பைபிளின் கருத்து
போட்டி விளையாட்டுகளில் ஜெபம் கடவுள் செவிகொடுக்கிறாரா?
ஆயிரக்கணக்கான விசிறிகள் தங்களுக்கு விருப்பமான ஆட்டக்குழுவுக்கு கரகோஷம் முழங்கிக் கொண்டு விளையாட்டரங்கிற்குள் திரளாக வந்து சேருகையில் காற்றுமண்டலம் பரபரப்பினால் விறுவிறுப்படைகிறது. ஆட்டக்காரர்கள், திறமையாக விளையாடத் தங்களை தயார் செய்யும் பயிற்சிகளை அப்போதுதானே முடித்துவிட்டு வந்திருக்கிறார்கள். ஆட்டத்தை ஆரம்பிக்க விசில் ஊதப்பட இருக்கிறது. களத்தின் ஒரு பக்கத்தில் ஆட்டக்காரர்கள் ஒன்றாகச் சேர்ந்து குனிந்துகொண்டிருக்க, நடுவில் ஆட்டக்குழுத் தலைவர் முழங்காலில் இருந்த வண்ணம் இவ்வாறு ஜெபிக்கிறார்: “கடவுளே, தயவு செய்து எங்கள் குழுவை ஆசீர்வதித்து எங்கள் எதிராளி மீது எங்களுக்கு வெற்றியை அளித்திடுவீராக. காயமடையாதபடி எங்களை பாதுகாத்தருள்வீராக, ஆமென்.” முழக்கமான ஆரவாரத்தோடு கூட்டம் பிரிந்துபோகிறது, ஆட்டக்காரர்கள் தங்களுக்குரிய இடத்தில் நிற்க, விசில் ஊதப்படுகிறது. அமெரிக்க உதைப்பந்தாட்டத்தின் ஒருமுகப்படுத்தப்பத் தாக்குதல் ஆரம்பமாகிறது.
பல்வேறு விளையாட்டுகளுக்கு முன்பும், விளையாட்டின் போதும், அதற்குப் பின்பும் செய்யப்படும் தனிப்பட்ட மற்றும் குழு ஜெபம், சாதாரணமான காட்சியாக மாறிவிட்டிருக்கிறது. ஆனால் கடவுள் செவி கொடுக்கிறாரா? அல்லது சிலர் வாதிடுவது போல, இது ஜெபத்தை ஏளனத்துக்குரியதாக்குவதாக இருக்கிறதா?
“உன் அயலானை அடித்து நொறுக்கு”
உலகம் முழுவதிலும், உண்மையில் எல்லா விளையாட்டும்—விளையாட்டு களத்திலும் மேடையிலும்—வன்முறையினால் கறைப்பட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில் ஒரு முன்னாள் உதைப்பந்தாட்டக்காரர் இவ்விதமாக எழுதினார்: “கொல்லுவதும் முடமாக்குவதும் யுத்தத்தின் உட்கோளாக இருப்பது போல உதைப்பந்தாட்டத்தின் உண்மையான உட்கோள் உடலை நொறுக்குவதாக இருக்கிறது.” மேலுமாக அவர் சொல்வது: “போட்டியால் முடிவு செய்யப்படும் ஒருமுகப்படுத்தப்பெற்ற காயப்படுத்துதல் நம்முடைய வாழ்க்கை முறைக்கு அத்தியாவசியமாகும், உதைப்பாந்தாட்டம், உன் அயலானை அடித்து நொறுக்குவது எத்தனை கிளர்ச்சியூட்டுவதாயும் கண்கூடாக பயனளிப்பதாயும் இருக்கிறது என்பதை நமக்குக் காண்பிக்கும் . . . அதிக விளக்கமான கண்ணாடிகளில் ஒன்றாக இருக்கிறது.”
உன் அயலானை அடித்து நொறுக்குவதா? இயேசு உன் அயலானை நேசி என்பதாகச் சொன்னார். (மத்தேயு 22:39) அன்பின் கடவுள் எப்படியாகிலும் வெற்றி என்பதை வலியுறுத்தும் இன்றைய விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒன்றில் பிரசன்னமாயிருந்து ஆசீர்வதிப்பது என்பதை கற்பனை செய்வது சாத்தியமற்றதாகும்.—1 யோவான் 4:16.
கடவுள் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு வருகை தருகிறாரா?
