உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g93 12/8 பக். 3-4
  • இனம் என்பது என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இனம் என்பது என்ன?
  • விழித்தெழு!—1993
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனிதர்களை வகைப்படுத்துவதில் பிரச்னை
  • “மனிதனின் மிக அபாயகரமான கட்டுக்கதை”
  • எல்லா இனத்தவரும் சமாதானத்தோடு ஒன்றுசேர்ந்து வாழும்போது
    விழித்தெழு!—1993
  • இனத்தைப் பற்றி கர்வம் கொள்ளலாமா?
    விழித்தெழு!—1998
  • மனிதவர்க்க மரபினர்கள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • இனத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன?
    விழித்தெழு!—1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—1993
g93 12/8 பக். 3-4

இனம் என்பது என்ன?

இனம்! அந்த வார்த்தை எதை உங்கள் மனதிற்குக் கொண்டுவருகிறது? சிலருக்கு அது வேறுபாட்டையும் ஒடுக்குதலையும் அர்த்தப்படுத்துகிறது. மற்றவர்களுக்கு வெறுப்பையும், கலவரங்களையும், ஏன், கொலையையும்கூட அர்த்தப்படுத்துகிறது.

ஐக்கிய மாகாணங்களின் இனக் கலவரங்கள் முதல் தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கீட்டுக் கொள்கை வரை, கிழக்கு ஐரோப்பாவில் இனத் தொகுதிகளிடையே ஏற்படும் போர்களிலிருந்து இலங்கை, பாகிஸ்தான் போன்ற இடங்களில் நடைபெறும் போராட்டங்கள் வரை—இனம் சொல்லித்தீராத மனித துயரத்தின் மற்றும் அழிவின் மையமாக ஆகிவிட்டிருக்கிறது.

ஆனால் ஏன் இந்த நிலைமை? பெரும்பாலும் மக்கள் மற்ற எல்லாவற்றையும் சகித்துக்கொள்வதாகத் தோன்றும் தேசங்களில்கூட, இனம் ஏன் உணர்ச்சியைக் கிளறிவிடும் அத்தகைய ஒரு பிரச்னையாக இருக்கிறது? அவ்வளவதிக குழப்பத்தையும் அநீதியையும் கொளுத்திவிடும் திரியாக இனத்தை ஆக்கியிருப்பது எது? சுருங்கச் சொன்னால், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஏன் இணங்கி வாழமுடிவதில்லை?

இக்கேள்விகளுக்குப் பதிலளிக்க, இனம் என்பது என்ன, எவ்வகைகளில் இனத்தவர் வித்தியாசப்படுகின்றனர் என்பவற்றைவிட அதிகத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. தற்கால இனத்தவரின் உறவுமுறைகளில் வரலாறு வகிக்கும் பங்கைப்பற்றியும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். எனினும், முதலாவதாக, இப்பொருளைப்பற்றி அறிவியல் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

மனிதர்களை வகைப்படுத்துவதில் பிரச்னை

உலகின் வெவ்வேறு பாகங்களில் வாழும் மக்கள் பல்வகைப்பட்ட உடற்பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். இவை தோலின் நிறம், முக வடிவங்கள், மயிரின் தன்மை போன்றவற்றை உள்ளடக்குகின்றன. உடற்பண்புகளின் அத்தகைய வித்தியாசங்கள் ஓர் இனத்தவரை மற்றொரு இனத்தவரிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.

இதன் காரணமாக, தோலின் நிறத்துக்குக் கவனத்தை ஈர்க்கும் வகையில், வெள்ளையர், கறுப்பர் என்பவர்களைப்பற்றி மக்கள் பொதுவாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் ஹிஸ்பானியர், ஆசியர், ஸ்காண்டிநேவியர், யூதர், ரஷ்யர் என்பவர்களைப்பற்றியும்கூட மக்கள் பேசிக்கொள்கின்றனர். இரண்டாவதாகக் கூறப்பட்ட இந்த அடையாளங்கள் உடற்பண்புகளின் வித்தியாசங்களைவிட புவியமைப்பு, நாடு, அல்லது பண்பாடு போன்றவற்றைச் சார்ந்த வித்தியாசங்களையே அதிகம் குறிக்கின்றன. ஆகவே, பெரும்பாலான மக்களின் விஷயத்தில், இனம் உடற்பண்புகளைக் கொண்டு மட்டுமல்லாமல், பழக்கவழக்கங்கள், மொழி, பண்பாடு, மதம், நாடு போன்றவற்றின் பேரிலும் தீர்மானிக்கப்படுகிறது.

