியதாவது: “தன்மையிலும் உத்தரவாதத்திலும் எவ்வளவு வித்தியாசம் இருந்தபோதிலும், பக்கம் பக்கமாக நின்று செயல்படுவதற்கு சர்ச்சுகளும் ஐக்கிய நாட்டு சங்கமும் தங்களுக்கிடையே பொதுவாக ஒரு இலட்சியத்தையும் செயல்படுவதற்காக ஒரு பொது நிலையையும் கொண்டிருக்கின்றன.”

டேக் ஹாமர்ஸ்கோல்ட் ஐ.நா. கட்டிடத்தின் பொதுமக்கள் கூடத்தில் ஒரு தியான அறையையும் திட்டமிட்டார். இந்தக் கூடம் முகமதியர், யூதர், கத்தோலிக்கர், புராட்டஸ்டான்டினர் ஆகிய பல தொகுதியினரிடமிருந்து கிடைத்த வசூலிப்பைக் கொண்டு கட்டப்பட்டது. அந்தத் தியான அறையின் மத்தியில் நன்கு மெருகிடப்பட்ட ஒரு இருப்புக் கல் இருந்தது, மற்றும் ஒரு மெல்லிய ஒளிக் கதில் அந்தக் கல்லின் மீது வீசிய நிலையில் இருந்தது.

ஹாமர்ஸ்கோல்ட் அந்த இரும்புக் கல்லை எப்படி நோக்கினார்? அவர் எழுதியதாவது: “அதை நாம் ஒரு வெறுமையான பீடமாக பார்க்கக்கூடும். காரணம் கடவுள் இல்லை என்பதால் அல்ல, அல்லது அறியப்படாத கடவுளுக்கு ஒரு பீடமாக இருப்பதால் அல்ல, ஆனால் பல பெயர்களில் பல ரூபத்தில் வணங்கப்பட்டு வரும் கடவுளுக்கு அது அற்பணிக்கப்பட்டிருப்பதால் அப்படியாகும்.”

பல கோடி மக்கள் கடவுளை நம்புகின்றனர். அவர்களில் அநேகர், ஜான் XXIII, பால் VI மற்றும் ஜான் பால் II ஆகிய போப்புகளும், புராட்டஸ்டான்ட் குருவர்க்கமும் இந்தச் சமாதான சங்கத்திற்குத் தங்கள் ஆதரவைக் கொடுத்து வந்திருப்பதையும் பார்த்திருக்கின்றனர். வத்திக்கான் ஐ.நா.-வுக்கென்று ஒரு நிரந்தர பிரதிநிதியையும் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட மத ஆதரவு இருப்பதால், பூமிக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவருவதற்கு ஐ.நா. சபை கடவுள் வகுத்த வழியாக இருக்கக்கூடும் என்று சிலர் நம்புகின்றனர். இப்பொழுதும்கூட அவர்கள் 1986-ம் வருடத்தை ஐ.நா.-வின் “சர்வதேச சமாதான ஆண்டாகக்” கைகொள்கின்றனர்.

பூமியில் சமாதானத்தை நிலைநாட்ட ஐ.நா. கடவுளுடைய வழியாக இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா? இந்த அமைப்பின் 40 ஆண்டு கால சரித்திரம், கடவுளுடைய ஆசீர்வாதம் அதன் மீது இருக்கிறது என்பதற்கு அத்தாட்சி அளிக்கின்றனவா? ஐ.நா. சபை உலக தேசங்களை உண்மையிலேயே சமாதானத்தில் ஒற்றுமைப்படுத்தியிருக்கின்றனவா?

(g85 10/22)

[பக்கம் 3-ன் படம்]

டேக் ஹாமர்ஸ்கோல்ட் ஐ.நா.-வுக்கு சர்ச்சுகளின் ஆதரவை நாடினார்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்