கடவுளிடமாக நீங்கள் திறந்த மனமுள்ளவராக இருக்கிறீர்களா?
நீங்கள் கடவுளை நேசிக்கிறீர்களா? அவரைப் பற்றி இன்னும் அதிகமாக தரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அதைச் செய்வதற்குரிய வழி 19 நூற்றாண்டுகளுக்கு முன்பாக காண்பிக்கப்பட்டது. தெசலோனிக்கேயாவிலிருந்த ஒரு யூத ஜெப ஆலயத்தில் யூதர்களும் கிரேக்கர்களுமிருந்த ஒரு கூட்டத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பிரசங்கித்தான். சில யூதர்களுக்கும் சில கிரேக்கர்களுக்கும் உறுதியான நம்பிக்கை ஏற்பட்டபோது அவர்கள் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டார்கள். ஆனால் யூதர்களில் அநேகர், “பொறாமைக் கொண்டு பொல்லாத போக்கிரிகள் சிலரை கூட்டமாகத்திரட்டி நகரிலே அமளி உண்டாக்கினர்.”
இராத்திரி காலத்திலே, பவுல் கூட்டத்திடமிருந்து தப்பி பெரோயா பட்டணதுக்குப் போய் அங்கே ஜெப ஆலயத்தில் யூதர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் பிரசங்கித்துக் கொண்டிருந்தான். “அங்குள்ளவர்கள் தெசலோனிக்கே நகர் யூதர்களைவிடப் பெருந்தன்மையுள்ளவர்கள். வேத வார்த்தையை மிக்க ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, அப்போஸ்தலர்கள் போதிப்பது மறைநூலுடன் ஒத்துள்ளதா என்று நாள்தோறும் ஆராய்ந்து வந்தனர். யூதர் பலரும் கிரேக்கர்களுள் பெருங்குடி மகளிரும் ஆண்கள் பலரும் விசுவாசித்தனர்.”—அப்போஸ்தலர் 17:1-12.
தெசலோனிக்கேயாவிலிருந்த யூதர்கள் தேவனுடைய வார்த்தையை அவமாக்கிப் போட்ட அதன் பாரம்பரியங்களோடு கூட பல நூற்றாண்டுகள் பழமையாக இருந்த தங்களின் மதத்தைப் பற்றிக் கொண்டிருந்தார்கள். (மத்தேயு 15:1-9) பேரோயாப் பட்டணத்தார் எத்தனை வித்தியாசமாக இருந்தார்கள். அவர்கள் திறந்த மனதுடனே செவிகொடுத்துக் கேட்டு பவுலின் வார்த்தைகள் மறைநூலுடன் ஒத்துள்ளதா என்று பார்க்க நாள்தோறும் அதை ஆராய்ந்து தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டனர்.
முந்தைய கட்டுரையில் மேற்கோள் காண்பிக்கப்பட்டிருக்கும் கத்தோலிக்க கருத்துரையாளர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி இவ்விதமாகச் சொன்னார்கள்: “ஆர்வம், வைராக்கியம் மற்றும் சுறுசுறுப்பு என்பது வருகையில், அவர்கள் முதலிடத்தைப் பெறுகிறார்கள்.” அவர்கள் “பிரசங்கிக்கும் விசுவாசத்தின்படி வாழ்வதில் முதலாவதானவர்களாக இருக்கிறார்கள்.” மேலும் அவர்கள் “கற்புள்ள மற்றும் நேர்மையான வாழ்க்கை முறையை கடைபிடிக்கிறார்கள்.” ஒருவர் “அனலோடும் சகோதரத்துவ உணர்வோடும் ஒருமைப்பாட்டுடனும் வரவேற்கப்படுகிறார்”. “அவர்கள் எப்பொழுதும் பைபிளை வாசிக்கும் முறையானது, மற்ற இறைமை நூல்கள் இனிமேலும் நிறைவு செய்யாத மெய்யான தேவைகளை நிறைவு செய்கிறது.” அவர்களுடைய செய்தி “இந்த உலகின் இன்னல்களின் மத்தியில் தனி நபரின் கவலையை மேற்கொள்வதற்கு உதவி செய்கிறது.” இவையும் இன்னும் அதிகமும் கத்தோலிக்க பாதிரிமார்களாலும் கருத்துரையாளர்களாலும் சொல்லப்படுகின்றன. இவை அனைத்தும் யெகோவாவின் சாட்சிகளுக்கு மிக உயர்ந்த புகழ்ச்சியாக இருக்கிறதல்லவா?
