உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 4/22 பக். 28-29
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இரத்தமேற்றுதல் முறைகேடு
  • துறவிகள் தேவை
  • வெட்டுக்கிளிகள் திரும்பவருகின்றன
  • தற்கொலையை தடுத்தல்
  • இறுதி மாதவிடாய்க்குப் பிறகு கருத்தரிப்பா?
  • போப் ஜான் XXIII முஸோலினியை புகழ்ந்தார்
  • தீப்பற்றக்கூடிய மழைக் காடுகள்
  • காளான்கள் பூண்டோடு அழிக்கப்படுமென அச்சுறுத்தப்படுகிறது
  • நம்பிக்கைக்கான விஞ்ஞான ஆதாரம்
  • எகிப்திய நினைவுசின்னங்கள் அச்சுறுத்தப்படுகின்றன
  • இதுதான் நீதியா?
  • மழைக்காடுகளை மொட்டையடித்தல்
    விழித்தெழு!—1998
  • மழைக்காட்டில் சோக மழை
    விழித்தெழு!—1997
  • மாதவிடாய் முடிவுறும் பருவத்தை சமாளித்தல்
    விழித்தெழு!—1995
  • அதன் மர்மங்கள் வெளிப்படுதல்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 4/22 பக். 28-29

உலகத்தைக் கவனித்தல்

இரத்தமேற்றுதல் முறைகேடு

ஜெர்மனி மற்றெந்த நாட்டையும்விட ஒரு நபருக்கு இரத்த சம்பந்தமான பொருட்களை அதிகளவாக பயன்படுத்துகிறது. அது, “உலகிலேயே மிக அதிக நம்பகமான மருத்துவ கிளையலுவலகங்களில் ஒன்றை விமர்சனத்திற்கு இலக்காக மாற்றியிருக்கிற” ஒரு முறைகேட்டால் அதிர்ச்சியடையும்படி செய்யப்பட்டிருக்கிறது என்று சூட்டியூட்ச் செயிட்டங் என்ற செய்தித்தாள் அறிக்கையிடுகிறது. அந்த முறைகேடு இரத்தத்தைப் பதனஞ்செய்கிற கம்பெனி ஒன்றை உட்படுத்துகிறது. சில ஆண்டுகளாக, சரியாகப் பரிசோதிக்கப்படாத இரத்த சம்பந்தமான பொருட்களை அந்தக் கம்பெனி பேரளவில் மருத்துவமனைகளுக்கு விற்பனைசெய்திருக்கிறது. ஆகவே, இந்தப் பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிற ஆயிரக்கணக்கான மருத்துவமனை நோயாளிகள் HIV தொற்றுநோய் அபாயத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். “அறுவைசிகிச்சையின்போது தொற்றுநோயுள்ள இரத்தம் அல்லது ஊநீர் (plasma) பொருட்கள்மூலம் HIV நோய் தனக்கு தொற்றவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிற எவரும்,” பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்று ஃபெடரல் சுகாதார அமைச்சராகிய ஹார்ஸ்ட் ஸீஹாஃபர் ஆலோசனை தெரிவித்திருக்கிறார். “இரத்தம் ஏற்றிக்கொண்டதன் மூலமாக எய்ட்ஸ் வருவதைப்பற்றி மக்கள்தொகையில் 71 சதவீதத்தினர் இப்பொழுது பயப்படுகின்றனர்” என்று டீ செயிட் அறிவிக்கிறது.

