உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 9/22 பக். 26-27
  • பல்பயனுள்ள ஃபுரோஷிகி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பல்பயனுள்ள ஃபுரோஷிகி
  • விழித்தெழு!—1994
  • இதே தகவல்
  • டைகள் அன்றும் இன்றும்
    விழித்தெழு!—2000
  • நயமுடைய கிமோனோ அது நீடித்திருக்குமா?
    விழித்தெழு!—1992
  • இவை எல்லாம் யாருடைய கைவண்ணம்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • கென்டே—ராஜ வஸ்திரம்
    விழித்தெழு!—2001
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 9/22 பக். 26-27

பல்பயனுள்ள ஃபுரோஷிகி

ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர் கூறியபடி

ஃபுரோஷிகி ஜப்பானிய சுற்றுத்துணி. இந்தச் சுற்றுத்துணி ஒரு வித்தியாசமான துணி. பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தொடுவதற்கு இதமாக இருக்கும். மேலும் அருமையாக கட்டப்பட்டிருக்கும். ஃபுரோஷிகியை தெரிந்தெடுத்து கட்டுவது கலையாக ஆகியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சந்ததியிலிருந்து இன்னொரு சந்ததிக்கு கடந்து வந்திருக்கிறது.

எந்தத் துணியும் இதற்கு ஈடாகாது. வண்ணம், டிசைன், துணி யாவையும் குறித்து சிந்திக்க வேண்டும். சமயமுங்கூட ஃபுரோஷிகியின் உபயோகத்தை நிர்ணயிக்கிறது. எடுத்துக்காட்டாக, பரிசுப்பொருளைப் பட்டு ஃபுரோஷிகியில் சுற்றித் தரலாம், அதன்மேல் செர்ரி அல்லது ப்ளம் மலர்கள் போன்ற மரபுவழி டிசைன்கள் பதிக்கப்பட்டிருக்கும். சில வேளைகளில் பரிசு அளிப்பவர், அந்தச் சுற்றுத்துணியையே பரிசாக ஏற்றுக்கொள்ளும்படி பரிசு பெறுபவரை கட்டாயப்படுத்தவுங்கூடும்.

உண்மைதான், சுற்றுத்துணிகள் பல்வேறு அளவுகளில் இருக்கின்றன. பல காரியங்களுக்கும் உபயோகமாயிருக்கின்றன. உருண்டையான தர்ப்பூசணிகளை அவற்றில் சுற்றலாம், அல்லது அரிசியைக் கொண்டு செய்யப்பட்ட ஒயின் அடங்கிய பெரிய பாட்டில்களை அவற்றில் சுற்றலாம். சில ஃபுரோஷிகி அவ்வளவு பெரியதாக இருப்பதால் அவற்றில் மூன்று நான்கு சுருட்டுப்படுக்கைகளைச் சுற்றலாம். தூசு-காக்கும் இந்த உறைகள் எப்போதும் காட்டன் துணிகளாகவே இருக்கின்றன. சின்னப் பிள்ளைகளுக்கு, இவற்றைக் கட்டிக்கொண்டு விளையாடுவதில் தனிப்பட்ட கவர்ச்சி. இன்னொரு அளவான துணியைப் பற்றி பார்த்தால், சில சிறுவர்கள் மிகச் சிறிய துணிகளைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில், பிள்ளைகளுடைய சாப்பாட்டு டப்பாக்களைப் பார்த்தால், முகந்துடைக்கிற துணிகளும் கைக்குட்டைகளும் சேர்ந்து சிறிய ஃபுரோஷிகியாகவும் பயன்படுவது தெரியவருகிறது. சாப்பாடு சாப்பிட பிள்ளைகள் இந்தச் சிறிய ஃபுரோஷிகிகளை அவிழ்த்தார்களென்றால், இந்தச் சுத்தமான துணிகள் மேசை கைக்குட்டைகளாக சேவிக்கின்றன. என்றாலும், பெருவாரியான ஃபுரோஷிகி ஏறத்தாழ சதுர வடிவ கழுத்துக்குட்டைகளின் அளவாக இருக்கின்றன.