அவர்கள் உங்களைச் சந்தித்துப் பைபிள் அடிப்படையில் உங்களுடன் பேசுகையில் அவர்களுக்குச் செவி கொடுப்பது ஞானமான காரியமாக இருக்குமல்லவா? அவர்களுடைய மதம் மதிப்புக்குறைவாக ஒரு மதப் பிரிவு என்றழைக்கப்படுவதால் இது அதை பொய்யானதாக்கிவிடுவதில்லை. ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் “நசரேயருடைய கட்சி” என்றழைக்கப்பட்டார்கள் “அவை அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து நல்லதையே ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று பைபிள் நம் அனைவருக்கும் புத்திமதி சொல்கிறது. (அப்போஸ்தலர் 24:5; 1 தெசலோனிக்கேயர் 5:21, டுவே மொழிபெயர்ப்பு) கடவுளை நேசித்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பும் அனைவரும் இந்தத் தெய்வீகப் புத்திமதிக்குச் செவி கொடுக்க வேண்டாமா? (g87 3/22)
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
நீங்கள் ஒரு கத்தோலிக்கராக இருந்து, கடவுளை நல்ல விதமாக தெரிந்துகொள்ள விரும்பினால் உங்களுடைய சொந்த பைபிளை உபயோகித்து, திறந்த மனதோடு, கொடுக்கப்பட்டிருக்கும் வேத வசனங்களோடு கூட இந்தக் கேள்விகளைச் சிந்தித்துப் பாருங்கள்.
கத்தோலிக்க டூவே மொழிபெயர்ப்பு ஆத்துமா சாகும் என்பதாக கற்பிக்கிறது—அது சாவாமையுள்ளது என்பதாக உங்கள் சர்ச் போதிக்கிறதா?—எசேக்கியேல் 18:4; அப்போஸ்தலர் 3:23; திருவெளிப்பாடு 16:3.
அது பாவத்தின் சம்பளம் மரணம் என்று கற்பிக்கிறது—பாவிகள் நரகத்திலோ அல்லது உத்தரிக்கும் ஸ்தலத்திலோ வாதிக்கப்படுகிறார்கள் என்பதாக உங்கள் சர்ச் போதிக்கிறதா?—பிரசங்கி 9:5, 10; ரோமர் 6:23.
அது யெகோவாவே ஒரே தேவன் என்றும் இயேசு அவருக்குச் சமமானவர் இல்லை என்றும் கற்பிக்கிறது—கடவுள் மூவரில் ஒரு கடவுள் என்றும் இயேசு சமமான மூவரில் ஒருவர் என்றும் உங்களுடைய சர்ச் போதிக்கிறதா?—உபாகமம் 6:4; யோவான் 14:28.
கடவுளுடைய சர்ச், மூலைக்கல்லாகிய இயேசுவின் மீது கட்டப்படுகிறது என்பதாக அது போதிக்கிறது—அது பேதுருவின் மீது கட்டப்படுவதாக உங்களுடைய சர்ச் போதிக்கிறதா?—எபேசியர் 2:20, 21; 1 பேதுரு 2:4-8.
அது கிறிஸ்து இயேசுவின் மூலமாக கடவுளிடம் ஜெபிக்க வேண்டும் என்று கற்பிக்கிறது—உங்களுடைய சர்ச் மற்றவர்களிடம் அல்லது மற்றவர்கள் மூலமாக ஜெபிக்க வேண்டும் என்று கற்பிக்கிறதா?—பிலிப்பியர் 4:6; 1 தீமோத்தேயு 2:5.
பாவங்களை அறிக்கையிடுவதும் கடவுளின் மன்னிப்பைக் கேட்பதும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக செய்யப்பட வேண்டும் என்று அது கற்பிக்கிறது—இந்தத் தயவுகளைப் பாதிரியார் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று உங்கள் சர்ச் கற்பிக்கிறதா?—1 யோவான் 1:9; 2:1.
உலகத்தோடு சிநேகமும் இந்த உலகத்தோடு அரசியல் ஈடுபாடும் கடவுளுக்குப் பகையாக இருக்கிறது என்று அதே கத்தோலிக்க பைபிள் கற்பிக்கிறது—உங்களுடைய சர்ச் இந்த உலகின் அரசியல் மற்றும் இராணுவ விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறதா?—யோவான் 15:19; 18:36; யாக்கோபு 1:27; 4:4.
[படங்கள்]
எரி நரகம்
திருத்துவம்
பரிந்துரைப்பவர்கள்