உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g92 12/8 பக். 25-27
  • இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குதல்
  • விழித்தெழு!—1992
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மெளன கே ஏறுதல்
  • ஏன் இங்கே?
  • ஆய்வுக்கூடங்களுக்கு உள்ளே
  • நட்சத்திரங்கள் நமக்கு எதைச் சொல்கின்றன?
  • ஆறு தூதுவர்கள் புறவெளியிலிருந்து
    விழித்தெழு!—1996
  • “வானத்து நட்சத்திரங்களைப் போல”
    விழித்தெழு!—1989
  • பிறக்கும் தீவுகள்
    விழித்தெழு!—1998
  • அவ்வளவு புதிரானது, ஆயினும் அவ்வளவு அழகானது
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1992
g92 12/8 பக். 25-27

இந்தப் பிரபஞ்சத்தை உற்றுநோக்குதல்

ஹவாயில் உள்ள விழித்தெழு! நிருபரால்

நீங்கள் காலத்தைப் பின்னோக்கிப் பார்க்க விரும்பினால், அதை நீங்கள் செய்யமுடியுமா? பதில், ஆம்! என்பதே.

உண்மையில், நாம் நட்சத்திரங்களடங்கிய வானத்தைப் பார்க்கும் போதல்லாம், ஏற்கெனவே கடந்துபோன காலத்தை உற்றுநோக்குகிறோம். ஆனால் அந்தக் கண்ணைக் கவரும் கடந்தகாலக் காட்சியைக் கண்டு மகிழ்வதற்கு நாம் எங்கு போகலாம்? சரி, பாலினீசியா நாட்டைச் சேர்ந்த மக்கள் ஹவாயைக் கண்டுபிடிக்க நட்சத்திரங்களைப் பின்பற்றியதுபோல, இன்று அநேகர் நட்சத்திரங்களைப் பின்பற்ற அல்லது காண இந்தத் தீவு நாட்டுக்கு வருகிறார்கள். எனினும், வான்கோளங்களின் தொழில்நுட்பத்தின் உயர்தரமான அமைப்பை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். இத்தொழில்நுட்பம் கடந்த காலத்தை மானிடர்கள் அதிகமாக காண்பதற்கு உதவி செய்கிறது.

நாம் இப்பொழுது ஹவாய் தீவுக்கு, அல்லது அந்தப் பெரிய தீவுக்குப் போகலாம். அங்கு நாம், மெளன கே என்னும் ஒரு செயலற்ற எரிமலையின் உச்சிக்கு ஏறுவோம். அங்கு 4,205 மீட்டர் உயரத்தில், பிரபஞ்சத்தை உற்றுநோக்குவதற்காகவே கட்டப்பட்ட உலகின் அருமையான விண்வெளி ஆய்வுக்கூடங்களில் சிலவற்றை நாம் காண்போம்.

மெளன கே ஏறுதல்

அதிகாலையில் ஆரம்பித்த, மெளன கேவுக்கு மேல்செல்லும் எங்களுடைய பயணம், நீண்டதாகவும் வளைந்துவளைந்துசெல்வதாகவும் இருக்கிறது. கீழ்ச்சரிவில் உள்ள சூடான தட்பவெப்பநிலையை விட்டு வந்தோம், இங்கு ஒரு வருடத்திற்கு 500 சென்டிமீட்டருக்கும் மேலாக மழை பெய்யும். தொடர்ந்து இந்தச் செயலற்ற எரிமலையின் வறண்ட மேல் சரிவுகளை நோக்கி ஏறினோம், இங்கு வருடத்தின் அநேக மாதங்களில் வெண்பனி மூடியிருக்கும். மரங்கள் நிறைந்த உச்சிப் பகுதியை நாங்கள் கடந்து சென்றபோது ஒரு செங்குத்தான, ஆபத்தான புழுதி சாலையை அடைந்தோம். ஏன் ஒரு நான்கு-சக்கர-இயக்க வண்டி தேவையாயிருக்கிறது என்பது இப்பொழுது எங்களுக்குப் புரிகிறது.

