எச்சரிக்கை! இந்தத் தண்ணீர் உங்கள் உடல் நலத்துக்கு ஆபத்தாக இருக்கக்கூடும்
திறப்படைப்புக் குழாயின் அருகே, எரிகின்ற ஒரு தீக்குச்சியை வைத்துக் கொண்டு உங்கள் சமையலறை தொட்டிக் குழாயை திறக்க, அது பயங்கரமாக திடுமெனத் தீப்பற்றிக் கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? எரிகின்ற ஒரு சிகரெட்டை கீழே போட குடிநீர் ஆறு தீப்பற்றிக் கொள்வதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? குளியல் நீர் குடிப்பதற்கு அதிக கெட்டியாகவும் உழுவதற்கோ மெல்லியதாகவும் இருந்து ஒரு மூலையில் குவிந்து விட்டால் நீங்கள் திகைத்து நிற்பீர்களா?
உங்கள் கண்களுக்கு முன்பாகவே ஆற்று நீர் ஒரு மறிநிலைத்தகட்டை (negative) நிழற்படமாக மாற்றுவதை நினைத்துப் பார்ப்பது உங்கள் மனதை தடுமாறச் செய்கிறதா? உங்கள் குழாயில் நீர் கருநிற செர்மானிய சாராயத்தைப் போல் வந்தால் உங்கள் பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்? குழாயைத் திறந்து தண்ணீர் பிடிக்கையில் வீடு முழுவதும் நாற்றமெடுத்து விடாதபடி, தொட்டிக்கு மேலுள்ள ஜன்னலை நீங்கள் திறந்துவிட வேண்டுமா? காப்பித்தூள் போடுவதற்கு முன்பே கலங்கிப் போயிருக்கும் தண்ணீரை, அதன் அசாதாரணமான அடர்த்தியின் காரணமாக உங்கள் துணைவர் அதைக் குடிக்காமலே கிளம்பி விடுகிறாரா?
அல்லது உங்களுடைய தண்ணீர் பளிங்கு போல் தெளிவாகவும் ருசியில் சுத்தமாகவும் இருந்து ஆனால் உங்களுடைய குடும்பத்தினர் அதைக் குடித்த பின்பு அடிக்கடி தலைவலி, தலைச் சுற்றல், சீத பேதி அல்லது தோல் வெடிப்பினால் அவதிப்படுகிறார்களா? அல்லது உடல் அதிர்ச்சியும், கண் தெரியாமையும் நரம்பு மண்டல அமைப்பின் ஆற்றல் குறைவும் நோய்க்குறிகளைச் சிறப்பாக விளக்குவதாக உள்ளதா?
அண்மையில், அசுத்தமான தண்ணீரின் காரணமாக மனிதவர்க்கத்தில் மூன்றில் ஒரு பங்கு ஜனம் சதா நோயுற்ற நிலையில் இருந்ததும், அதன் குறைபாட்டின் காரணமாக இல்லாமல், அதனால் தானே, ஒவ்வொரு வருடமும் 100 இலட்சம் பேர் மரித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குத் தெரியுமா? இவை அனைத்தும் கண்மூடித்தனமான கற்பனையின் செய்தியாக, அறிவியல் கற்பனை கதை திரைப் படங்களின் சரக்காக இருக்கக்கூடுமா? துர் அதிஷ்டவசமாக, இவை மெய்யாக இருக்கின்றன.
பூமியின் மேலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும், பூமியின் கீழுள்ள தண்ணீர்களையும் முற்றிலும் விஷப்படுத்த மனிதனுக்கு இன்று வியக்கத்தக்க அறிவு இருப்பது தெளிவாகிவிட்டது. வாழ்க்கையை இலகுவாக்க அவன் எடுத்திருக்கும் முயற்சிகள்—வேதனையையும் நோயையும் தணிப்பதும், செய்தி இணைப்பின் மூலமாக பகல் நேர அறைக்குள் உலகத்தைக் கொண்டு வருவதும் விண் வெளியினுள் செல்ல நாடுவதும் அழிவுண்டாக்கும் போர் கருவிகளை உற்பத்தி செய்வதுமே—அநேகமாக இவைகளுக்குக் காரணமாக இருக்கின்றன.
