உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 2/22 பக். 3
  • அதன் மர்மங்கள் வெளிப்படுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதன் மர்மங்கள் வெளிப்படுதல்
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • மெனோபாஸ் சவாலை சமாளித்தல்
    விழித்தெழு!—2014
  • மாதவிடாய் முடிவுறும் பருவத்தை சமாளித்தல்
    விழித்தெழு!—1995
  • தெளிவான புரிந்து கொள்ளுதலை அடைதல்
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 2/22 பக். 3

அதன் மர்மங்கள் வெளிப்படுதல்

பெண்கள் வயதாக ஆக மாதவிடாய் முடிவுறும் பருவத்தையும் தங்கள் வாழ்க்கையில் எதிர்ப்படுகின்றனர். என்றாலும் இது பெருமளவில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மாதவிடாய் முடிவுறும் பருவம்—அதன் தெரிவித்திராதப் பருவம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின்படி மாதவிடாய் முடிவுறும் பருவமானது, “பெண்ணின் நரம்புமண்டலத்தைச் சீர்குலைவிக்கிறது மற்றும் பெண்களின் தனித்தன்மைமிக்க கவர்ச்சியை இழக்கச்செய்கிறது” என்பதாக 19-ஆம் நூற்றாண்டு மகப்பேறு மருத்துவர்கள் நம்பினார்கள்.

அத்தகைய தவறான கருத்துக்கள் தொடர்ந்திருக்கின்றன. அதன் விளைவாக மாதவிடாய் முடிவுறும் பருவத்தை எதிர்நோக்க பெண்கள் பயமும் திகிலும் கொண்டிருக்கிறார்கள். இதனோடு தொடர்புடைய மனோவியல் பிரச்சினையைப்பற்றி இயல்பான மாதவிடாய் முடிவுறும் பருவம்—பெண்ணால் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள பருவத்திற்கு முழுமையான வழிகாட்டி (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டதாவது, “பெண்களின் வாழ்க்கையில் கடினமானக் காரியங்களில் இதுவும் ஒன்றாகும்.”

இளமையையும் இளமையானத் தோற்றத்தையும் வலியுறுத்தும் சமுதாயங்களில், மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் ஆரம்ப அறிகுறிகள் பின்வரும் தவறான கருத்துக்களை அறிவிக்கலாம்: இளமைக்குத் திடீர் முடிவும் வயோதிபத்தின் ஆரம்பமும். இவ்வாறாகச் சில பெண்கள் மாதவிடாய் முடிவுறும் பருவத்தைப்பற்றிய பயத்தால் பீடிக்கப்பட்டுள்ளார்கள், இது ஒரு புதிய, சொற்பமாகவே விரும்பத்தத்க வாழ்க்கை என்று சுட்டிக்காட்டுவதனால்தான். இது “அரைகுறையான மரணம்” என்பதாகக்கூட சிலரால் நோக்கப்படுகிறது.

நவீன நாளைய மாதர் வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தைக் கடக்கும்போது, அறியாமையினால் அவதிப்படத் தேவையில்லை. மாதவிடாய் முடிவுறும் பருவத்தின் மர்மங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. இந்த நிலைதிரிபுறும் பருவத்தை சமாளிப்பதற்காக அதிகமான ஆராய்ச்சி செய்யப்படுகிறது, சிகிச்சை முறைகளும் முன்னேற்றுவிக்கப்படுகின்றன. பத்திரிகைகள், செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்கள் இந்தப் பொருளின் பேரில் கவனம்செலுத்தி, சிலரால் முன்பு கேட்பதற்குக் கூச்சப்பட்ட கேள்விகளின் பேரில் விளக்கங்களை அளிக்கின்றன. மாதர் ஒருவேளை எதிர்ப்பட நேரும் இந்தப் பிரச்சினைகளைப்பற்றி மருத்துவ துறைக்கும்கூட அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு கவனம் இந்தப் பொருளின் பேரில்? ஏனென்றால் மாதவிடாய் முடிவுறும் பருவத்தைப்பற்றிய இன்னும் தெளிவான அறிவானது, அநேகப் பெண்கள் கொண்டுள்ள பயங்கள், சந்தேகங்கள் மற்றும் விரக்திகள் போன்றவற்றை நீக்கலாம். அநேக நாடுகளில் பெண்கள் நீண்டகாலம் வாழ்கிறார்கள், அவர்கள் மறைத்து வைக்கப்பட்ட இந்த விஷயத்தின் முத்திரையை உடைத்தெறியவும் அதைப்பற்றி தங்களுக்கு அறிவிக்கப்படவும் விரும்புகிறார்கள். அவர்களுக்கு எளிய, நேரடியான பதில்கள் வேண்டும். இது நியாயமே, ஏனெனில் அநேகர் மாதவிடாய் முடிவுறும் பருவத்திற்குப் பின்னர் தங்கள் வாழ்நாளில் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலான ஜீவிய காலத்தை உடையவர்களாக உள்ளனர்.

ஐக்கிய மாகாணங்களிலுள்ள சமுதாய நிலை புள்ளி ஆய்வு ரீதியிலான மக்கள்தொகையியல் போக்குகள், மாதவிடாய் முடிவுறும் பருவத்தை அடைவோரில், அடுத்தப் பத்தாண்டுகளைவிட 50 சதவீத ஏற்றம் இருக்கும் என முன்னுரைக்கிறது. அத்தகைய பெண்கள் உடல்நல அபாயங்கள், திடீரென உடல் உஷ்ணமடைதல் (உஷ்ண வெளியேறுதல் என்றும் அழைக்கப்படுகிறது), மனோநிலையில் மாற்றங்கள், அசெளகரியங்கள், உடல் மற்றும் உணர்ச்சி சார்ந்த மாற்றங்கள் போன்றவற்றை அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ஏன் இத்தகைய காரியங்கள் நிகழ்கின்றன? மாதவிடாய் முடிவுறும் பருவத்தின்போது, பெண்ணின் செயல்திறமிக்க வாழ்க்கை முடிவுறுகிறதா? மாதவிடாய் முடிவுறும் பருவம் ஒரு பெண்ணின் தனித்தன்மையை மாற்றியமைக்கிறதா? பின்வரும் கட்டுரைகள் இக்கேள்விகளைப் பரிசீலனை செய்யும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்