புற்றுநோய் என்பது என்ன? எதனால் அது வருகிறது?
ஒருவேளை பொருத்தமாகவே ஆண்டுகள் பலவற்றினூடாக, “புற்றுநோய்” என்ற வார்த்தை கடுமையான எதிர்மறையான பொருளைத் தேடிக்கொண்டிருக்கிறது. “சாவில் கொண்டுவிடுகிற, படிப்படியாக வளர்கிற புற்றுநோய்” போன்ற சொற்றொடர்கள், அநேகரை இந்த வார்த்தைக்கும் அதன் உண்மையான உட்பொருளுக்கும் தங்கள் மனங்களை மூடிக்கொள்ளும்படியாக செய்துவிட்டிருக்கிறது.
என்றாலும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில், அது வெளிப்படையாகப் பேசப்படும்போது, பயம் கொஞ்சம் குறைந்துவிடுகிறது. எப்போதும் அது “சாவுக்கேதுவாக” இருப்பதற்குப் பதிலாக அது அநேகமாக “குணப்படுத்தப்படக்”கூடியதாகிறது. எப்பொழுதும் அது “பரவுவதற்கு” பதிலாக, ஓரிடத்தில் இருக்கும்போதே அநேகமாக அதை நீக்கிவிட முடிகிறது. ஆகவே உண்மையில் புற்றுநோய் என்பது என்ன? அது எதனால் வருகிறது?
பிரிட்டிஷ் தேசத்து நிபுணர்கள் சர் ரிச்சர்ட் டாலும் ரிச்சர்ட் பீட்டோவும் விளக்குகிறார்கள்: “மனித உடலை ஒன்றுபட்டு உருவாக்கும் அநேக உயிரணுக்களில் ஒன்று மாற்றத்திற்குள்ளாகி, ஒவ்வாத வகையில் தன்னைத்தானே பெருக்கிக்கொண்டு விடுவதுதானே பல்வேறு புற்றுநோய்களாக இருக்கிறது. இது அதேவிதமாக பாதிக்கப்பட்ட தன் வழியில் தன்னைத்தானே பெருக்கிக்கொள்ளும் இலட்சக்கணக்கான உயிரணுக்களை உண்டுபண்ணுகிறது. இவைகளில் சில உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவி கடைசியாக அதை மேற்கொண்டுவிடுகிறது.”—புற்றுநோய்க்கான காரணங்கள்.
ஏன் என்பதே இப்பொழுது எழும் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது? சில உயிரணுக்கள் இயல்பான வார்ப்பிலிருந்து சிதறி நிலையில் வேறுபட்டு பெருகுவதற்குக் காரணமென்ன?
உங்களுடைய வாழ்க்கை முறை வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறதா?
புற்றுநோய் ஆராய்ச்சியின் இந்தக் கட்டத்தில் மருத்துவர்கள் புற்றுநோய் கொள்ளைநோய்க்கு முழுமையான ஒரு பதிலைக் கண்டுபிடிப்பதற்கு மிகத்தொலைவு இன்னும் செல்ல வேண்டும். அது அதிகரித்து வருகிறது என்ற உண்மையை மருத்துவர்கள் ஜான் சி. பேய்லர் III மற்றும் எலேன் M. ஸ்மித் உறுதி செய்கிறார்கள். சமீபத்தில் தி நியு இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிஸனில் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்: “1973 முதல் 1981 வரையாக எல்லா விதமான [புற்றுநோய்களின்] முடிவுறாத சம்பவ அளவின் வீதம் 13.0 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. . . . மொத்தத்தில் புற்றுநோய் குறைந்துவருகிறது என்று நினைப்பதற்கு எந்தக் காரணமுமில்லை.”