ஜப்பானில் ஃபுரோஷிகியை சாதாரணமாக உபயோகிக்கிற முறையானது, துணியின் எதிர் மூலைகளைச் சேர்க்கிற வண்ணம் வைக்கவேண்டியதை நடுவில் வைத்து சுற்றுவதாகும். பேக்கட் அதிக நீளமாக இருந்தால், ஓரங்களிலுள்ள எஞ்சிய துணியானது பேக்கட்டை சுற்றி ஜம்மென்று மடிக்கப்படுகிறது. ஒரு பக்கத்தை மடித்துவிட்டு பின்னர் அடுத்தப் பக்கத்தை மடித்தால் ஒவ்வொரு பக்கமும் வெவ்வேறான திசையில் மடிந்திருக்கும். இதனால் துணியின் இரண்டு நுனிகளும் ஓரங்களில் நீண்டுகொண்டிருக்கும். இப்போதுதானே ஒரு கஷ்டமான வேலை ஆரம்பிக்கிறது. இந்த இரண்டு நுனிகளும் பேக்கட் மீது கச்சிதமாக கொண்டுவரப்பட்டு இரண்டு முடிச்சாக கட்டப்படுகிறது. இது சிறிய முடிச்சாக, இறுதியில் அழகான பட்டாம்பூச்சியைப் போல், பார்ப்பதற்கு சிறப்பாக இருக்கும். என்றபோதிலும், பேக்கட்டின் அளவைப் பொறுத்து, பட்டாம்பூச்சியின் “இறக்கைகள்” கிட்டத்தட்ட முயலின் வளைந்த காதுகள் போலவே தெரியும். ஆனாலும் பரவாயில்லை! ஒருசில நொடிகளில் இவற்றை அருமையான போவாக (bow) மாற்றிவிடலாம்.

சதுரவடிவ பேக்கட்டாக்குவதற்கு, ஒரு முடிச்சின் மேல் இன்னொரு முடிச்சைப் போட்டு ஒரேவொரு முடிச்சு மாத்திரம் தெரியுமளவுக்கு ஃபுரோஷிகியின் எதிர் முனைகள் பேக்கட்மேல் கட்டப்படுகின்றன. ஜப்பானியர் இந்த முழு துணியையும் சாமர்த்தியமாக, மேலே பார்ப்பதற்கு ஜம்மென்று தெரியுமளவுக்கு இழுத்து சுருக்கிக் கட்டப்பட்ட துணியாக ஒழுங்கமைக்கிறார்கள். நேரான வடிவம் ஜோராக இருக்கிறது. முடிச்சைப்பிடித்து அந்தப் பண்டிலை தூக்கிக்கொண்டு போகமுடியுமென்றாலும், பரிசை பொறுத்தவரை அந்த வடிவத்தை அப்படியே இருக்கச்செய்ய அடியிலிருந்து அது சாதாரணமாக தாங்கிப் பிடிக்கப்படுகிறது.

ஃபுரோஷிகி என்ற வார்த்தை சொல்லர்த்தமாக “குளியல் விரிப்பு” என்பதாகும். 17-ம் நூற்றாண்டில் பிரபலமான பெயராக ஆனது. அப்போது, நெருப்பு பயத்தினால் பீடிக்கப்பட்டவர்களாக, குளியல் நீரை சூடாக்க ஜனங்கள் தங்கள் வீடுகளில் தீமூட்டாமலிருக்க பார்த்தார்கள். இதனால் வேறு வழியில்லாமல் பொதுக் குளியலிடங்களுக்குச் சென்றார்கள். அங்கே இந்தத் துணியை நேராக பரப்பிப்போட்டு, உடைகளைக் கழற்றிவிட்டு குளிக்கையில், தங்கள் உடைகளை உள்ளே சுற்றிவைக்க இதை உபயோகித்தார்கள். பொதுக் குளியலிடங்கள் ஏறக்குறைய மறைந்துவிட்டன, ஆனாலும் “குளியல் விரிப்”பாகிய ஃபுரோஷிகி என்ற பெயர் இன்னும் நிலைத்திருக்கிறது.