துறவிகள் தேவை

ஜப்பானின் மத சரித்திரத்திலேயே முதல் முறையாக, துறவிகள் வெளியிலிருந்து வேலைக்கு அமர்த்தப்படவிருக்கிறார்கள். “கடவுட்பற்றுள்ள எவரும் உலகப்பற்றில்லாத எவரும் ஒரு தலைமை பூசாரியாகலாம்,” என்று புத்தமதத்தின் டென்டை மதப்பிரிவின் உயர் பதவி வகிக்கும் துறவி ஒருவர் சொன்னார். 1995-ல் தொடங்கி விண்ணப்பதாரர்களுக்கு “நுழைவுத் தேர்வு” வைப்பதற்கு அந்த மதப்பிரிவு திட்டமிடுகிறது. அந்த மதப்பிரிவின் அதிகாரி ஒருவர் சொன்னபடி, அந்தத் தேர்வில் வெற்றிபெறுவதற்கு மதத்தைப் பற்றிய அறிவு அதிகம் தேவையில்லை. பாரம்பரியமாக, பூசாரிகளின் குமாரர்கள் கோயில் பூசாரிகளாக தங்களுடைய அப்பாமார்களின் ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார்கள். “என்றபோதிலும், சமீப காலத்தில் அனைத்து மதப்பிரிவுகளிலுமுள்ள பூசாரிகளின் குமாரர்கள் துறவிகளாக ஆவதைக்குறித்து மனவிருப்பமற்றவர்களாக இருப்பதாக சொல்லப்படுகிறார்கள்,” என்று மைனிச்சி டெய்லி நியூஸ் அறிக்கைசெய்கிறது. இந்தப் போக்கின்பேரில் குறிப்புசொல்கையில், மதத்தின்பேரில் வல்லுநராகிய ஹீரோ டகாகீ இவ்வாறு சொன்னார்: “இப்பொழுது அந்தப் பாரம்பரிய முறை சிதைவுற்று வருவதால், பூசாரிகளாக ஆவதற்கான மனவிருப்பம் இளைஞரில் குறைவுபடுவதைப் பற்றி புத்த மதப்பிரிவினர் கவலைப்படுகின்றனர்.”

வெட்டுக்கிளிகள் திரும்பவருகின்றன

எகிப்தின் எட்டாவது வாதையாகிய வெட்டுக்கிளி வாதை, “ஆப்பிரிக்காவை திடீர் தாக்குதல்செய்ய மீண்டும் பறந்துவந்திருக்கின்றன,” என்று தி உவீக்லி மெயில் & கார்டியன் செய்தித்தாள் அறிவிக்கிறது. ஏற்கெனவே ஏமனில் 2,00,000 (80,000 ஹெக்டேர்) ஏக்கர் சூறையாடப்பட்டிருக்கிறது, மேலும் சாத், நைஜர், மாலி ஆகிய இடங்களுக்குக் கூட்டங்களாகத் திரண்டு வந்திருக்கின்றன. வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள 28 நாடுகளிலுள்ள பயிர்களை அழித்த 1986-87-ன் கடுமையான வாதையைவிட பாதிப்பு மிகப் பெரியளவில் அச்சுறுத்துவதாக இருக்கும் என்று விவசாய ஆராய்ச்சி நிலையத்தின் பிரதிநிதி ஒருவர் சொன்னார். அவர் மேலும் சொன்னார்: “சூழ்நிலையியல் நிலைமைகள் சாதகமாக இருந்தால், ஒரே சந்ததியில் (45 நாட்களில்) பூச்சிகள் பத்துமடங்காக விருத்தியடையலாம்.” வெட்டுக்கிளிகள் 1994-ல் சாகேலின் உணவுப் பயிர்கள் அனைத்தையும் தாக்கலாம்.