பெரும்பாலும் இவைகளுக்கு மனிதனின் புதிய ஆனால் சாவுக்கேதுவான வேதியல் சேர்மான கண்டுபிடிப்புகளே காரணமாயிருக்கின்றன. ஆறு வருடங்களுக்கு முன்பு சந்தையில் இப்படிப்பட்ட வேதியல் கலவைகள் 60,000க்கும் மேலாக இருந்தன இவைகளில் 35,000 சாவுக்கேதுவானவை அல்லது நம்முடைய உடல்நலத்துக்கு வெகுவாக கேடு விளைவிப்பவை என்பதாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவை உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த வேதியல் கலவைகளிலிருந்து வரும் சம அளவு ஆபத்தான மற்றும் அதிக நச்சுத் தன்மை வாய்ந்த கழிவு பொருட்கள், மனிதர்கள் மீதோ அல்லது சுற்றுப்புறச் சூழலின் மீதோ அது ஏற்படுத்தக்கூடிய விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அவை பூமி ஆறுகள் ஓடைகள் போன்றவற்றில் வீசி எறியப்படுவதன் மூலம் அப்புறப்படுத்தப்படுகின்றன.
விவசாயிகளுக்கு வரப்பிரசாதம், பூமியின் தண்ணீருக்கு வெடிகுண்டுஆபத்து
பூச்சுக் கொல்லிகளும், களைக் கொல்லிகளும் உரங்களும் உலகில் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாகவும் ஆனால் பூமியின் தண்ணீர்களுக்கு வெடிகுண்டாகவும்ஆபத்தாகவும் இருந்திருக்கிறது. கலிபோர்னியாவின் சான் ஜாக்குன் பள்ளத்தாக்கில் விவசாயிகள் பல வருடங்களாக தங்களுடைய கொடி முந்திரிக்கும் பழம் மற்றும் தக்காளிகளுக்கு DBCP என்ற ஒரு பூச்சுக் கொல்லியை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சமீபத்தில்தானே அது மனிதர்களில் புற்று நோய்க்கும் மலட்டுத்தன்மைக்கும் காரணமாயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெளிக்கப்படுவது நிறுத்தப்பட்டு விட்டாலும் கூட விஷம் பூமியின் மடிப்புகளினூடாக ஊடுருவிச் சென்று அடியிலுள்ள நீரை சென்றெட்டாமல் இல்லை. “இந்தப் பள்ளத்தாக்கிலுள்ள முப்பத்தைந்து சதவிகித கிணறுகளில் DBCP இருக்கிறது” என்று சுகாதார இலாக்காவின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். கலிபோர்னியாவிலுள்ள ஒரு மாவட்டத்தில், 250000 பேர் DBCP தூய்மைக் கேட்டின் அபாய நேர்வை எதிர்படுவதாக நீயூஸ் வீக் பத்திரிகை குறிப்பிட்டது. மற்ற பூச்சுக் கொல்லிகள் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கின்றன. இன்னும் மற்றவை பல்வேறு நோய்களுக்குக் காரணமாயிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. களைக் கொல்லிகள் சில மூளையில் கவலைக்குரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஒரு நபரை நடமாடமுடியாதபடி செய்து விடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில வேளாண்மைப் பகுதிகளில், சில தேசங்கள் நிர்ணயித்திருக்கும் உடல்நலங் குறித்த தராதரங்களைவிட அதிகமாக நைட்ரேட் செறிவை உரங்களில் சேர்த்திருக்கிறார்கள். இந்த இரசாயனங்களும்கூட நிலத்தின் அடியிலுள்ள தண்ணீரினுள் ஊடுருவிப் பரவி விட்டிருக்கின்றன.
துப்புரவு செய்யும் பொருட்கள், கரைமங்கள் உலர்வுச் சலவை செய்வதற்குப் பயன்படும் நெகிழ்ச்சிப் பொருட்கள் நச்சுத் தடை மலக் குழியை சுத்தம் செய்யும் பொருட்கள் ஆகியவை வேதியல் முன்னேற்றத்தால், பெறப்பட்டவையாக உள்ளன. இது மனிதவர்க்கத்துக்கு மகத்தான நன்மைகளைக் கொண்டு வந்திருக்கிறது. என்றபோதிலும் இந்தப் பொருட்கள் பூமியினூடே ஊடுருவிச் செல்லும் போது பூமியின் தூய்மையான தண்ணீர்கள் எதிர்கால சந்ததியினர் பயன்படுத்த முடியாதபடி தூய்மைக் கேடடைகின்றன. “நாம் நம்மையும் நம்முடைய பின்வரும் தலைமுறைகளையும் விஷப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” என்று சுற்றுப்புறச் சூழல் நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார்.
