உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 8/22 பக். 10-11
  • தீர்வு என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தீர்வு என்ன?
  • விழித்தெழு!—1997
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பிக்கை கொள்வதற்கான அடிப்படை
  • கடவுள் என்ன செய்வார்
  • உலகெங்கும் தண்ணீர்ப் பிரச்சினை—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
  • அதிக தட்டுப்பாடுள்ள இடம்
    விழித்தெழு!—1997
  • எல்லா இடத்திலும் தண்ணீர் தண்ணீர் . . .
    விழித்தெழு!—1987
  • எச்சரிக்கை! இந்தத் தண்ணீர் உங்கள் உடல் நலத்துக்கு ஆபத்தாக இருக்கக்கூடும்
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1997
g97 8/22 பக். 10-11

தீர்வு என்ன?

மனிதவர்க்கத்தின் சிக்கலான தண்ணீர் பிரச்சினைகளுக்கான தீர்வை பற்றி வல்லுநர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர். அடுத்த பத்து வருடங்களில் சுகாதாரம் மற்றும் தண்ணீர் திட்டங்களில் 60,000 கோடி டாலர் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று உலக வங்கி கூறுகிறது. முதலீடு செய்யாவிட்டால் அதன் செலவு இன்னும் அதிகமாக இருக்கும். உதாரணமாக, பெருவில் மாசுபடுத்தப்பட்ட தண்ணீரால் சமீபத்தில் பத்து-வாரம் நீடித்த காலரா கொள்ளை நோயானது, சுமார் 100 கோடி டாலர் செலவை ஏற்படுத்தியது—1980-கள் முழுவதும் அந்த நாட்டின் தண்ணீர் சப்ளைக்காக செலவு செய்யப்பட்ட பணத்தைவிட இது மூன்று மடங்கு அதிகமாகும்.

தண்ணீர் திட்டங்கள், அவற்றை முன்னேற்றுவிக்கிறவர்களின் நல்ல உள்நோக்கங்கள் மத்தியிலும் ஏழ்மையின் அடிமட்டத்தில் உள்ளோருக்கு அதிக உதவியாக இருப்பதில்லை. வளரும் நாடுகளின் மிகப்பெரிய நகரங்களில் வளர்ச்சியானது மிகவும் வேகமானதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருக்கிறது. ஏழைகள் அதிக இடைஞ்சலான, குறைந்த தரமுள்ள குடிசைகளில் குடியிருக்கின்றனர்; அங்கு குழாய் தண்ணீர் வசதியோ, போதுமான சுகாதாரமோ இல்லை. நகராட்சி தண்ணீர் வசதிகளை அவர்கள் பெறமுடியாததால் தனிப்பட்ட வியாபாரிகளுக்கு மிகவும் அதிகமான பணம் கொடுத்து, அநேக சமயங்களில் அழுக்கான தண்ணீரை வாங்கவேண்டியிருக்கிறது.

தெளிவாகவே, உலகளாவிய தண்ணீர் தட்டுப்பாடானது சிக்கலானதும் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல காரணிகளை—தண்ணீர் பற்றாக்குறை, தூய்மைக்கேடு, ஏழ்மை, நோய் மற்றும் வளரும் மக்கள்தொகையின் அதிகரித்துவரும் தேவைகள் ஆகிய காரணிகளை—கொண்டதாகவும் இருக்கிறது. அவ்வாறே, இந்த பிரச்சினைகளை மனிதன் தீர்க்கமுடியாது என்பதும் தெளிவாக இருக்கிறது.

நம்பிக்கை கொள்வதற்கான அடிப்படை

என்றாலும், அநேகர் முன்னறிவிக்கிறது போல் எதிர்காலம் அவ்வளவு இருண்டதாக இருக்காது. ஏன்? ஏனென்றால், இந்த உலகத்தின் தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான தீர்வு மனிதனிடம் அல்ல மாறாக கடவுளிடம் இருக்கிறது. எல்லா தண்ணீர் பிரச்சினையையும் தீர்ப்பதற்கான வல்லமையும் விருப்பமும் அவரிடம் மட்டுமே இருக்கிறது.