பெரும் அளவில் புற்றுநோய் நிபுணர்கள் புற்றுக்கழலைக்கு போதிய சிகிச்சையைக் கண்டுபிடிப்பதற்கான தேவைக்கும், உண்மையான காரணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலம் அதைத் தடுப்பதை ஊக்குவிப்பதற்குமான தேவைக்குமிடையே சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள். காரணங்களை ஆராய்கையில் இது சிக்கலான வித்தியாசமான கருத்துக்களுக்கு வழிநடத்துகிறது—காரணம் கிருமிகளில், ஜீன்களில், எதிர்ப்பு சக்தியில், வேதியற் பொருட்களில், சுற்றுப்புறச் சூழலில், உடலிலுள்ள நச்சுப்பொருட்களில் இருக்கிறதா அல்லது இவை இணைவதாலா? அல்லது வேறு எதிலாவது இருக்கிறதா? ஒரு உயிரணு எந்தப் புறவளர்ச்சியினால் புற்றுக்கழலையாக மாறி பின்னர் இடம் பெயர்ந்து செல்கிறது?
புற்றுநோய் நிபுணர் பேராசிரியர் ஸ்டீபன் டானிபெர்ஜர் இவ்விதமாகச் சொன்னார்: “இது பல்வேறு கட்டங்களை உட்படுத்தும் ஒரு புறவளர்ச்சி என்பது இப்பொழுது ஊர்ஜீதமாகிவிட்ட உண்மையாகும். குறிப்பிட்ட ஒரு பிறப்பு மூல அமைப்பைக் கொண்ட இயல்பான நிலையிலுள்ள ஒரு உயிரணு, பல்வேறு காரணகூறுகளின் செல்வாக்கின்கீழ் ஒரு கழலையாக மாறுகிறது. கிருமிகளும், மின்காந்த அலைகளும், இரசாயண பொருட்களும் பல்வேறு காரண கூறுகளில் அடங்கும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இப்படிப்பட்ட பல்வேறு காரணகூறுகளின் பின்னிய செயல்விளைவுகளினால்தானே பல கட்டங்களையுடைய வளர்ச்சியில் புற்றுநோய் உயிரணு உண்டாகிறது என்று சொல்வது சரியாக இருக்கும்.”—பிரிஸ்மா.
அன்றாட வாழ்க்கையில் இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? அமெரிக்க புற்றுநோய் சங்கத் தலைவர் டாக்டர் சார்லஸ் A. லிமேஸ்திரியின் பிரகாரம், அன்றாட வாழ்க்கையில் நம்முடைய பழக்கவழக்கங்களுக்கும் புற்றுநோய் காரணங்களுக்கும் சம்பந்தமிருக்கிறது. அவர் சொன்னார்: “நம்முடைய அன்றாட பழக்கவழக்கங்கள்—நாம் என்ன சாப்பிடுகிறோம், குடிக்கிறோம், நாம் புகைப்பிடிக்கிறோமா, எவ்வளவு நேரம் வெயிலில் இருக்கிறோம் என்பவை அநேக புற்றுநோய்களால் நாம் தாக்கப்படும் அபாயத்தைத் தீர்மானிப்பதாக இருக்கும் என்பதாக இப்பொழுது அநேக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.”—எபோனி பத்திரிகை.
இந்தக் கருத்து, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சி நிபுணர்கள் டால் மற்றும் பீட்டோவினால் உறுதி செய்யப்படுகிறது. அவர்கள் சொல்வது: “மனிதனின் ஏறுமாறான நடத்தைப் போக்கை கூர்ந்து கவனிப்பது, ஆய்வு கூடத்தில் ஆராய்ச்சி செய்பவரின் மனதுக்கு ஒருபோதும் வரமுடியாத கருத்துக்களைக் குறிப்பாக தெரிவிக்கிறது. உண்மையில் நிலக்கரி எரியும்போது கிடைக்கும் விளைபொருட்கள், சூரியஒளி, ஊடுகதிர் கல்நார் இன்னும் அநேக இரசாயண ஏஜென்டுகளுக்கு உட்படும்போது, இதோடு சம்பந்தப்பட்ட அபாய நேர்வுகளை மிக நுட்பமாக குறிப்பிடுவதன் மூலம், எல்லா புற்றுநோய் ஆராய்ச்சியையும் அவர்களே துவக்கி வைத்திருக்கிறார்கள். வெற்றிலை, புகையிலை மற்றும் சுண்ணாம்பின் பல்வேறு கலவைகளைச் சவைத்தலோடும், புகைப்பிடித்தலோடும் கூட சம்பந்தப்பட்ட ஆபத்துகளுக்கு அவர்கள் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள்.”