இருப்பினும் ஆர்வமூட்டும் வகையில், இந்தப் பொருளின் மீது எழுதும் சில எழுத்தாளர்கள் “இனத்தினர்” என்ற வார்த்தையை உபயோகிக்கவே தயங்குகின்றனர்; அவ்வார்த்தை தோன்றும் ஒவ்வொரு முறையும் அதை மேற்கோள் குறிகளுக்குள் எழுதுகின்றனர். மற்றவர்கள் அந்த வார்த்தையை முழுமையாக தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக “இன வகைப்பாட்டுக் குழுவினர்,” “தொகுதியினர்,” “ஜனத்தொகையினர்,” “வகையினர்,” போன்ற சொற்றொடர்களை உபயோகிக்கின்றனர். ஏன்? ஏனென்றால் “இனம்” என்ற வார்த்தை, பொதுவாக புரிந்துகொள்ளப்படுவது போல, தவறான கருத்துக்களோடும் சிக்கல்களோடும் பொதிக்கப்பட்டுள்ளதால், தகுந்த விளக்கம் தராமல் இந்த வார்த்தையை உபயோகிப்பது அடிக்கடி கலந்தாலோசிக்கப்படும் பொருளைத் தவறாகக் காண்பிக்கிறது.

உயிரியல் வல்லுநர்களுக்கும் மானிடவியல் வல்லுநர்களுக்கும், ஓர் இனமானது வெறுமனே “ஓர் இனத்தின் (species) மற்ற ஜனத்தொகைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிற உடற்பண்புகளைப் பெறும் அந்த இனத்தின் ஓர் உட்பிரிவாகவே அடிக்கடி விளக்கப்படுகிறது.” இருப்பினும், கேள்வி என்னவென்றால், மனிதவினத்திற்குள்ளேயே வித்தியாசப்பட்ட தொகுதிகளை விவரிக்க எந்தப் பண்புகளை உபயோகிக்கலாம்?

தோலின் நிறம், மயிரின் நிறம் மற்றும் அமைப்பு, கண்கள் மற்றும் மூக்கின் வடிவம், மூளையின் அளவு, இரத்தத்தின் வகை போன்ற அம்சங்கள் குறிப்பிடப்பட்டன. ஆனால் இவற்றில் ஒன்றுகூட மனிதவர்க்கத்தின் வகைகளை வகைப்பாடு செய்யும் ஒரு பூரண திருப்திகரமான அம்சமாக நிரூபிக்கப்படவில்லை. அனைத்து அங்கத்தினருமே அத்தகைய அம்சங்களை ஒரே மாதிரியாக பெற்றிருக்கும் எந்தவொரு ஜனத் தொகுதியும் இயற்கையில் அமைந்திருப்பது கிடையாது என்பதே இதற்குக் காரணம்.

தோலின் நிறத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தோலின் நிறத்தைக் கொண்டு மனிதவர்க்கம்: வெள்ளையர், கறுப்பர், பழுப்பு நிறத்தவர், மஞ்சள் நிறத்தவர், சிவப்பு நிறத்தவர் போன்ற ஐந்து இனத்தவராக எளிதில் பிரிக்கப்படலாம் என்று பெரும்பாலான ஜனங்கள் கருதுகின்றனர். வெள்ளை இனத்தவர் பொதுவாகவே வெள்ளைத் தோலையும், பழுப்புநிற மயிரையும், நீலநிற கண்களையும் கொண்டிருப்பதாக பிரித்துணரப்படுகின்றனர். எனினும், வெள்ளை இனத்தவர் என்று அழைக்கப்படும் இனத்தவரின் அங்கத்தினர்களுக்குள்ளேயே உண்மையில், மயிர் நிறத்திலும், கண் நிறத்திலும், தோல் நிறத்திலும் அநேக வகைகள் இருக்கின்றன. மனிதவினம் (The Human Species) என்ற புத்தகம்: “ஒரே வகையைச் சேர்ந்த பெரும்பாலான அங்கத்தினர்களைக் கொண்ட ஜனத்தொகைகள் ஐரோப்பாவில் இன்று இல்லை என்பது மட்டுமல்ல; அத்தகைய ஜனத்தொகைகள் ஒருபோதுமே இருந்ததில்லை,” என்று தெரிவிக்கிறது.