விளையாட்டில் ஜெபிப்பதை ஊக்குவிக்கும் ஒரு காரியமானது, கடவுள் எங்கும் நிறைந்தவர், கடவுள் எல்லாச் சமயங்களிலும் உண்மையில் உளதாயிருக்கும் எல்லா இடங்களிலும் காரியங்களிலும் பிரசன்னமாயிருக்கிறார் என்ற மத போதகமே ஆகும். உதாரணமாக, கடவுள் உதைப்பந்தாட்ட விளையாட்டுக்குச் செல்கிறார் என்ற புத்தகத்தில் பாதிரியும் முன்னாள் விளையாட்டுக் குழுத்தலைவருமான தனி மதகுரு L. H. ஹோலிங்ஸ்வொர்த் சொல்வதாவது: “கடவுளைப் பற்றி நாம் கொண்டிருக்கும் சம்பிரதாயமான நம்பிக்கையில், அவர் எங்கும் நிறைந்தவர், நீங்கள் விரும்பினால், நாம் இவ்வுலகிற்குரிய அனுபவம் என்பதாக அழைக்கும் காரியத்தில் அவர் நிச்சயமாகவே பிரசன்னமாயிருக்கிறார் என்ற கருத்து உள்ளடங்கியிருக்கிறது . . . அதாவது சொல்லப்போனால், கடவுள் சர்ச்சுக்குப் போகிறார், கடவுள் உதைப்பந்தாட்ட விளையாட்டுக்குப் போகிறார்.”
என்றபோதிலும், கடவுள் எங்கும் இருக்கும் தன்மையுள்ளவர் என்பதாக பைபிள் கற்பிப்பதில்லை. கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாவது: “கிறிஸ்துவானவர் . . . பரலோகத்திலே தானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.” (எபிரெயர் 9:24) இந்த வசனம் இரண்டு முக்கிய குறிப்புகளை மதித்துணர நமக்கு உதவி செய்கிறது: கடவுள் ஓர் ஆவி ஆளாக இருக்கிறார், பரலோகத்தில், வசிப்பதற்கு ஸ்தபிக்கப்பட்ட ஓரிடத்தைக் கொண்டிருக்கிறார் என்பதே. (1 இராஜாக்கள் 8:49; யோவன் 4:24) ஆகவே அவர் அதே சமயத்தில் வேறு ஓர் இடத்திலும் இருக்கமுடியாது.
கடவுள் தம்முடைய நண்பர்களுக்கு செவிகொடுக்கிறார்
சரி, அவர் விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு வருகை தருவதில்லை என்றால், குறைந்தபட்சம் அவர் ஜெபங்களுக்காவது செவிகொடுக்கிறாரா? ஜெபங்கள், இயேசு பிரத்தியட்சமான பரலோகத்தின் இந்தக் கடவுளின் கேட்கும் செவிகளைச் சென்றடைய, ஜெபிக்கிறவர் அறிவுள்ளவராக, கடவுளுடைய நோக்கங்கள், அவருடைய ஆள்தன்மை, அவருடைய குணாதிசயங்கள், அவருடைய வழிகள் மற்றும் அவருடைய பெயரைப் பற்றிய அறிவுள்ளவராக இருக்கவேண்டும். (யாக்கோபு 4:3) கடவுளை அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறவராய் இயேசு இவ்விதமாக ஜெபித்தார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”—யோவான் 17:3.
ஒருவரை அறிந்துகொள்வதற்கு பேச்சுத் தொடர்பு தேவைப்படுகிறது. கடவுள் மனிதனோடு பைபிளின் மூலமாக பேச்சுத்தொடர்பு கொள்கிறார், பைபிளின் மூலமாகவே பரலோகத்தின் தேவனை நாம் அறியவருகிறோம். அது யெகோவா என்ற அவருடைய பெயரை நமக்குச் சொல்லுகிறது. (சங்கீதம் 83:18) கடவுள் உலகத்தை அவ்வளவாக நேசித்ததன் காரணமாக, மனிதன் நித்திய ஜீவனுக்கான வாய்ப்பைக் கொண்டிருக்கும்படிக்கு இங்கே பூமிக்குத் தம்முடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசுவை அனுப்பினார் என்பதாகவும்கூட பைபிள் சொல்லுகிறது. (யோவான் 3:16) நாம் பைபிளை வாசித்து படிக்கையில், யெகோவா நமக்கு மெய்யானவராகிவிடுகிறார், இயேசுவின் மூலமாக நாம் அவரிடமாக கவர்ந்திழுக்கப்படுகிறோம். (யோவான் 6:44, 65; யாக்கோபு 4:8) யெகோவா மெய்யானவராக இருப்பதால், நாம் அவரோடு நெருக்கமான தனிப்பட்ட ஓர் உறவை வளர்த்துக் கொள்ளமுடியும்.
