உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g95 9/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1995
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1994
  • எமதுவாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1995
g95 9/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

கிறிஸ்தவனாக மாறிய படைவீரன் “பயிற்றுவிக்கப்பட்டதோ கொல்ல, இப்பொழுது தருவதோ உயிரை,” (செப்டம்பர் 8, 1994) என்ற கட்டுரையை நான் வாசித்தபோது என் கண்களில் நீர் ததும்பியது. பாலஸ்தீனன் ஒருவர் யூதன் ஒருவரை “சகோதரரே” என்று அழைப்பது—யெகோவாவின் அமைப்பில் மட்டும்தான் இப்படிப்பட்ட ஐக்கியத்தைக் காணமுடியும்!

கே. டி. ஓ., மலேசியா

உங்களுடைய முத்திரை “உங்களுடைய முத்திரை—உங்களுடைய கையொப்பம்” (மே 22, 1994) என்ற ஆர்வமூட்டும் கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. நானும் என் கணவரும் தைவானைச் சேர்ந்த ஒரு புத்தமத துறவியோடு பைபிளைப் படித்துக்கொண்டிருக்கிறோம். அந்தக் கட்டுரை அவ்வளவு துல்லியமாக இருந்ததாக அவர் சொன்னார்! பிறகு அவர் தைவானிலுள்ள தன்னுடைய அம்மாவுக்கு கடிதம் எழுதி, எங்களுடைய பெயர் பதிக்கப்பட்ட ஒரு முத்திரையை எங்களுக்கு அனுப்பித்தரும்படி செய்தார். நாங்கள் கிளர்ச்சியடைந்தோம்!

கே. ஜே., ஐக்கிய மாகாணங்கள்

சலிப்புத்தட்டுதல் “வாழ்க்கை சலிப்புத்தட்டுகிறதா? உங்களால் மாற்ற முடியும்!” (ஜனவரி 22, 1995) என்ற தொடர் கட்டுரைகளை இப்பொழுதுதான் படித்துமுடித்தேன். அது எனக்கு எவ்வளவு உதவிற்று என்பதை நான் உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும். எனக்கு சலிப்புத்தட்டியதாக நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததுகிடையாது, ஆனால் சலிப்புத்தட்டும் என்னுடைய வழக்கமுறையினால் நான் என் வாழ்க்கையில் மிகவும் அதிருப்தியுள்ளவனாய் இருந்தேன். இந்தக் கட்டுரை காரியங்களை முற்றிலும் புதிய நோக்குநிலையில் பார்க்க எனக்கு உதவிற்று.

எஸ். வி., ஐக்கிய மாகாணங்கள்

கானரித் தீவுகள் “கானரித் தீவுகள்—சாதகமான சீதோஷ்ணநிலை, கவர்ந்திழுக்கும் இயற்கைக் காட்சி,” என்ற நவம்பர் 22, 1994 தேதியிட்ட கட்டுரையை வாசித்தபின், அதற்கும் விழித்தெழு!-வில் வெளிவரும் அதைப்போன்ற மற்ற கட்டுரைகளுக்கும் என்னுடைய போற்றுதலைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நமது பூமி மற்றும் யெகோவாவின் பல்வேறு படைப்புகள் ஆகியவற்றைப்பற்றிய அறிவையும் அவற்றிற்கான போற்றுதலையும் இக்கட்டுரைகள் அதிகரிக்கின்றன. கிளர்ச்சியூட்டும் இத்தகைய “சுற்றுப் பயணத்திற்கு” எங்களை அழைத்துச் செல்வதற்காக உங்களுக்கு நன்றி.

டி. ஜி., ஐக்கிய மாகாணங்கள்

மிஷனரிகள் “மிஷனரிகள்—ஒளியின் ஊழியரா இருளின் ஊழியரா?” என்ற உங்களுடைய மிகச் சிறந்த தொடர்கட்டுரைகளை, முக்கியமாக “இன்று உண்மையான சீஷர்களை உண்டுபண்ணுதல்” (டிசம்பர் 22, 1994) என்ற அதன் ஆறாவது பாகத்தை நான் பெரிதும் போற்றினேன். கிலியடில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு மிஷனரி தம்பதிகளோடு சேர்ந்து சேவிப்பதால் எங்களுடைய சபை பெரிதும் பயனடைந்திருக்கிறது. அவர்களுடைய ஞானமான அறிவுரைகளும் வைராக்கியமும் நான் முழுநேர ஊழியத்தை வாழ்க்கைத் தொழிலாக ஆக்கிக்கொள்ளும்படி செய்திருக்கின்றன.