பாரம்பரியங்கள் வேகமாக மறையும் காலத்திலே, ஃபுரோஷிகி புழக்கத்திலிருந்து வருகிறது. பெரும்பான்மையான குடும்பங்கள் சுமார் எட்டு ஃபுரோஷிகியை கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். மேலும் ஜப்பானின் அதிவிரைவு புல்லட் டிரெய்ன்களிலுள்ள லக்கேஜ் ராக்குகள் அவர்கள் சொல்லும் காரியங்களை ஆதரிப்பதாய் தோன்றுகின்றன. மேல்நாட்டு உடைகளை உடுத்தும் பயணிகள், பழையதைப் புதியதோடு, பாரம்பரியத்தை நவீனநாளைய உடைகளோடு தாராளமாக கலந்து போட்டுக்கொள்கிறார்கள்.

கடைகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பெரிய பேப்பர் பைகளையும் பிளாஸ்டிக் பைகளையும் வழங்க ஆரம்பித்தபோது கொஞ்ச காலம் வியாபாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. இருந்தபோதிலும், நிலைமை மாறிவிட்டிருக்கிறது. ஃபுரோஷிகி டிசைன் செய்பவரின் லேப்பிள்களையும் நவீன டிசைன்களையும் பார்த்து நவநாகரிகமான ஜப்பானிய இளம் பெண்களுக்கு கவர்ச்சிகரமாக இருக்கிறது. தோல் பையால் ஒருக்காலும் மேட்ச் ஆகாத அளவுக்கு ஃபுரோஷிகி கிமோனோவோடு மேட்ச் ஆகிறது. ஆக கிமோனோ விசேஷ சமயங்களில் வெளிவரும்போது, ஃபுரோஷிகியும் பெரிய பார்சல்களோடு வெளிவருகிறது.

நிச்சயமாகவே, சுற்றுத்துணிகளைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். ஃபுரோஷிகி இயல் நார்களால் செய்யப்பட்டதால் தூக்கியெறிந்துவிட அவசியமில்லை. அவற்றை திரும்பவும் திரும்பவும் உபயோகிக்கலாம். அவை சிறியதாக இருக்கின்றன. லேசாக இருக்கின்றன. கொண்டுபோவதற்கு இலகுவாக இருக்கின்றன. கணப்பொழுதில் எந்தவொரு வடிவத்துக்கும் அளவுக்கும் மாற்றப்படும் பைகளாக இருக்கின்றன. ஃபுரோஷிகியைப் பற்றி தெரியாது இருக்கிற மெச்சக்கூடிய அயல்நாட்டு சுற்றுப்பயணிகளின் கைகளில் அழகான குட்டைகளாகவும் மேசையின் நடுவில் வைப்பதற்கான துணிகளாகவும் ஆகின்றன. மேலும் சமீபத்தில் ஜப்பானியர் அயல்நாட்டவரை பார்த்து காப்பியடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதே விதத்தில் ஃபுரோஷிகியை உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். மேசை விரிப்புகளாகவும் மெத்தை உறைகளாகவும் ஏப்ரன்களாகவும் சுவரில் தொங்கும் அலங்காரப் பொருட்களாகவும் வேறு எதற்கெல்லாம் உபயோகிக்கலாம் என்று யோசிக்கிறார்களோ அவற்றிற்கெல்லாம் உபயோகிக்கிறார்கள். நிச்சயமாகவே, ஃபுரோஷிகி எந்தளவுக்கு பல்பயனுள்ளதாயிருக்கிறது என்று மக்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்