தற்கொலையை தடுத்தல்

“இளைஞரின் தற்கொலைகள் அதிகரிக்கின்றன” என்று பிரேஸிலியன் செய்தித்தாள் ஓ எஸ்டாடோ ட S. பவுலூ அறிக்கைசெய்கிறது. “தற்கொலைக்கான முக்கிய காரணம் வியாதி, இதையடுத்து காதலில் ஏமாற்றம், குடிவெறிப்பழக்கம், பணசம்பந்தமான கஷ்டங்கள் ஆகியவை” என்று பிரேஸிலிய நீதித்துறை அமைச்சரகம் செய்த ஆராய்ச்சி காண்பிக்கிறது. தற்கொலையை தடுப்பதில் குடும்ப அங்கத்தினர்கள் மற்றும் நண்பர்களின் உதவி இன்றியமையாததாய் இருப்பதால், மனநோய் மருத்துவர் கிரிஷ்சன் கோடரர் ஆலோசனை தருகிறார்: ஒரு தற்கொலையின் “சாத்தியத்தை அசட்டைசெய்யாதிருங்கள்.” பேச்சுத்தொடர்பு மனத்தாக்கத்தை தணிக்கக்கூடுமாதலால், “மனச்சோர்வுக்கான காரணங்கள், அந்த நபர் தற்கொலை செய்துகொள்வதைக் குறித்து ஏன் சிந்தித்துக்கொண்டிருக்கிறார், அதை எவ்வாறு செய்வதற்கு எண்ணுகிறார் ஆகியவற்றை கேளுங்கள்.”

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு கருத்தரிப்பா?

இறுதி மாதவிடாய்க்குப் பிறகு கருத்தரிப்பது சாத்தியமா? பாரிஸ் செய்தித்தாளாகிய ல ஃபீகாரோ-வில் உள்ள மருத்துவ அறிக்கை ஒன்றின்படி, பதிலானது ஆம் என்பதாக தெரிகிறது. “இறுதி மாதவிடாய் நின்றுவிட்டது என்று உறுதிசெய்யப்பட்ட பிறகு கருத்தரிப்பதாகத் தங்களைக் காண்கிற பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாக தெரிகிறது” என்று அந்த அறிக்கை சொல்கிறது. ஹார்மோன் மாற்றீட்டு சிகிச்சையை (hormone replacement therapy) ஒரு பெண் பெற்றுக்கொண்டிருந்தால், அவள் திட்டவட்டமாக இறுதி மாதவிடாய்க்குப் பிறகு கருத்தரிப்பதற்கான அதிகளவு உள்ளாற்றலைப் பெற்றிருக்கிறாள் என்பதாக 6,000 பெண்பாலுறுப்பு மருத்துவர்களையும் மகப்பேறு மருத்துவர்களையும் உட்படுத்திய பிரெஞ்சு ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. புள்ளிவிவரப்படி, இந்தப் பெண்களுக்கு சராசரியாக இரண்டு ஆண்டுகளாக மாதவிலக்கு நின்றிருந்தது. பெரும்பான்மையர் ஓரளவு முன்கூட்டியே இறுதி மாதவிடாய் நிற்கப்பெற்றவர்கள். 71 சதவீதத்தினர் HRT-ஐ பெற்றுக்கொண்டிருந்தார்கள். இறுதி மாதவிடாய்க்குப் பிறகும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு குழந்தையைப் பெறும் திறனை உடையவளாயிருக்கிறாள் என்று இந்த ஆராய்ச்சியை தலைமைதாங்கி நடத்தியவராகிய டாக்டர் கிறிஸ்டியான் ஸாமின் சொன்னது அக்கறைக்குரியதாகும்.