அறிக்கைகள் காண்பிக்கும் விதமாகவே, நெடுஞ்சாலைகளிலும் நகரங்களிலுள்ள தெருக்களிலும் அமையப்பெற்றுள்ள பணி நிலையங்களில் பூமிக்கு அடியிலுள்ள இலட்சக்கணக்கான கல்லெண்ணெய் சேமிப்புத் தொட்டிகள் கசிந்து கொண்டிருப்பதால் அவைகளின் வெடிக்கிற முனைத்த வெடிமருந்து பொருட்கள் நிலத்தில் ஊறி அடிநில நீர் அமைப்புகளினுள் சென்று விடுகின்றன. இந்தப் புகைகள் எரிந்து கொண்டிருக்கும் தீக்குச்சியை எட்டும்போது, வீடுகளையும் களஞ்சியங்களையும் தீப் பற்றிக் கொள்ளும் படியாகச் செய்துவிடக்கூடும். பூமிக்கு அடியிலுள்ள தண்ணீர்களுக்குள் இந்த வேதியற் பொருட்கள் கசிவதால், திறப்படைப்புக் குழாயில் புகை வருவது சாதாரணமாக இருக்கிறது.
பூமியின் அடுக்குகளினூடே இந்த இராசயணங்கள் கசியும் போது, பூமிதானே இவைகளைத் துப்புரவு செய்து அவைகளைத் தீங்கற்றதாக ஆக்கிவிடும் என்பதாக நம்பப்பட்டது. என்றபோதிலும், கடந்த பத்தாண்டில் தானே, ஆபத்தான இந்த இரசாயனங்களில் பெரும்பாலானவை வடிகட்டப்படாமல் பூமிக்கு அடியிலுள்ள தண்ணீரை எதிர்கால சந்ததியினர் பயன்படுத்த முடியாதபடி அதன் தூய்மையைக் கெடுத்து விடுவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. “பூமிக்கு அடியிலுள்ள நீரின் தூய்மை கெடுக்கப்பட்டிருப்பது வெகு காலத்துக்கு முன்பாகச் செய்யப்பட்ட தவறுகளின் விளைவாக இருக்கிறது” என்பதாக அமெரிக்க தண்ணீர் பணித்துறை சங்கத்தின் ஜேம்ஸ் க்ரப் தெரிவித்தார். அதை முன்னறிவிக்க எவருக்கும் முன்னறிவு இருக்கவில்லை”
என்றபோதிலும் இதே தவறுகள் இன்றுவரையாக செய்யப்பட்டு வருகிறது. ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே, இலட்சத்து 50 ஆயிரக் கோடி காலன்கள் ஆபத்தை விளைவிக்கும் கழிவு பொருட்கள் ஆண்டுதோறும் பூமிக்கு அடியிலுள்ள தண்ணீருக்குள் கசிந்து செல்வதாக சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸி மதிப்பிடுகிறது. இவைகளில் பெரும்பாலானவை, மனிதனின் தண்ணீருக்கும் உடல்நலத்துக்கும் விளையக்கூடிய பயங்கரமான, சேதத்தைக் குறித்து கவலைப்படாமல் தீமை செய்யத் தயங்காத பேராசையுள்ள மனிதர்களால் வேண்டுமென்றே தூக்கி எறியப்படுகிறது. “பெரும்பாலான நாடுகள் நிர்ணயித்திருக்கும் பாதுகாப்பு உச்ச வரம்பை மீறுவதற்கு 2 கோடி காலன்கள் அடிநில நீரின் தூய்மையைக் கெடுக்க 1 காலன் கரைமம் போதுமானதாக இருக்கிறது” என்று ஒரு விஞ்ஞானி குறிப்பிட்டார். கோடிக்கணக்கான காலன்கள் கழிவுப் பொருட்களைப் பற்றி ஒருவர் சிந்தித்துப் பார்க்கையில், “எல்லா இடங்களிலும் தண்ணீர் தண்ணீர், குடிப்பதற்கோ ஒரு சொட்டு நீர் இல்லை” என்ற சொற்றொடர் மாபெரும் அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
“கால வெடி குண்டு, நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது”
“அடிநில நீரும் அதன் அசுத்தங்களும் மெதுவாக நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு சாத்தியமான கால வெடிகுண்டை பிரதிநிதித்துவம் செய்கின்றது” என்று சுற்றுப்புறச் சூழல், ஆற்ற மற்றும் இயற்கை வள குழுவின் அக்கிராசினர் தெரிவித்தார். “1980 களில் இந்தப் பிரச்னையே அடுத்த பெரும் நெருக்கடியாக இருக்கும் என்ற நம்பிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது.” தி நியு யார்க் டைம்ஸ் பின்வருமாறு அறிவித்தது: “பூமிக்கு அடியிலுள்ள நீரின் தூய்மைக் கேடு குடிநீரின் தரத்தைப் பாதிக்கும் மிகவும் வினைமையான மற்றும் கையாள முடியாத பிரச்னை என்பதையும் இப்பொழுது அது நிலத்துக்குக் கீழே உள்ள கால வெடிகுண்டாக இருக்கிறது என்பதையும் அனைவரும் ஒப்புக் கொள்கிறார்கள்” “நம்முடைய கைகளில் ஒரு கால வெடிகுண்டை வைத்திருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை” என்று அரிசோனா பல்கலைக்கழக விஞ்ஞானி எச்சரித்தார். “வெடி ஓசை எவ்வளவு பெரியதாக இருக்கும்” என்பதே கேள்வியாக இருக்கிறது.