வாழ்க்கை முறைகளும் சுற்றுப்புறச் சூழலும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுவதன் காரணமாக, சில தேசங்களில், ஒருசில வகை புற்றுநோய்கள் அதிகமாகவும் மற்றவை குறைவாகவும் இருப்பது சாத்தியமாக இருக்கிறது. உதாரணமாக, புகையிலையை பல பத்தாண்டுகளாக உபயோகித்து வரும் இங்கிலாந்து, நுரையீரல் புற்றுநோயில் முதன்மையாக இருக்கிறது. புகையிலை உபயோகத்தில் சிக்கிக்கொள்ளாத நைஜீரியாவில் தற்போது இந்நோய் வெகு குறைவாகவே இருக்கிறது. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள கனெக்டிக்கட் பெருங்குடல் மற்றும் நீர்ப்பை புற்றுநோயில் முதன்மையாகவும் நைஜீரியாவில் இது மிகக்குறைவாகவுமே இருக்கிறது.
வாழ்க்கைமுறை எவ்விதமாக புற்றுநோய்க்குச் சாதகமாக இருக்கக்கூடும் என்பதற்கு மற்றொரு உதாரணம், சாதாரணமாக அபூர்வமாக தசைநாரின்மேல் வரும் புற்றுநோயாகும். இது கப்போஸிஸ் சார்கோமா என்றழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் ஏய்ட்ஸினால் தாக்கப்பட்ட ஆண்புணர்ச்சிக்காரர்களுக்கு இது வந்திருக்கிறது. ஏய்ட்ஸ் நோயாளியின் வியாதி, தடைகாப்பு அமைப்பை பலவீனபபடுத்திவிடுவதால் இது, அவன் நோய் நுண்மங்களால் தாக்கப்படுவதற்கும் இந்தத் தசைநார் புற்றுநோய்க்கும் வழிநடத்துகிறது.
புற்றுநோய்க்கு, சாத்தியமான கூடுதலான ஒரு காரணத்தைக் கலிபோர்னியா மருத்துவப் பள்ளி பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் கென்னத் R. பெலட்டியர் சுட்டிக்காண்பிக்கிறார்: “அழுத்தம், மனசோர்வு இன்னும் மற்ற மன இயல் சமுதாயக் காரணிகள் புற்றுநோய் போன்ற வியாதிகள் வருவதைத் தடுக்கக்கூடிய அல்லது அது பரவுவதை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு உறுப்பின் திறமையைப் பலவீனப்படுத்திவிடுகிறது என்பதை எண்ணற்ற மிருக மற்றும் மனித பரிசோதனை ஆராய்ச்சிகள் காண்பித்திருக்கின்றன.—ஹோலிஸ்டிக் மெடிஸன்.
மிதமிஞ்சிய அழுத்தம் ஒருவரின் நோய் தடைகாப்பு அமைப்பைப் பாதித்து, அவரை புற்றுநோயினாலும் மற்ற நோய்களினாலும் தாக்கப்படும் நிலையில் வைத்துவிடலாம் என்பது மற்ற மருத்துவர்களின் கருத்தாகவும் கூட இருக்கிறது. இப்பொழுது புற்றுநோய்க்கான அதிக தெளிவான காரணங்களில் சிலவற்றை அருகாமையில் பார்ப்போம்.