போப் ஜான் XXIII முஸோலினியை புகழ்ந்தார்

இப்பொழுது சில காலமாக, கத்தோலிக்கச் சர்ச்சுக்குள்ளேயே போராட்டம் நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தப் போராட்டம், போப் ஜான் XXIII-ஐ அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட புனிதராக அறிவிப்பதற்குச் சாதகமாயிருக்கிறவர்களுக்கும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறவர்களுக்கும் இடையேயாகும். ஜான் XXIII போப்பாக ஆவதற்கு முன்பு, 1930-கள் மற்றும் 1940-களில் இத்தாலியின் ஃபாஸிஸக்கொள்கை தலைவராக இருந்த பெனிட்டோ முஸோலினியை, 1930-களுக்கு முன்னாக தேதியிடப்பட்டிருக்கிற எண்ணற்ற கடிதங்களின்மூலம் புகழ்ந்தார் என்பது சமீபத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டது. முஸோலினி “தெய்வச்செயலால்” வழிநடத்தப்படுவதாகத் தோன்றுகிறது என்று அப்பொழுதிருந்த எதிர்கால போப் சொன்னார். இந்தக் கடிதங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரசுரிக்கப்பட்டிருந்தன, ஆனால் “அரசியல் தன்னலத் தேட்டத்தை தவிர்க்கும்படிக்கு,” பாஸிஸக்கொள்கை சர்வதிகாரியை நோக்கிச் சொல்லப்பட்ட துதியை தணிக்கைசெய்திருந்ததாக ஜான் XXIII-ன் முன்னாள் நேர்முக செயலாளராகிய அந்தப் பதிப்பாசிரியர் இப்பொழுது சொல்கிறார். ஜான் XXIII “ஆசீர்வதிக்கப்பட்டவர்” என்று அறிவிப்பதற்கு வழிநடத்தக்கூடிய தற்போதைய போப்புடைய செயல்களின் போக்கைத் தடுக்கும்பொருட்டாக, தணிக்கைசெய்யப்பட்ட பகுதிகள் இப்பொழுதுதான் பொதுப்படையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று சிலர் நினைக்கிறார்கள். எப்படியிருந்தாலும்சரி, அந்தப் பகுதிகள் வெளியிடப்பட்டதால் “பாஸிஸக்கொள்கையினிடமாக திருச்சபை அதிகாரிகளின் மனப்பான்மையைப்பற்றி ஏற்கெனவே அறியப்பட்டதோடு அதிகத்தைக் கூட்டாது” என்று மிலன் செய்தித்தாளாகிய கூரியர் டெல்லா செரா சுட்டிக்காட்டுகிறது.

தீப்பற்றக்கூடிய மழைக் காடுகள்

இந்தோனீஷியா, கிழக்கு களிமன்டனிலுள்ள தீ, வறட்சியான வருடங்களாகிய 1983 மற்றும் 1991-ல், 86 லட்ச ஏக்கர் காடுகள் பாழாக்கிவிட்டது. ஆனால், ஈரப்பதமான அமேஸான் மழைக்காட்டிலுள்ள தீ எச்சரிக்கைக்கான மிகப் பெரிய ஒரு காரணமாக இருக்கிறது. ஏன்? பொதுவாக மழைக்காட்டின் மேற்கவிகை ஈரப்பதமாகவுள்ள காற்றை அதற்கு அடியில் திறம்பட்ட விதமாக பிடித்துவைத்துக்கொள்கிறது. இது தீ பிடிக்காதளவுக்கு காட்டை அவ்வளவு ஈரப்பதமாக வைத்துக்கொள்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், கிழக்கத்திய அமேஸான் காடு வலைப்பின்னல் போன்ற சாலைகளால் ஊடுருவப்பட்டிருக்கிறது. ஏனென்றால் மரம் வெட்டுபவர்கள் உயர்வாக மதிக்கிற சீமை நூக்கு மரங்களைக் கண்டுபிடித்து வெட்டியிருக்கிறார்கள், இதனால் ஈரமான சீதோஷ்ணம் போகிறது என்பதாக மான்செஸ்டர் கார்டியன் உவீக்லி அறிக்கைசெய்கிறது. காட்டில் கீழே கிடக்கிற தேவையற்ற மரக் கிளைகளும் மேற்பகுதிகளும் எரிக்கப்படுகின்றன. இது காட்டை தீக்கிரையாக்குகிறது. ஒரு சுற்றாய்வின்படி, வெறுமனே மரங்களின் 2 சதவீதத்தை வெட்டுவது 56 சதவீதமான அளவுக்கு காட்டின் மேற்கவிகையை அழிக்கிறது. பசுமையான மரங்களினூடே ஐந்து கிலோமீட்டருக்கு தீக்கொளுந்துகள் பரவின என்பதாக பிரேஸிலிய விவசாயிகள் அறிக்கைவிடுத்திருக்கிறார்கள்.

