உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g96 5/22 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1996
  • இதே தகவல்
  • எமது வசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—1996
g96 5/22 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் நான் இப்போதுதான் அக்டோபர் 8, 1995, விழித்தெழு! பத்திரிகையைப் பெற்றேன், அதில் “ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள்—எவ்வளவு வெற்றிகரமானவையாக இருக்கக்கூடும்?” என்ற தொடர் கட்டுரையை வாசித்தேன். இக் கட்டுரைகளுக்காக மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். அவை மிகவும் காலத்துக்கேற்றவையாய் இருக்கின்றன. ஏழரை ஆண்டுகளாக நான் ஓர் ஒற்றைப் பெற்றோராக இருந்திருக்கிறேன், மேலும் அவ்வாறிருப்பது வெகு சிரமமாய் இருந்திருக்கிறது. எனக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறாள், அவள் ஒரு சிரமமான, கலகத்தனமான காலக்கட்டத்தை அனுபவித்து வருகிறாள். என் வேலைச் சூழ்நிலையோ மிகவும் நிலையற்ற ஒன்றாய் உள்ளது. என்றபோதிலும், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆதரவளிக்கும், அன்பான சபையில் இருப்பதற்காக நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். என் கார் சம்பந்தமாக ஏதாவது உதவி, அல்லது வெறுமனே செவிகொடுத்துக் கேட்கும் ஒருவரின் உதவி எப்போதெல்லாம் எனக்குத் தேவைப்பட்டதோ, அப்போதெல்லாம் என் சகோதரர்கள் எனக்காக உதவி செய்திருக்கின்றனர்.

டி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

1978-லிருந்து நான் ஒற்றைப் பெற்றோராக இருந்திருக்கிறேன். உணர்வு மிகுந்த மனக்கிளர்ச்சிக்கும் விரக்திக்குமிடையிலான மனமாறுதல்களை உண்டாக்கும் தன்மையுள்ள மனச்சோர்வால் துன்புற்றதன் விளைவால், நான் எப்போதும் மிகச் சிறந்த பெற்றோராய் இருக்கவில்லை. இருந்தாலும், பதிவுநாடாவில் வரும் பத்திரிகைகளுக்கு எப்போதும் செவிசாய்ப்பதுண்டு. ஏற்கெனவே இவ்விதழை இருமுறை கேட்டுவிட்டேன், இப்போதும் அது என் ஸ்டீரியோவில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்தப் பத்திரிகைகள் அத்தகைய வியக்கத்தகுந்த தகவலை உடையதாயிருக்கும் வரையில், என் குடும்பம் வெற்றிகரமானதாயிருக்கும் என்று நான் உணருகிறேன்!

டி. ஓ., ஐக்கிய மாகாணங்கள்

மகிழ்விக்கக் கடினமாயுள்ள கடவுள்? நான் ஓர் ஒற்றைப் பெற்றோர், ஒற்றைப் பெற்றோர்களைப் பற்றிய கட்டுரைகளைக் கொண்டிருந்த அக்டோபர் 8, 1995 இதழின் அட்டையைப் பார்த்தபோது, நான் அழுதுவிட்டேன். ஆனால் நான் வாசித்த அந்த முதல் கட்டுரை, “பைபிளின் கருத்து: கடவுளுடைய தராதரங்கள் எட்டுவதற்கு மிகக் கடினமானவையா?” என்பதாயிருந்தது. ஆம், தோல்வியுறுவதாய்த் தோன்றும் ஓர் அம்மாவாயிருக்கும் எனக்கு, இக்கட்டுரை விடுதலையளிப்பதாய் இருந்தது. நான் இழக்கும் ஒருத்தியாய் இல்லை என்பதை அது எனக்குக் காட்டியது. அது வெறுமனே சாத்தானைப் பொய்யனாக நிரூபிக்கும் எனது முறையாகத்தான் இருக்கிறது. இந்த நல்ல கட்டுரைக்காக யெகோவாவுக்கு நன்றி!