உண்மையில், மனிதவர்க்க வகைகள் (The Kinds of Mankind) கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறதுபோல, மனிதவினத்தை வகைப்படுத்துவது கடினமாக இருக்கிறது: “நாம் எல்லாரும் இவ்வளவுதான் சொல்ல முடியும்போல் தோன்றுகிறது: எல்லா மனிதர்களும் மற்ற மனிதர்களைப்போலவே தோற்றத்தில் ஒத்திருப்பதில்லையென்றாலும், ஜனங்கள் வித்தியாசமாக தோன்றும் அநேக வழிகளை நாம் தெளிவாக காணமுடிந்தாலும், சரியாக எத்தனை மனிதவர்க்க வகைகள் இருக்கின்றன என்பதன்பேரில் விஞ்ஞானிகள் இன்னும் ஒத்திசைந்து போகவில்லை. ஜனங்களை ஓர் இனத்தவரோடோ மற்றொரு இனத்தவரோடோ வகைப்படுத்த என்ன அளவைகளைப் பயன்படுத்தலாம் என்றும்கூட அவர்கள் தீர்மானிக்கவில்லை. சில ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியைக் கைவிட்டுவிட விரும்புகின்றனர். தீர்வே காணமுடியாமல்—பிரச்னை மிகக் கடினமாக இருக்கிறது! என்று அதற்கு அவர்கள் காரணம் காட்டுகின்றனர்.”

இவையெல்லாம் புதிராகத் தோன்றலாம். விலங்குகளையும் தாவரங்களையும் பேரினமாகவும் சிற்றினமாகவும் உள்சிற்றினமாகவும் வகைப்படுத்துவதைத் தெளிவாகவே எளிதாகக் கண்ட விஞ்ஞானிகள், மனிதவர்க்கத்தை இனத்தவராகப் பிரிப்பதை ஏன் அவ்வளவு பிரச்னையாக காண்கின்றனர்?

“மனிதனின் மிக அபாயகரமான கட்டுக்கதை”

மானிடவியல் நிபுணர் அஷ்லீ மான்டகு சொல்கிறபடி, “உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த கூறுகள் இணைக்கப்பட்டவையாய் இருக்கின்றன, உடல் சார்ந்த வித்தியாசங்கள் மனம் சார்ந்த திறமைகளில் உள்ள முனைப்பான வித்தியாசங்களோடு தொடர்புடையவையாய் இருக்கின்றன, மேலும் இந்த வித்தியாசங்கள் அறிவுத்திற எண் (IQ) சோதனைகளாலும் அந்த ஜனத்தொகைகளின் பண்பாட்டு சாதனைகளாலும் அளவிட முடிபவையே,” என அநேக ஜனங்கள் கருதுகின்றனர்.

இதன் காரணமாக, இனத்தவர் வித்தியாசமான உடற்பண்புகளைக் கொண்டிருப்பதால், குறிப்பிட்ட சில இனத்தவர் புத்திக்கூர்மையில் உயர்ந்தவர்களாயும் மற்றவர்கள் தாழ்ந்தவர்களாயும் இருக்கின்றனர் என்று பலர் நம்புகின்றனர். இருப்பினும், மான்டகு அப்படிப்பட்ட எண்ணத்தை “மனிதனின் மிக அபாயகரமான கட்டுக்கதை,” என்று அழைக்கிறார். இதை மற்ற வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

மார்ட்டன் க்ளாஸ் மற்றும் ஹேல் ஹெல்மேன் மனிதவர்க்க வகைகள் என்ற புத்தகத்தில் இவ்வாறு விவரிக்கின்றனர்: “தனிப்பட்ட நபர்கள் வித்தியாசப்படுகின்றனர்; ஜனத்தொகைகள் முழுவதிலும் மேதைகளும் அறிவிலிகளும் இருக்கின்றனர். ஆனால், அவ்வளவு ஆராய்ச்சிக்குப் பிறகு, புத்திக்கூர்மை அல்லது திறமையின் சம்பந்தமான ஜனத்தொகைகளுக்கு இடையே தங்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மரபுவழி வித்தியாசங்களைப் பொறுப்புள்ள அறிஞர்கள் கண்டதில்லை.”

இருப்பினும், மேலோட்டமான உடல் சார்ந்த வேறுபாடுகள் அந்த இனத்தவர் அடிப்படையாகவே வேறுபட்டவர்கள் என அர்த்தப்படுத்துகின்றன என்று ஏன் அவ்வளவு அதிகமானோர் தொடர்ந்து நம்பிக்கொண்டிருக்கின்றனர்? இனம் உண்மையிலேயே எவ்வாறு அத்தகைய ஒரு பிரச்னையாக மாறிற்று? இந்த விஷயங்களை நாம் அடுத்த கட்டுரையில் சிந்திப்போமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்