புகையிலை—ஒரு கொடிய எதிரி
பல பத்தாண்டுகளாக, புகையிலை புற்றுநோயோடு சம்பந்தப்படுத்தப்பட்டு வருகிறது. ஆகவே பின்வரும் செய்தி குறிப்பை வாசிக்கையில் அது பெரிதும் ஆச்சரியத்தைத் தருவதாக இல்லை: “உலக சுகாதார அமைப்பு, புகையிலை உபயோகத்தால் ஆண்டுதோறும் சுமார் பத்து இலட்சம் ஆட்கள் உயிரிழக்கிறார்கள் என்ற ஒரு அறிக்கையை குறிப்பிட்டு புகைப்பிடித்தலையும், புகையிலை உபயோகத்தையும் பலமாக கண்டனம் செய்திருக்கிறது.” தி நியு யார்க் டைம்ஸில் வெளியாகியிருந்த இந்தச் செய்தி குறிப்பு தொடர்ந்து பின்வருமாறு சொன்னது: “புகைப்பிடித்தலே 90 சதவிகித நுரையீரல் புற்றுநோய்க்கும், 75 சதவிகித நாள்பட்ட மார்பு சளிக்கும் மற்றும் சீழ்க்கட்டிகளுக்கும் 25 சதவிகித இருதய நோய்க்கும் மற்ற விதமான புற்று நோய்களுக்கும், கருவுற்ற நிலையில் சிக்கல்களுக்கும், மூச்சு சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் காரணமாயிருக்கின்றது.”
புகையிலை, புற்றுநோயில் அத்தனை முக்கிய பங்கை வகிப்பதன் காரணமாக, டெக்ஸாஸ் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் டாக்டர் பைரன் J. பேய்லி புகைப்பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாதலை டுபேக்கோயிஸம் என்று அழைக்க வேண்டும் என்றும், அதன் விளைவை புற்றுநோய் என்றும் சொல்கிறார். JAMA-வில் (அமெரிக்க மருத்துவ சங்க பத்திரிகை) அவர் பின்வருமாறு எழுதினார்: “புகை பிடிக்கும் பழக்கம் இன்று ஐக்கிய மாகாணங்களில் [உலகில்] மிக கொடிய ஒரு பழக்கமாக இருக்கிறது என்பதையும், கொக்கேன், ஹீராயின், ஏய்ட்ஸ், சாலை விபத்துகள், கொலை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் ஆகியவற்றால் மொத்தமாக உயிரிழப்பவர்களைவிட இதனால் உயிரிழப்பும் பணச்செலவும் அதிகமாக இருப்பதையும் நாம் உணர வேண்டும்.”
ஆனால் இப்பொழுது உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கான ஆட்கள் விரும்பி பயன்படுத்திவரும் “புகையில்லாத புகையிலை” மூக்குப்பொடி, புகையிலை மெல்லுவது ஆகியவற்றைப் பற்றி என்ன? தி நியு இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிஸனின் அறிக்கையின்படி “இந்தியாவிலும் மத்திய ஆசியாவின் சில பகுதிகளிலும், தென் கிழக்கு ஆசியாவிலும் வாய் புற்றுநோய் ஐக்கிய மாகாணங்களைவிட அதிகமாக காணப்படுகிறது. உண்மையில் அந்தப் பகுதியில் இதுவே அதிகமாக வரும் புற்றுநோயாக இருக்கிறது.” அறிக்கை தொடருகிறது: “வாய் வழியாக புகையில்லாத புகையிலையைத் தனியாகவோ அல்லது பாக்கு, வெற்றிலை மற்றும் சுண்ணாம்போடு சேர்த்தோ உட்கொள்வது வாயில் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாய நேர்வை வெகுவாக அதிகரிப்பது காண்பிக்கப்பட்டிருக்கிறது.”
புகையிலையும் சாராயமும்—தொடர்பிருக்கிறதா?
புகையும் பிடித்து குடியும் குடிப்பதைப் பற்றி என்ன சொல்லப்படலாம்? சாராயமும் புகைப்பிடித்தலும் “ஒன்றன் மீதொன்று செயலாற்றி, ஒவ்வொன்றும் மற்றொன்றின் பாதிப்புகளை மிகுதியாக்குகிறது என்பதாக மருத்துவர்கள் டாலும் பீட்டோவும் உறுதியாகச் சொல்கிறார்கள். சாராயம் புற்றுநோயை உண்டுபண்ணக்கூடும் என்று அறுபது ஆண்டுகளாகவே சந்தேகிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஏனென்றால் அதிக அளவில் சாராயம் குடிப்பதை ஊக்குவிக்கும் தொழில்களில் உள்ளவர்களின் மத்தியில் வாயில், தொண்டையில், குரல் வளையில் மற்றும் உணவுக் குழாயில் புற்றுநோய் மிகவும் சர்வசாதாரணமாக இருப்பது காண்பிக்கப்பட்டிருக்கிறது.”