இறுதியாக நாங்கள் உச்சியை அடைந்து, அங்கு அநேக ஆய்வுக்கூடங்கள் இங்குமங்குமாக இருப்பதைக் காண்கிறோம். இங்கு காற்றுமண்டலம் ஊக்கம் தருவதாகவும் தெளிவானதாகவும் ஒளி ஊடுருவும் தன்மையுடையதாகவும் இருக்கிறது. வாகனத்தை நிறுத்திவிட்டு, நாங்கள் வெளியே வந்தோம். விரைந்து அடிக்கும் பனிக்காற்றுகள் எங்களை உடனே கடுங்குளிருக்கு ஆளாக்கின. எனினும், நாங்கள் சுற்றிப் பார்க்கும்போது ஓர் ஆய்வுத்திறன் சம்பந்தமான பூரிப்பு எங்களுக்குள் அதிகரிக்கிறது. சுற்றியுள்ள மேக உறைக்கு மேலாக நாங்கள் ஒரு வறண்ட எரிமலையின் மேல் நின்றுகொண்டிருக்கிறோம்! அது மற்ற எல்லா நில மற்றும் சமுத்திர காட்சிகளிலிருந்து நாங்கள் வெளித்தோற்றத்தில் துண்டிக்கப்பட்டவர்களாக இருப்பதைப் போல் இருந்தது!

ஏன் இங்கே?

வானவியல் ஆராய்ச்சியாளர்கள், 1960-களின் ஆரம்பகாலங்களில், விண்வெளியையும் கடந்தகாலத்தையும் உற்றுநோக்குவதற்காக தங்களுடைய முதலாவது பெரிய தீவு ஆராய்ச்சிக்கூடத்தைக் கட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஏன் இங்கே, பசிபிக் சமுத்திரத்தில், இவ்வளவு தூரத்தில், ஒரு தீவில் இருக்கும் எரிமலையின் மேல்?

நட்சத்திரங்கள் அடங்கிய வானங்களை ஆராய்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த விசேஷித்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு நான்கு அடிப்படைக் காரணங்கள் இருக்கின்றன: (1) ஆண்டுதோறும் தெளிவான இரவுகள் அதிகமாக இருத்தல்; (2) காற்றின் தெளிவான, உறுதிமிக்க தன்மை உருச்சிதைவு அதிகம் ஏற்படாமல் காண அனுமதிக்கிறது. (3) பெரிய தீவுக்கான ஒளிக் கட்டுப்பாடு விதிகளால் பாதுகாக்கப்பட்ட மிகவும் குறைவான இரவு வெளிச்ச அளவு; மேலும் (4) மிகக் குறைந்த ஈரப்பதம். இந்தக் கடைசி காரணம் ஏன் முக்கியமானது? ஏனென்றால் சில வகை கருவிகளை ஈரப்பதம் கெடுத்துவிடுகிறது.

விசித்திரமான காற்றுமண்டலத் தன்மைகள் நாம், வெறும் சாதாரண பார்வை எளிதில் காணமுடிவதுதானே இந்த இடத்தை, வெளிமண்டலத்தை உற்றுப்பார்ப்பதற்கு ஒரு பொருத்தமான இடமாக்குகிறது. மெளன கே, நட்சத்திரங்களை ஆராய்வதற்குரிய நெருங்கிய-பூரணபொறுத்தமுள்ள இடமாகக் கருதப்படுவதில் வியப்பு ஏதுமில்லை.

ஆய்வுக்கூடங்களுக்கு உள்ளே

நாங்கள் எங்களுடைய வழிகாட்டியைச் சந்தித்து, அவரோடு சேர்ந்து W. M. கெக் ஆய்வுக்கூடத்தை நோக்கிச் சென்றோம். இது இதுவரை அமைக்கப்பட்டதில் மிகப்பெரிய, தொலதூரத்தில் நோக்குவதில் மிக அதிக ஆற்றலை உடைய தொலநோக்கியை உடையதாக இருக்கிறது.