இந்த பிரச்சினைகளை யெகோவா தேவனால் தீர்க்கமுடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் தாமே, இந்த பூமியை மட்டுமல்ல அதன் தண்ணீரையும் வடிவமைத்துப் படைத்திருக்கிறார். பூமியில் உயிர் வாழ்வதை சாத்தியமாக்கக்கூடிய அற்புதகரமான தண்ணீர் சுழற்சியையும் அதோடுகூட மற்ற இயற்கை சுழற்சிகளையும் ஆரம்பித்து வைத்தவர் அவரே. வெளிப்படுத்துதல் 14:7 யெகோவாவை, “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவர்” என்று அடையாளம் காண்பிக்கிறது.

உலகத்தின் தண்ணீரை கட்டுப்படுத்தும் வல்லமை யெகோவாவுக்கு இருக்கிறது. “அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளி நிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார்.” (யோபு 5:11) அவரை பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த்தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும்” மாற்றுகிறார்.—சங்கீதம் 107:35.

தண்ணீர் கொடுப்பதற்கான தம்முடைய வல்லமையை அவர் மறுபடியும் மறுபடியுமாக நிரூபித்திருக்கிறார். உதாரணமாக, இஸ்ரவேலர்களுக்கு வனாந்தரத்தில் 40 வருடம், சில சமயங்களில் அற்புதகரமாக, தண்ணீர் கொடுத்து வந்தார். “கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்” என்று பைபிள் சொல்கிறது. “இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது.”—சங்கீதம் 78:16, 20.

கடவுள் என்ன செய்வார்

தண்ணீர் தட்டுப்பாடு என்றைக்கும் தொடர்ந்திருக்கும்படி கடவுள் அனுமதிக்கமாட்டார். சீக்கிரத்தில் பூமியின் மீது ஆதிக்கம் செலுத்தப்போகிற அவருடைய பரலோக அரசாங்கத்தின் அன்புள்ள ஆட்சியில் வாழவிரும்பும் உலக மக்களின் சார்பாக அவர் நடவடிக்கை எடுக்கும் காலம் வருகிறது என்று பைபிள் முன்னறிவிக்கிறது.—மத்தேயு 6:10.

அந்த அரசாங்கம் அல்லது ராஜ்யம், தண்ணீரினால் கடத்தப்படும் நோய்கள் உட்பட எல்லா வியாதிகளுக்கும் ஒரு முடிவை கொண்டுவரும். கடவுளுடைய உண்மைப்பற்றுறுதியுள்ள ஊழியர்களுக்கு பைபிள் இவ்வாறு வாக்குறுதியளிக்கிறது: “[தேவன்] உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்கு[வார்].” (யாத்திராகமம் 23:25) அதுமட்டுமல்ல, ‘பூமியை கெடுத்தவர்களை அவர் கெடுக்கும்போது’ பூமியின் தண்ணீரை கெடுத்தவர்களும் அழிக்கப்பட்டுவிடுவர்.—வெளிப்படுத்துதல் 11:18.

கடவுளுடைய அன்புள்ள பாதுகாப்பில் முழு பூமியும் செழித்தோங்கும். சுத்தமான, குடிக்கத்தக்க தண்ணீரை தேடி ஜனங்கள் இனி ஒருபோதும் முடிவில்லாமல் போராடிக் கொண்டிருக்கமாட்டார்கள். எப்போதும் உண்மையே பேசும் சர்வவல்லமையுள்ள கடவுள், எதிர்காலத்தை பற்றி இவ்வாறு எழுதும்படி தம்முடைய தீர்க்கதரிசியை ஏவினார்: “வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்.”—ஏசாயா 35:6, 7; எபிரெயர் 6:18.

[பக்கம் 10-ன் படம்]

கடவுள் வாக்களிக்கிறார்: ‘வனாந்தரத்திலே தண்ணீர்கள் [பாய்ந்தோடும்]. . . . வறண்ட நிலம் நீரூற்றுகளாகும்.’—ஏசாயா 35:6, 7

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்