ஆர். என்., ஐக்கிய மாகாணங்கள்

என்னை மிகவும் நெகிழ வைத்த ஒரு கட்டுரை அது. யெகோவா சர்வ வல்லவராக இருந்தபோதிலும், நாம் செய்துள்ள தவறுகளை மன்னிப்பதற்கு அவர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார் என்பதை நினைப்பது ஆச்சரியமூட்டுவதாய் உள்ளது. சில சமயங்களில் நாம் தவறுபவர்களாய் இருந்தாலும், கடவுளுடைய தராதரங்களின்படி வாழ்வதன் மூலம் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கலாம் என்பதைப் போற்ற இக்கட்டுரை எனக்கு உதவியது.

டி. சி., ஐக்கிய மாகாணங்கள்

நதிக் குருடு சமீபத்தில், எங்கள் கிராமத்தில் நதிக்குருடு தடுப்புக்காக ஓர் அரசாங்க ஏஜென்ஸி மாத்திரைகளை விநியோகித்தது. அதற்குப் பிறகு விரைவில், “நதிக்குருடு—ஒரு பயங்கரமான கொள்ளைநோயை வெல்லுதல்” என்ற கட்டுரையைக் கொண்டிருந்த அக்டோபர் 8, 1995 இதழை நான் பெற்றேன். நான் என் அயலாரிடம் அதை நல்ல விதத்தில் பயன்படுத்தினேன். அரசு ஏஜென்ட் ஒருவர் அக்கட்டுரையைப் பார்த்தபோது, வியப்புற்றார்: “உங்கள் அமைப்பு வெறும் ஒரு மதமாக இருப்பதைவிட மேலானது!” மேலுமாக, உள்ளூர் மருத்துவர் காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரு பத்திரிகைகளுக்கும் சந்தாவைப் பெற்றுக்கொண்டார். எங்கள் பகுதியிலுள்ள பலர் அப் பத்திரிகைகளை விரும்பி கேட்கின்றனர். நைஜீரியாவில் நடந்துகொண்டிருப்பதைப்பற்றி அவை குறிப்பிடுவதைப் பார்க்கையில் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர்.

ஏ. ஏ., நைஜீரியா

ஐடிட்டராடு “ஐடிட்டராடு—பத்து நூற்றாண்டுகளாக ஸ்தாபிக்கப்பட்டது” (அக்டோபர் 8, 1995) என்ற கட்டுரையை இப்போதுதான் வாசித்து முடித்தேன், மிக அதிகமான தகவல் நிறைந்துள்ள, மனதை ஆச்சரியத்துக்குள் ஆழ்த்தும் ஒரு கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்க நான் தூண்டப்பட்டேன்! வாசகர் அனுபவிக்கும் விதத்தில் அது ஒரு தெளிவான காட்சியை விளக்கியது. அந்த 1,800 கிலோமீட்டர் தூரமுள்ள பாதையில் நாயோட்டிகளில் ஒருத்தியாய் நான் இருந்ததுபோலவே உணர்ந்தேன்! மேலும் யெகோவாவுக்கான—மனிதனையும் விலங்கையும் படைத்திருப்பதிலிருந்து தமது பண்புகளை வெளிப்படையாய்க் காட்டியிருப்பவருக்கான—ஆழ்ந்த போற்றுதல் உணர்வைப் பெற்றேன்.

ஜே. ஹெச்., ஐக்கிய மாகாணங்கள்

சட்டப்பூர்வ வெற்றி “ஒரே சீராக இயங்கும் நாட்டில்—சிறுபான்மையோருக்கு ஒரு வெற்றி” (அக்டோபர் 8, 1995) என்ற கட்டுரையை நான் வாசித்தேன். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஜூடோ வகுப்பைவிட்டு வெளியே அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. கோபிலிருக்கும் அச் சகோதரர்கள் தங்கள் வணக்க சுயாதீனத்தையும், கல்வியைப் பெறுவதற்கான தங்கள் உரிமையையும் பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் இப் பிரச்சினையைக் குறித்து வழக்கு தொடுத்துக் கொண்டிருப்பதாக நான் வாசித்தபோது உற்சாகப்படுத்தப்பட்டேன். இப்போது அப்பள்ளி உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்திருப்பதால், அச் சகோதரர்கள் ஒரு சாதகமான தீர்ப்பைப் பெறுவதற்காக நான் ஜெபித்துவருகிறேன்.

ஒய். கே., ஜப்பான்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்