“வெடி ஓசை எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஒரு நபர் தன் காதை நிலத்தின் மீது வைத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கெனவே உலகம் வர இருக்கும் வெடிப்பொலியின் பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது.” உதாரணமாக 2000 வருடத்துக்குள் தண்ணீர்களில் நான்கில் ஒரு பங்கு குடிப்பதற்குப் பாதுகாப்பற்றதாக இருக்கும் என்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் முக்கிய ஆறுகளில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மனிதன் பயன்படுத்த முடியாதபடி பாதுகாப்பு வரம்புகளுக்கு அப்பால் கெடுக்கப்பட்டுள்ளது என்பதாக உவர்ல்ட் வாட்ச் நிறுவனம் தெரிவிக்கிறது. சோவியத் குடியரசின் விவகாரங்களின் நிபுணரான தேய்ன் கஸ்டார்ப்ஸனின் பிரகாரம் இன்று தண்ணீரின் தூய்மை கெடுக்கப்படுவதன் காரணமாக, 2000 ஆண்டுக்குள் அந்தத் தேசம் அதிகமான தண்ணீர் தேவையை எதிர்படும். தென் அமெரிக்காவும் குடிக்க முடியாதபடி அவ்வளவாக கெடுக்கப்பட்டிருக்கும் அதன் தண்ணீர்களினால், இதே போன்ற ஒரு நெருக்கடியை எதிர்படுகிறது. “தண்ணீரை வீணாக்குவதை நாம் கட்டுப்படுத்த வேண்டும் அல்லது 2000 ஆண்டுக்குள் நாம் தாகத்தால் உயிரிழந்து கொண்டிருப்போம்” என்பதாக தண்ணீர் பற்றிய ஐக்கிய நாடுகள் உலக மாநாடு அறிவித்தது. “தூய்மைக் கேட்டின் காரணமாக அல்லது தற்போது அதை வீணாக்கிக் கொண்டிருப்பதன் காரணமாக, அதிக சமீப எதிர்காலத்தில் உலகம் உண்மையில் தாகத்தால் மரித்துக் கொண்டிருக்கும் என்பதை மிகைப்படுத்தும் குற்றவுணர்வில்லாமல் முன்னறிவது எளிதாக இருக்கிறது” என்பதாக மாநாடு தெரிவித்தது.
ஏற்கெனவே உலக காட்சியில் வெடித்து விட்டிருப்பதாக தோன்றும் கால வெடிகுண்டின் பாழாக்கும் பாதிப்புகளைப் பூமியின் எல்லா பாகங்களிலுமுள்ள ஆட்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக இந்தியாவில் 70 சதவிகித குடிநீரின் தூய்மை கெடுக்கப்பட்டிருப்பதையும் தேசத்தில் ஏற்படும் நோய்களுக்கு அது முக்கிய காரணமாக இருப்பதையும் ஒருவர் சிந்தித்துப் பார்க்கையில், அதன் தண்ணீர்களும் அதை நம்பியிருக்கும் எல்லா உயிர்களும் பரிகாரத்துக்காக கூக்குரலிட்டுக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது மிகையாகாது. வளர்ச்சியடையாத தேசங்களையும் சுத்தமான நீரைத் தேடி மரித்துக் கொண்டிருக்கும் ஆட்களையும் பற்றி என்ன சொல்லப்படலாம்? உண்மையாகவே உலகமானது சரித்திரத்தில் முன்னொரு போதும் இராத அளவில் ஒரு இரண்டக நிலையை எதிர்படுகின்றது.