நாங்கள் உள்ளே நுழையும்போது, வானவியல் வல்லுநர்கள் இனிமேலும் சாதாரணக் கண்களால் இந்தத் தொலநோக்கிகளுக்குள் உற்றுநோக்குவதில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே உணர்ந்தோம். இல்லை, அதெல்லாம் அந்தக் காலம்! இன்று விஞ்ஞானிகள் ஆற்றல்மிக்க கம்ப்யூட்டர்கள் மூலமும் மற்ற அதிநவீன கருவிகள் மூலமும் தொலநோக்கியோடு தொடர்புகொள்கிறார்கள். இந்தக் கம்ப்யூட்டர்-துணையுள்ள கருவி, சாதாரணக் கண்கள் காண முடிந்ததைவிட கோடிக்கணக்கான தடவைகள் அதிகமான நோக்கும் திறனை உடையது.

வியப்பூட்டுகிறது அல்லவா? இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் வானவியல் வல்லுநர்கள் வெறும் ஒருசில நாட்களில் சேகரிக்கும் செய்திகளின் அளவானது, பின்வரும் அநேக மாதங்களுக்கு அவர்கள் அந்தச் சேகரிக்கப்பட்ட செய்திகளை ஆராய்ந்து மதிப்பிடும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுத்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது.

வானவியல் தொழில்நுட்பத்தின் பிரபலமானதாக W. M. கெக் ஆராய்ச்சிக்கூடத்தை வைக்கும் காரியத்திற்கு அதாவது அந்தத் தொலநோக்கியின் தனிச்சிறப்புமிக்க வடிவமைப்பிற்கு, இப்பொழுது எங்களுடைய கவனத்தை எங்கள் வழிகாட்டி ஈர்க்கிறார். ஒவ்வொன்றும் ஏறக்குறைய 1.8 மீட்டர் குறுக்களவுள்ள, 36 ஆறுபக்க கண்ணாடி பிரிவுகளை நாங்கள் காண்கிறோம். இவை, 10 மீட்டர் விட்டமுள்ள ஒரு கண்ணாடிக்குச் சமம் ஆகும்.

இந்தத் தொலநோக்கி எவ்வாறு வேலைசெய்கிறது என்பதைப் பற்றி, வானவியல் ஆராய்ச்சிக்காக உள்ள கலிஃபோர்னியா அமைப்பிலிருந்து வந்த ஒரு பத்திரிகை வெளியீடு இவ்வாறு சொல்கிறது: “மனித முடி ஒன்றின் அகலத்திற்கு ஓராயிரம் தடவைகள் குறைவான—ஓர் அங்குலத்தின் 10 லட்சத்தில் ஒரு பாகம் வரையான மிக நுண்ணிய அளவிற்கு இவற்றின் நிலைகள் மின்னியக்கக் கணிப்பினால் வரையறுக்கப்படுவதும்,” இதனுடைய வெறும் கால்பாக கண்ணாடிகளே அவற்றின் இடத்தில் அமைக்கப்பட்டும் இருப்பது, இதைக் கலிஃபோர்னியாவில் உள்ள “பலோமார் ஆய்வுக்கூடத்தில் இருக்கும் 5 மீட்டர் நீளமுள்ள ஹேல் தொலநோக்கியின் இயங்குதிறனுக்கு ஏற்கெனவே சமமாக” ஆக்குகிறது.