காளான்கள் பூண்டோடு அழிக்கப்படுமென அச்சுறுத்தப்படுகிறது

“காளான்களில் சுமார் 4,400 வகைகள் ஜெர்மனியில் காணப்படுகின்றன, மூன்றில் ஒரு பாகம் முற்றிலும் அழிந்துபோகும் என்பதாக அச்சுறுத்தப்படுகிற இனங்களின் பட்டியலில் காணப்படுகின்றன” என்று பிராங்க்ஃபர்டர் ஆல்கேமைனா செயிட்டங் குறிப்பிடுகிறது. உண்மையில் சொல்லப்போனால், காளான்கள் மட்டுமல்ல, ஆனால் மற்றநேக வகைகளான பூஞ்சணங்களும் ஐரோப்பாவில் அழிந்துவிடும் அபாயத்தில் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துவருகின்றனர். ஏன்? தூய்மைக்கேடும் மட்டுமீறு பயன்படுத்தப்படுதலும் உயர்ந்தளவான அழிவை உண்டுபண்ணிவருகின்றன என்பதாகத் தெரிகிறது. கருவாலி, தேவதாரு மரங்கள், அநேக வகைகளான வண்டுகள் போன்ற மற்ற உயிரின வகைகள், உயிர்பிழைப்பதற்காக பூஞ்சணங்களை சார்ந்திருக்கின்றன. ஆகவே, பூஞ்சணங்களின் பரவலான மறைவு சூழ்நிலையியல் பேரழிவை அர்த்தப்படுத்தும்.

நம்பிக்கைக்கான விஞ்ஞான ஆதாரம்

“ஒரு விஞ்ஞானியாக இருந்துகொண்டு கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவது சாத்தியமானதே” என்பதாக தி ஸ்டார் என்ற தென் ஆப்பிரிக்க செய்தித்தாள் குறிப்பிடுகிறது. ஜோஹன்ஸ்பெர்க்கில் உள்ள விட்வாட்டர்ஸ்ரான்ட் பல்கலைக்கழக வானவியல் வல்லுநராகிய பேராசிரியர் டேவிட் பிளாக் என்பவரால் கொடுக்கப்பட்ட 90 நிமிட சொற்பொழிவின்பேரில் அந்தக் கட்டுரை அறிக்கைசெய்தது. இந்த அகிலாண்டம் எவ்வளவு “நேர்த்தியாக ஒத்திசைவிக்கப்பட்டு சமநிலைப்படுத்தப்பட்டிருக்கிறது” என்பதை விஞ்ஞானம் உறுதியளிக்கிறது என்று பிளாக் விளக்கினார். பிளாக் மற்றும் மற்றநேக விஞ்ஞானிகளுக்கும் நோக்கமுள்ள திட்டமைப்பை இது தெளிவாக குறிப்பிடுகிறது. அது, முறையே, ஒரு திட்டமைப்பாளரை உறுதியாகத் தெரிவிக்கிறது. தி ஸ்டார் சொன்னபடி, “சிருஷ்டிகரில் நம்பிக்கை வைக்காத ஒரு மனிதன் [சிருஷ்டிகரில் நம்பிக்கை] வைக்கிறவர்களைவிட அதிக விசுவாசம் வைக்குமளவுக்கு” கடவுள் இருக்கிறார் என்பதற்கான ஏராளமான அத்தாட்சி இருக்கிறது என்பதாக பிளாக் முடிவுக்கு வருகிறார்.