தண்ணீரால் பரவும் நோய்கள் ஒவ்வொரு நாளும் 30000 ஆட்கள் உயிரிழப்பதற்குக் காரணமாயிருக்கிறது என்பதாக ஸ்விஸ் நீர் பண்டுவ நிபுணர் டாக்டர் மார்டன் ஸ்கல்காம்ப் தெரிவித்தார். மனிதவர்க்கத்தில் மூன்றில் ஒரு பங்கானோருக்கு மாத்திரமே “சுத்தமான” குடிநீர் வசதியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். மக்கள் தொகையின் அடுத்த ஒரு பங்கு தூய்மை கெடுக்கப்பட்ட தண்ணீரை குடிக்கிறார்கள். மீதமுள்ள ஒரு பங்குக்கு எந்தவிதமான தண்ணீரும் இல்லை.
இவ்விதமாக இது இருக்கிறது. விஷமாக்கப்பட்ட நீர் பூமியில் ஊறி அதன் ஆறுகளினூடே வேகமாக பாய்ந்து சென்று, அதன் ஓடைகளினூடே வளைந்து நெளிந்து சென்று அதன் நீர்வீழ்ச்சிகளில் அருவியாக விழுந்து கொண்டிருக்க, மனிதவர்க்கத்தில் பெரும்பாலானோர் அதைக் குடித்து சாகிறார்கள். நிச்சயமாகவே மனிதனே சொந்தமாக உருவாக்கியிருக்கும் கால வெடிகுண்டு!
பூமி, மனிதன், மற்றும் ஜீவனைக் கொடுக்கும் தண்ணீர்களின் சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் “பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிற”தற்கு தம்முடைய சொந்த கால வெடிகுண்டை கொண்டவராக இருக்கிறார். (வெளிப்படுத்தின விசேஷம் 11:18) அதற்கு அவர் தம்முடைய சொந்த காலத்தை நிர்ணயித்து வைத்திருக்கிறார். பூமியையும் காற்றையும் தண்ணீரையும் கெடுத்து விட்டிருப்பவர்கள் அதைத் தடை செய்யவோ அல்லது அழிக்கும் அதன் சக்திகளிலிருந்து தப்பித்துக் கொள்ளவோ முடியாது. 2000 ஆண்டு தொடர்ந்து மனிதனால் ஒரு நெருக்கடியான காலமாக சுட்டிக் காண்பிக்கப்பட்டு வருகிறது. குற்றமுள்ளவர்கள், எண்ணி அஞ்சப்படும் அந்த வருடத்தைக் காண உயிரோடிருப்பார்களா என்பது பொறுமையாயிருந்து பார்க்கப்பட வேண்டும். யெகோவாவுக்கு மாத்திரமே இது தெரியும். கடவுள் இதற்கு இப்பொழுது காரணமாக கருதும் ஆட்களின் அழிவை தொடர்ந்து பூமி பரதீஸாக மாற்றப்படும். ஜீவத் தண்ணீர்களின் நதிகளில் சுத்தமும் தூய்மையுமான தண்ணீர் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஏராளமாக கிடைக்கும்.
அப்பொழுது குடிநீரைக் குறித்து, “எல்லா இடங்களிலும் தண்ணீர் தண்ணீர் ஒவ்வொரு சொட்டும் குடிப்பதற்கு உகந்த நீர்” என்று சொல்லப்படும். (g86 11/22)
[பக்கம் 10-ன் சிறு குறிப்பு]
“எல்லா இடங்களிலும் தண்ணீர், தண்ணீர் குடிப்பதற்கோ ஒரு சொட்டு நீர் இல்லை” என்பது இன்று மனிதவர்க்கத்துக்குப் புதிய மற்றும் அச்சுறுத்துகிற அர்த்தத்தோடு மாபெரும் அளவில் காட்சியளிக்கிறது
[பக்கம் 9-ன் படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பூச்சுக் கொல்லிகள்
களைக்கொல்லிகள்
உரங்கள்
DBCP
கரைமங்கள்
துப்புரவு செய்யும் பொருட்கள்