ஜே. கே., போட்ஸ்வானா

நாசிஸத்தை எதிர்த்தல் “நாங்கள் ஹிட்லரின் போரை ஆதரிக்கவில்லை” என்ற கட்டுரையால் (அக்டோபர் 22, 1994) நான் நெகிழ்விக்கப்பட்டேன். நாசிஸத்தை ஆதரிக்க ஆறு ஆஸ்திரிய பிஷப்புகளின் “புனித அறிவிப்பின்” ஒரு படம் அதில் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த ஆறு பிஷப்புகளில் ஒருவர்தான் 1928-ல் நான் ஒரு ஜெஸ்யுட் மாணவனாக இருந்தபோது என்னை உறுதிப்பாடு செய்தவர். தன்னாலேயே ஒரு உறுதியான கிறிஸ்தவனாக இருக்கத் தெரியாத ஒருவரிடமிருந்து வந்த அந்த “உறுதிப்பாட்டை” நினைத்து எனக்கு சிரிப்பு வருகிறது! அந்தப் போர் கத்தோலிக்க சர்ச்சோடு எனக்கிருந்த தொடர்பை அறுத்தது. நான் என் தாயகத்தைவிட்டும் வெளியேறினேன். எனக்குத் தெரிந்த வழிகளில் போரை எதிர்க்க நான் முயற்சித்தபோதிலும், வோல்பார்ட் குடும்பத்தினருக்கு இருந்த மனோதைரியம் எனக்கு இல்லாதிருந்தது. துப்பாக்கி ஏந்த மறுத்த இரண்டு யெகோவாவின் சாட்சிகளை எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர்கள் உடனடியாக கொல்லப்பட்டனர். அப்படிப்பட்டவர்களை நான் மெச்சுகிறேன்.

பி. கே., சிலி

இளைஞர் கேட்கின்றனர் “இளைஞர் கேட்கின்றனர் . . . என்னுடைய உடைகளை நான் மேம்படுத்துவது எப்படி?” என்ற கட்டுரைக்காக (ஜனவரி 22, 1995) உங்களுக்கு நன்றி. நான் எழுந்துபோய், நிரம்பிக் கிடக்கும் என்னுடைய துணிமணிகளை ஒழுங்குபடுத்தும்படி அது செய்தது. எனக்கு ஏகப்பட்ட துணிமணிகள் இருந்தபோதிலும், போட்டுக்கொள்ள எதையாவது எடுப்பதில் எனக்கு ஒவ்வொரு நாளும் பிரச்சினை இருந்துவந்தது. ஆனால் இப்போது அது மிக எளிதாக இருக்கிறது. உங்களுடைய உதவியளிக்கும் ஆலோசனைகளுக்கு நன்றி.

டி. பி., ஹவாய்

“பாணிகள்—அவற்றின் கவர்ச்சி என்ன?” மற்றும் “நவீன பாணிகள்—அவற்றை நான் பின்பற்ற வேண்டுமா?” போன்ற கட்டுரைகளில் (நவம்பர் 22, 1994 மற்றும் டிசம்பர் 8, 1994) அடங்கியிருந்த மிகச் சிறந்த கருத்துகளுக்காக உங்களுக்கு நன்றி. ஒரு கிறிஸ்தவ மூப்பனாக, என்னுடைய தராதரங்களை மற்றவர்கள்மேல் திணிப்பதைத் தவிர்ப்பது எப்போதுமே அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவேண்டும். ஆனால், ‘மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் மனப்பான்மைகளையும் கவனத்தில் கொள்வது,’ மற்றும் ‘மற்றவர்கள் மோசமானவை என்று கருதும் உடை மற்றும் நடத்தை பாணிகளையும் தவிர்ப்பது’ போன்ற உங்களுடைய சொற்றொடர்கள் மக்களைத் தூண்டுவிக்கின்றன.

டி. சி., க்ரோஷியா.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்