எகிப்திய நினைவுசின்னங்கள் அச்சுறுத்தப்படுகின்றன

எகிப்து முழுவதிலுமுள்ள பூர்வீக நினைவுச்சின்னங்கள் உயர்ந்துவருகிற நிலத்தடி நீரால் அச்சுறுத்தப்பட்டுவருகின்றன. கெய்ரோவிலுள்ள 400 வரலாற்று சிறப்புவாய்ந்த நினைவுச்சின்னங்களும் தூரத் தெற்குப் பகுதியிலுள்ள லக்ஸர் கோயில் போன்ற நினைவுச்சின்னங்களும் ஆபத்தில் இருக்கின்றன. ஸ்ஃபிங்க்ஸ் ஏற்கெனவே அதனுடைய ஒரு பாதத்தை இழந்துவிட்டது என்று தி யுனெஸ்கோ கூரியர் அறிக்கைசெய்கிறது. பிரச்னைக்கு ஓரளவு காரணம் பெரிய அஸ்வான் அணையைக் கட்டினதாகும். அது நைல் நதி தண்ணீர்கள் வழிந்துவரும்படியும் நீர்ச்செறிவுள்ள அடிநிலத்தளம் உயரும்படியும் செய்கிறது. இந்த அணையைக் கட்டுவதற்கு முன்பாக, இந்த நதி ஆண்டில் ஒன்பது மாதங்களாக எந்தத் தண்ணீரும் இல்லாமல், தாழ்வான மட்டத்திற்கு வற்றிவிட்டது. அதோடு தவறுக்குக் காரணமாக இருப்பது நூறு வயதான கழிவுநீர் சாக்கடை அமைப்புமுறையாகும், அது ஒழுகுகிறது, அடிக்கடி நிரம்பி வழிந்துவருகிறது. கட்டடத்தின் அஸ்திபாரங்களை தண்ணீர் ஊடுருவுகையில், நுண்துளை ஈர்ப்பினால் சுவர்களின் அநேக உயரத்திற்கு தண்ணீர் உறிஞ்சிக்கொள்ளப்படுகிறது, அந்த இடத்தில் சுவர்களைத் தாக்குகிற உப்புகள் உருவாவதற்கு வேதிவினை ஏற்படுகிறது.

இதுதான் நீதியா?

“மைக்கேல் சார்ல்ஸ் ஹேயிஸ் வட கரோலினா துப்பாக்கி சூடு வன்முறைச்செயலில் நான்கு ஆட்களை கொன்றுவிட்டார்—இப்பொழுது, வரிசெலுத்துபவர்களின் செலவில் எப்பொழுதும் வாழ்ந்ததைவிட மேம்பட்ட விதமாக வாழ்கிறார் என்று பலியானவர்களின் குடும்பங்கள் முறையிடுகின்றன,” என்று அஸோஸியேட்டட் பிரஸ் செய்திவிடுக்கிறது. பைத்தியக்காரர் என்று தீர்ப்புக்கூறப்பட்டு, மாநில பைத்தியக்காரர்கள் விடுதியில் ஒப்புவிக்கப்பட்டார். ஊனமுற்றோருக்கான சமுதாய பாதுகாப்பு நலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு தகுதியுடையவராக ஒரு மாதத்திற்கு 536 டாலர் பெற்றுக்கொள்கிறார் ஹேயிஸ். ஒரு மோட்டார் சைக்கிள், பெரிய துணி அலமாரி, ஓர் அறை நிறைய அதிக விலையுடைய ஸ்டீரியோ மற்றும் வீடியோ கருவி ஆகியவற்றை அவர் வாங்குவதற்கு இது அனுமதித்திருக்கிறது. ஏனென்றால் ஊனமுற்றோருக்கான நலன்களால் பூர்த்திசெய்யப்படக்கூடிய இருப்பிடமும் உணவும் அவருக்கு ஏற்கெனவே அளிக்கப்படுகிறது. குற்றச்செயல்செய்த பைத்தியக்காரர்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் 480 லட்சம் டாலரை அரசாங்கம் அளிக்கிறது. அதை, “முறைகேடான நீதி” என்பதாக குற்றவியல் வழக்கறிஞர் வின்சென்ட் ரபில் அழைக்கிறார். அவர் மேலும் சொல்கிறார்: “வரிசெலுத்துபவர்கள் கொலையாளிக்கு பணம்செலுத்துகிறார்கள். இது அவ்வளவு நியாயமானதாகத் தெரியவில்லை.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்