இந்த முடிவை ஜெர்மனியில் புற்றுநோய் நிபுணர் பேராசிரியர் டேனிபர்ஜர் உறுதி செய்கிறார். அவர் சொன்னார்: “புகைப் பிடித்தலும் மிதமிஞ்சிய குடியும் பிரதானமான அபாய நேர்வு காரண கூறுகளாகும் . . . ஒரு நபரின் வாழ்க்கை முறைக்கும் புற்றுநோய் ஏற்படுவதற்கும் ஒரு காரணதொடர்பான உறவு இருக்கிறது என்ற உண்மையைத் தட்டிக்கழித்துவிட முடியாது.”
“தீங்கற்ற” கொலையாளிகள்
லட்சக்கணக்கான ஆட்கள் ஆண்டுதோறும் அதிகமாக மகிழ்ந்து அனுபவிக்கக்கூடியதும் தீங்கற்றதாகவும் தோன்றக்கூடிய ஒரு கொலையாளி சூரிய ஒளிக்கதிர்களாகும். அநேகர் இதனால் தாக்கப்பட தங்களை அனுமதிக்கிறார்கள். என்றபோதிலும் அளவுக்கு அதிகமாக வெயிலில் காய்வது, விசேஷமாக பருவ வயதில் அதனால் மோசமான கொப்பளங்கள் ஏற்படுமேயானால், கரும் புற்றுநோய் என்ற தோல் புற்றுநோய்க்கு சாதகமாக இது இருக்கக்கூடும். மருத்துவ ஏடு ஒன்று விளக்கும் விதமாகவே: “வெயில் படாத தோல் திடீரென்று சூரிய ஒளியினால் தாக்கப்படுமேயானால், அபாய நேர்வு அதிகமாக இருக்கும்.”—புற்று நோய்க்கான காரணங்கள்
இந்தக் காரணம் அற்பமாக கருதப்படக்கூடாது. ஏனென்றால் ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே, இந்த வருடம் 23,000 புதிய புற்றுநோயாளிகளும் 5,600 சாவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது. எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், மென்மையான மேனி நிறம், நீல நிறக் கண்கள், பொன்னிற அல்லது சிவந்த மயிர் மற்றும் வெயில் வெப்பத்தினால் ஏற்படும் கன்றிய பொட்டுக்களை உடலில் உடையவர்கள்.
மருத்துவ பரிசோதனையில் அளவுக்கு மீறிய ஊடுகதிர் நிழற்படங்களை எடுத்தல், புற்று நோய்க்கு மற்றொரு “தீங்கற்ற” காரணமாக இருக்கக்கூடும். உதாரணமாக, “வேறு எந்த வகையான கழலையைக் காட்டிலும் தைராய்ட் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு இதனால் அதிகமிருக்கிறது. சாவில் கொண்டுவிடாத தைராய்ட் புற்றுநோயின் கொள்ளைநோய்க்கு ஊடுகதிர் மருத்துவ உபயோகமே ஓரளவு காரணமாயிருக்கிறது என்று சொல்லப்படலாம்.”—புற்றுநோய்க்கான காரணங்கள்
நாம் உட்கொள்ளும் உணவும் கூட புற்றுநோய்க்கு நாம் எண்ணிப்பாராத மற்றொரு காரணமாக இருக்கக்கூடும். “சில உணவுப் பொருட்களும் அந்த உணவுப் பொருட்களிலுள்ள சில ஊட்டச் சத்தும் புற்றுநோய் ஏற்படுவதோடு சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம் என்பதை ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. உணவில் அதிகமான கொழுப்புச் சத்து, புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கக்கூடும் என்பதை கண்டுபிடிப்புகள் காண்பிக்கின்றன. . . .