இது மட்டும் அல்ல. இதற்கு அருகில் வைக்கப்படப்போகும் இன்னும் கட்டப்பட்டு வருகிற இரண்டாவது தொலநோக்கிக்காக, பணவசதியை சமீபத்தில்தான் இவர்கள் பெற்றிருக்கிறார்கள் என எங்களுடைய வழிகாட்டி எங்களுக்குத் தெரிவிக்கிறார். இதுவரை பார்க்கவே முடியாது என்று நினைத்த தூரத்திற்கு விண்வெளியைப் பார்ப்பதற்கு, இந்த இரட்டை தொலநோக்கிகள் மிகப்பெரிய விண்வெளி பைனாக்குலர்களின் ஒரு ஜோடியாக செயல்படுகின்றன. இங்கு இருப்பது உண்மையிலேயே கிளர்ச்சியூட்டுவதாக இருக்கிறது!

எனினும், இந்த உயரமான இடத்தில், நாங்கள் கிளர்ச்சியடைய விரும்பவில்லை, ஏனென்றால் உயிர்வளிக்குறை இயல்பு, அதாவது உடம்பின் திசுக்களுக்குப் பிராணவாயுவின் பற்றாக்குறையை, நாங்கள் வெளிப்படையாக உணர முடிந்தது. பேச்சைப் பேசுவதற்கும் எங்களுடைய நினைவுகளை ஒருமுகப்படுத்துவதற்கும் நாங்கள் கடும்முயற்சி எடுக்கும்பொழுது, எங்களுடைய புத்திக்கூர்மை அதன் சிறந்த முறையில் செயல்படாதிருப்பதை நாங்கள் உணரமுடிகிறது. உண்மையில், இந்த உயரத்தில் அதிவேகமாக நகருவது அல்லது அதிக பலத்தோடு பிரயாசப்படுவது, தலைவலி, குமட்டல் உணர்ச்சி, மேலும் மயக்க உணர்வுகளை உண்டாக்கும். தெளிவாகவே, உடல்நலமற்றவருக்கு இது இடமல்ல.

ஆகவே, மலைஉச்சியில் ஐந்து மணிநேரங்களைச் செலவிட்ட பின்பு, மலைக்குக் கீழே 2,800 மீட்டர் உயரமட்டத்திற்கு வரும் நேரம் வந்தது. இதுவரை ஒரு பயன்மிக்க காலைப்பொழுதாக இருந்துவந்திருக்கிறது.

நட்சத்திரங்கள் நமக்கு எதைச் சொல்கின்றன?

இந்த 2,800 மீட்டர் மட்டத்தில், சுமார் 50 வானவியல் வல்லுநர்கள் மற்றும் உதவியாட்களுக்குத் தேவையான தங்கும் வசதியும் மற்ற வசதிகளும் இங்கு இருக்கின்றன. மேலும், இந்த மட்டத்தில்தான் பார்வையாளர்கள் மையம் ஒன்று இருக்கிறது, இங்கு மெளன கே ஆய்வுக்கூடத்தைப் பற்றிய பேச்சுகளை நீங்கள் கேட்கலாம்.

கூடுதலாக, அங்குத் தங்குவதற்கு விரும்புகிறவர்களுக்கு ஒரு விருந்தாக, 28 சென்டிமீட்டர் தொலநோக்கி ஒன்றின் மூலம் இரவுநேர நட்சத்திரங்களைக் காணுதல் இருக்கும், இதோடு ஹவாய் பல்கலைக்கழகத்தினுடைய சொந்த தகுதிமிக்க விஞ்ஞானிகளின் விளக்கவுரையும் இருக்கும். நாங்கள் செய்ததுபோல், நீங்கள் தங்கியிருந்து பார்த்தீர்கள் என்றால், நீங்கள் உற்சாகம் இழக்க மாட்டீர்கள். சுருங்கச்சொன்னால், நட்சத்திரங்கள் கொடுக்கும் சான்றுகளைத் தெரிந்துகொண்டு, இந்த ஓர் அரிய நாளை முடிப்பது கற்றுக்கொள்வதற்கு மிகச்சிறந்த ஒரு முறையாகும்.