ஆனால் கடவுளோடு நட்பு இரு–வழி பேச்சுத் தொடர்பை உட்படுத்துகிறது. இது யெகோவாவிடம் ஜெபத்தின் மூலமாக பேசுவதைத் தேவைப்படுத்துகிறது. கடவுள் “ஜெபத்தைக் கேட்கிறவர்” என்றும் “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்றும் பைபிள் சொல்லுகிறது. (சங்கீதம் 65:2; அப்போஸ்தலர் 17:27) என்றபோதிலும், இது கடவுள் எல்லா ஜெபங்களுக்கும் செவிகொடுக்கிறார் என்பதை அர்த்தப்படுத்தாது. (ஏசாயா 1:15–17) யாருடைய ஜெபத்தைக் கேட்க கடவுள் மனமுள்ளவராக இருக்கிறார்?
சங்கீதக்காரனாகிய தாவீது சொன்னான்: “யெகோவாவுடன் நெருக்கமான உறவு அவருக்கு பயந்தவர்களுக்கு உரியதாயிருக்கிறது.” (சங்கீதம் 25:14, NW) மூல எபிரெயுவில், “நெருக்கமான உறவின்” வேர்ச்சொல் (sohd) “இறுக்கமாக்குவது” என்ற பொருளுடையதாக இருக்கிறது. ஆகவே, இந்த வசனம் யெகோவாவின் உட்புற குழுவுக்குள் அல்லது அவரோடு நட்பான ஓர் உடன்படிக்கைக்குள் அனுமதி வழங்கப்படும் கருத்தை உடையதாக இருக்கிறது. தகுதியான மரியாதையைக் காண்பிக்கும் வணக்கத்தார் மாத்திரமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதன்காரணமாக, கடவுளோடு நம்முடைய நெருக்கமான நட்பு, ஒரு விளையாட்டில் வெற்றியை உறுதிசெய்வதற்கு ஜெபத்தை ஓர் அதிர்ஷ்ட மந்திரமாக கருதுவது போன்று அவருக்கு சினமூட்டக்கூடிய எதையும் செய்வதன் மூலம் அந்த உறவை முறித்துக்கொண்டுவிட பயப்படும்படி நம்மைச் செய்கிறது.
யெகோவா தம்மோடு நட்பை நாடும் நேர்மையான இருதயமுள்ள ஆட்களின் ஜெபங்களுக்குச் செவிகொடுக்கிறார். அவர் பட்சபாதமுள்ளவரல்ல. அவர் தனிச்சலுகைக்குரியவர் என்ற அடிப்படையில் செயல்படுவதோ அல்லது ஒரு தேசீய குழு, இனம் அல்லது விளையாட்டுக் குழுவைக்கூட மற்றொன்றிற்கு மேலாக கனப்படுத்துவதோ இல்லை. (சங்கீதம் 65:2; அப்போஸ்தலர் 10:34, 35) விளையாட்டில் போட்டியிடுபவர்களின் ஜெபங்களை கடவுள் கேட்கிறவராக இருந்து, வெற்றிக்காக இரு ஆட்டக்குழுக்களுமே அவரிடம் ஜெபித்தால், அவர் எதை ஆசீர்வதிக்க வேண்டும்? அல்லது ஆட்டக்காரர் ஒருவர் விளையாட்டின் போது கவலைக்கிடமாக காயமடைவாரேயானால், கடவுள் குற்றஞ்சாட்டப்படுவாரா?
ஆகவே, நாம் சரியான காரியங்களுக்காக ஜெபிக்க வேண்டும். அப்போஸ்தலனாகிய யோவன் அதை இவ்விதமாக விளக்குகிறான்: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறார்.” (1 யோவான் 5:14) யெகோவா, அவருடைய சித்தத்துக்கு இசைவாக இருக்கும் ஜெபங்களுக்கு செவிகொடுக்கிறார். நம்முடைய ஜெபங்கள் அவருடைய சித்தத்தோடும் நோக்கங்களோடும் இசைவாக இருக்கும் பொருட்டு அவைகளை அறிந்திருப்பது அவசியமாகும்.
கடவுளுடைய சித்தமும் நோக்கங்களும் அவருடைய மகத்தான நாமமும் இன்றைய போட்டியால் முடிவுசெய்யப்படுகிற மற்றும் வன்முறையான விளையாட்டு நிகழ்ச்சிகளோடு சம்பந்தப்பட்டவையாக இல்லை. கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல. இதன் காரணமாக, இந்த நிகழ்ச்சிகளில் ஜெபங்கள் ஏறெடுக்கப்படுகையில் கடவுள் செவி கொடுக்கிறாரா? நிச்சயமாக இல்லை! (g90 5/8)