“ஒரு சில விட்டமின் சத்து குறைபாடுகளுக்கும்—விட்டமின் ‘எ’ மற்றும் ‘சி’—புற்றுநோய்க்கும் ஏதோ சம்பந்தமிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். உதாரணமாக, விட்டமின் ‘எ’ சத்துக்குறைவு, பெருஞ்சுரப்பி, கழுத்து, தோல், நீர்ப்பை, மற்றும் பெருங்குடல் புற்றுநோயோடு சம்பந்தப்படுத்தப்படுகின்றது.”—ஐக்கிய மாகாணங்களின் சுகாதார மற்றும் மனித பணிகள் துறை.
வெப்பமும் ஈரமுமான சீதோஷ்ண நிலையில் சேமித்து வைக்கப்படும் நிலக்கடலை மற்றும் மற்ற முக்கியமான மாச்சத்து உணவு பொருட்களின் தூய்மையை சாதாரணமாகக் கெடுக்கும் பூஞ்சைக்காளான் என்ற காளானின் விளைபொருள் இதற்கு அக்கறைக்குரிய ஒரு உதாரணமாக இருக்கிறது. மருத்துவர்கள் டால் மற்றும் பீட்டோவின் பிரகாரம், “ஒரு சில வெப்ப மண்டல நாடுகளில் நுரையீரல் புற்றுநோய்க்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.”
காரணத்துக்குப் பின்—அடுத்து என்ன?
தனி வேறுபட்ட அல்லது ஒன்றோடொன்று சம்பந்தப்பட்ட காரணங்களைக் கொண்ட 200 வித்தியாசமான புற்றுநோய்களாவது இருப்பதே உண்மையாக இருக்கிறது. சில நிலைமைகளில், காரணங்கள் இன்னும் நிச்சயமாக அறியப்படவில்லை. உணவில் பயன்படுத்தப்படும் வேதியல் பெருட்களும், தொழிற்சாலை கழிவுப் பொருட்களும் சாத்தியமான காரணங்களாக சுட்டிக் காண்பிக்கப்படுகின்றன. முதல் குழந்தையை தாமதமாக பெற்றுக்கொண்டு இவ்விதமாக தாய்ப் பால் சுரப்பை தாமதிப்பதற்கும் மார்பு புற்றுநோய் ஏற்படுவதற்கும் ஓரளவு சம்பந்தம் இருக்கிறது. புற்றுநோய்க்கான கூடுதலான காரணங்களுக்காக பக்கம் 6-லுள்ள பெட்டியைப் பார்க்கவும்.
மனித நடத்தையும் சுற்றுப்புறச் சூழலுமே அநேக புற்றுநோய்களுக்குக் காரணமென்பதை விஞ்ஞானிகள் ஊர்ஜீதப்படுத்திவிட்டார்களேயானால் புற்றுநோய் பிரச்னைக்கு முக்கிய பரிகாரங்களைக் கண்டுபிடிக்கும் வழியில் நாம் இருக்கிறோம். இவை பின்வரும் கட்டுரையில் சிந்திக்கப்படும். (g86 10/8)
[பக்கம் 5-ன் பெட்டி]
புற்றுநோய் சம்பந்தப்பட்ட சொல்தொகுதிகளுக்கு விளக்கம்
கழலை—நிலையில் வேறுபட்ட திசுக்களின் ஒரு பிண்டம்; ஆரோக்கியமற்ற ஒரு வீக்கம்; நியோப்ளாஸம் அல்லது புதிய வளர்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. அது வெற்றுக் கழலையாகவோ அல்லது புற்றுக்கழலையாகவோ இருக்கக்கூடும்.
வெற்றுக்கழலை—மற்ற திசுக்களுக்குள் நுழையாத அல்லது ஊடுருவிப் பரவாத செல்கள். என்றபோதிலும் ஒரு வெற்றுக்கழலையும் கூட ஆபத்தான அழுத்தத்தை உண்டுபண்ணக்கூடும்.
புற்றுக்கழலை—தடை செய்யப்பட்டாலொழிய சுற்றியுள்ள திசுக்களுக்குள் நுழைந்து ஊடுருவிப் பரவி கடைசியில் நோயாளியை திடீரென அமுக்கிவிடும் செல்கள்.
கான்ஸர்—இது ஒரு புற்றுக்கழலை. புற்றுநோய்களை இரண்டு முக்கியப் பிரிவுகளாக பிரிக்கலாம்: சார்கோமாஸ் மற்றும் காரிசினோமாஸ்.