காலத்தைப் பின்னோக்கிப் பார்க்கலாம் என்று ஆரம்பத்தில் நாங்கள் ஏன் சொன்னோம் என்று நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படலாம். இந்தக் கருத்தைப் புரிந்துகொள்வதற்கு ஓர் உதாரணம் உங்களுக்கு உதவிசெய்யலாம். எடுத்துக்காட்டாக, ஆன்ட்ரோமேதா நட்சத்திரமண்டலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு தெளிவான இரவில், சாதாரண கண்களுக்கு இதன் வெளிச்சம் தெரியக்கூடியதாக இருக்கும். பூமியிலிருந்து இந்த நட்சத்திரங்கள் அடங்கிய தீவுப்பிரபஞ்சம் எவ்வளவு தூரத்திலிருக்கிறது என்பதையும் அந்த ஒளி ஒரு நிமிடத்திற்கு 2,99,792 கிலோமீட்டர் தூரம் பிரயாணம்செய்கிறது என்பதையும் அறிந்ததினால், ஆன்ட்ரோமேதா நட்சத்திரமண்டலத்திலிருந்து வருவதாக நீங்கள் பார்க்கும் அந்த ஒளி 15,00,000 வருடங்களுக்குப் பழமையானது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்! ஆம், நட்சத்திர ஒளியைப் பார்ப்பது, உண்மையில் காலத்தைப் பின்னோக்கி பார்ப்பதாக இருக்கிறது.

மெளன கே-வில் உள்ள இந்தப் புதிய மேம்பட்ட தொலநோக்கிகளின் உதவியினால், இப்பொழுது மனிதன் இன்னும் அதிகமாக காலத்தைப் பின்நோக்கி பார்க்கவும் வெளிமண்டலத்தில் இன்னும் அதிக தூரம் சென்றுபார்ப்பதற்கும் உள்ள திறமையை உடையவனாக இருக்கிறான். இது ஏனென்றால், நவீன தொலநோக்கிகள் சாதாரண கண்களைவிட மிக அதிக ஆற்றல் உடையவையாக இருக்கின்றன. உண்மையில், இன்றைய தொழில்நுட்பத்தினால், வானவியல் வல்லுநர்கள் 800 கோடி ஆண்டுகளுக்கும் பழமையான நட்சத்திர ஒளியைப் பார்க்கிறார்கள்! இப்படிப்பட்ட செய்திகளைச் சேகரிப்பதன் மூலம், நட்சத்திரங்கள் எப்படி வந்தன, மேலும் பிரபஞ்சம் எப்படி உருவாகியது என்பதை மிக தெளிவாக புரிந்துகொள்ள முடியும் என அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

பார்வையாளர்களாகிய எங்களுக்கு நிஜமாகவே இந்த நாள் மற்ற நாட்களைவிட விசேஷித்ததாக இருக்கிறது. நாங்கள் பார்த்த காரியங்கள் எங்களுடைய மனதில் அதிக நாட்களுக்கு ஆழமாகப் பதிந்து இருக்கும். வானவியல் வல்லுநர்கள் காண்பதும், காணப்போவதும், நம்மை படைப்பின் அதிசயங்களைக் கண்டு வியப்படையச் செய்கிறது. நாங்கள் இனிமேல் ஒருபோதும் நட்சத்திரங்கள் அடங்கிய வானங்களை வெறுமென கண்ணோட்டமிட்டுவிட்டு, திரும்பிக்கொள்ளமாட்டோம். இதுமுதல் இந்த நிகழ்ச்சியையும் இந்த மலையின் ஆய்வுக்கூட இருப்பிடத்தையும் நாங்கள் நினைவில் வைப்போம்.

நமக்கு வியப்புணர்வின் இப்படிப்பட்ட ஊற்றுமூலமாக இருக்கிற பிரபஞ்சத்தைப் படைத்தவரைப் போற்றுவதற்கு, நம்மெல்லாரையும் இவ்வகையான அனுபவங்கள் தூண்டிவிடட்டும்.—ஏசாயா 40:26; 42:5. (g91 12⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்