சார்கோமாஸ்—தோல், குடல்கள், நுரையீரல் மற்றும் மார்பு போன்ற உடலுறுப்புகளை மூடியிருக்கும் அல்லது அவற்றின் உட்புறத்திலுள்ள திசுக்களைப் பாதிக்கும் புற்றுநோய்கள்.
கார்சினோமாஸ்—எலும்புகள், குருத்தெலும்பு கொழுப்பு மற்றும் தசைநார் உட்பட கட்டமைப்பு மற்றும் இணைப்பு இழைத் தொகுதி புற்றுநோய்.
கார்சினோஜின்—புற்றுநோய் உண்டுபண்ணும் ஒரு பொருள்.
மெட்டாஸிஸ்—(உறுப்புகளிடையே இடமாறுபாடு) தோன்றிய இடத்திலிருந்து உடலிலுள்ள கூடுதலான பகுதிகளுக்கு நோய் மாறிச் செல்லுதல்.
நிணநீர்—உடல் முழுவதிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு தெளிவான நெகிழ்ச்சிப் பொருள். அது வெள்ளை இரத்த அணுக்களையும், நோய் எதிர் பொருளையும் கழிவுப் பொருட்களையும், ஊட்டச் சத்துக்களையும் கொண்டிருக்கிறது.
நிணநீர் சுரப்பிகள்—அல்லது கணுக்கள். இவை பொதுவாக உடலிலுள்ள கழிவுப் பொருட்களை வடிகட்டுகின்றன. தொற்று நோய்க்கு எதிராக உடலை பாதுகாப்பதற்கு நிணநீர் அமைப்பு இன்றியமையாததாக இருக்கிறது.
(ஆதாரம்: டாக்டர் ஈவான் கேமரன் மற்றும் லைனஸ் பாலிங் எழுதிய புற்றுநோயும் விட்டமின் ’சி’யும்; டாக்டர் சார்லஸ் F. மக்கான் எழுதிய புற்றுநோய் பற்றிய உண்மைகள்.)
[பக்கம் 6-ன் பெட்டி]
மனிதர்களில் புற்றுநோய் உண்டுபண்ணுவதாக உறுதியாக சொல்லப்படும் காரணிகள்
காரணம் புற்றுநோய் வரும் இடம்
பூஞ்சைக் காளான் (நிலக்கடலையின் மீதிருப்பது)_ கல்லீரல்
மிதமிஞ்சிய குடி_ வாய், தொண்டை, உணவுக்குழாய், மற்றும் நுரையீரல்
கல்நார்_ நுரையீரல், மார்புவரி சவ்வுப்பை
வெற்றிலை, புகையிலை, சுண்ணாம்பு சவைத்தல்_ வாய்
மரச்சாமான்கள் (வயிரம் பாய்ந்த கட்டை)_ மூக்கு உட்புரை
தோலினால் செய்யப்பட்ட பெருட்கள்_ மூக்கு உட்புரை
மிதமிஞ்சிய உணவு (அளவுக்கு மீறிய எடை)_ கருப்பையின் உள்வரிச் சவ்வு, பித்த நீர்ப்பை
பிற்பட்ட ஆண்டுகளில் முதல் குழந்தை_ மார்பு
பிள்ளைபேறு இல்லாமை அல்லது ஒருசில குழந்தைகள்_ கருப்பை
ஒட்டுயிர் தொற்றுநோய்:
ஷிஷ்டோசோமா ஹீமேட்டோபியம், ஆப்பிரிக்கா_ சவ்வுப்பை
க்ளானார்சிஸ் சைனஸஸ், சீனா_ கல்லீரல்
கண்டபடி பாலின கலப்பு_ கருப்பையின் கழுத்து பகுதி, கருப்பை தோல்
ஸ்டீராய்ட்ஸ்_ கல்லீரல்
புகையிலை_ வாய், தொண்டை, நுரையீரல்
வைரஸ் (கல்லீரல் அழற்சி B)_ கல்லீரல்
(புற்றுநோய்க்கான காரணங்கள் அடிப்படையில்)