உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g97 4/22 பக். 31
  • ருமேனியாவில் ஆன்மீக பசி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ருமேனியாவில் ஆன்மீக பசி
  • விழித்தெழு!—1997
  • இதே தகவல்
  • எதிர்ப்பின் மத்தியில் நடத்தப்பட்ட ருமேனிய மாநாடுகள்
    விழித்தெழு!—1997
  • கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்—பிளவுற்ற ஒரு மதம்
    விழித்தெழு!—1996
  • ருமேனியாவில் பைபிள் சத்தியத்தைக் கற்றேன்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • கிழக்கு ஐரோப்பாவில் யெகோவாவின் சாட்சிகள்
    விழித்தெழு!—1991
விழித்தெழு!—1997
g97 4/22 பக். 31

ருமேனியாவில் ஆன்மீக பசி

ருமேனியாவில் இருக்கும் 2.3 கோடி மக்களில் சுமார் 90 சதவிகிதத்தினர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அங்கத்தினர்கள்; கம்யூனிஸ்ட் ஆட்சியின்கீழ் இயங்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது என்ற செய்தியை ருமேனியாவிலுள்ள ப்ரசோவ்விலிருந்து வெளிவந்த அசோஷியேட்டட் பிரஸ் அறிக்கை சொன்னது. ஆனால், சர்ச்சில் தராதரம் குறைந்துபோவதை பலரும் காண்கிறார்கள் என்பதாக அ.ஐ.மா., கொலராடோவிலுள்ள கென்யான் நகரின் டெய்லி ரிக்கார்டு குறிப்பிட்டது. அதன் தலைப்புச் செய்தி இவ்வாறு கூறியது: “அன்றாட வாழ்க்கைக்கும் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுக்கும் தொடர்பே இல்லை என்பதை ருமேனியர்கள் கண்டுள்ளனர்.”

கடந்த அக்டோபர் மாதம் அந்தச் செய்தித்தாள் இவ்வாறு கூறியது: “எழுத்தாளரும் தத்துவஞானியுமான அலெச்சாண்டிரூ பாலேவோலோகூ என்பவர், ஆர்த்தடாக்ஸ் சர்ச் தலைவர்களிடம் நம்பிக்கை குறைந்துபோனதை மேற்கோள் காட்டினார். மதத்தின் பண்பாடும், அடிப்படை அம்சமும் குழம்பிப்போய் உள்ளது. உதாரணத்திற்கு மக்கள் பயபக்தியாய் சிலுவை போட்டுக்கொள்கிறார்கள், உபவாசம் இருக்கிறார்கள். ஆனால் பாவச்செயலாக சர்ச் கருதும் கருச்சிதைவை இஷ்டம்போல் செய்கிறார்கள்.”

பலர் யெகோவாவின் சாட்சிகளாக மாறுவதை அந்த டெய்லி ரிக்கார்டு குறிப்பிட்டு, சாட்சிகள் நடத்தும் பைபிள் போதனா திட்டத்தின் பயனை அடைந்த ஒரு குடும்பத்தைப் பற்றி மேற்கோள் காட்டியது: “ப்ளோரன்டினா பெட்ரீஷாரின் கணவர் நன்றாக குடித்துவிட்டு வந்து தன்னை அடித்ததாக அவர் கூறினார். ஆனால் அந்தத் தம்பதி யெகோவாவின் சாட்சிகளாக ஆன பிறகு, அவருடைய குடும்ப வாழ்க்கை அமைதிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.”

“உள்ளூர் பாதிரிமார் ஆன்மீக போதனை தர தவறியதும், பணம் பணம் என்று அலைந்ததும்தான்” தையல் தொழில் செய்துவரும் 38 வயது ப்ளோரன்டினா, “ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைவிட்டு வெளியேறியதற்கான காரணம்” என்று அறிக்கை ஒன்று கூறியது. அந்தச் செய்தித்தாள் மேலும் இவ்வாறு விளக்கியது: “தன்னுடைய மாமனார் இறந்தபோது, பாதிரியார் வந்து, நல்லபடியாக சவ அடக்கம் நடத்தி கொடுப்பதற்காக, அவருக்கு கையில் பணத்தையும் கொடுத்து, விருந்தையும் அளிக்க வேண்டியதாயிற்று. பிள்ளைகளின் சாப்பாட்டிற்காக வைத்திருந்த கொஞ்சநஞ்ச காசையும் அந்தப் பாதிரியாருக்காக அழவேண்டியதாயிற்று என்பதாக பெட்ரீஷார் கூறினார். ‘அது சரி அல்ல என்று எனக்குத் தோன்றியது’ என்றும் சொன்னார்.”

சாட்சிகளைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்ப சர்ச் முனைந்திருப்பதைப் பற்றி டெய்லி ரிக்கார்டு இவ்வாறு குறிப்பிட்டது: “ருமேனியாவில் மீண்டும் செல்வாக்குப் பெற்றிருக்கிற இந்த ஆர்த்தடாக்ஸ் சர்ச் கடந்த கோடைக்காலத்தில், ருமேனியாவின் தலைநகராகிய புகாரெஸ்டில் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வரவிருந்த யெகோவாவின் சாட்சிகளை டிரான்செல்வேனியன் நகரங்களான ப்ரசோவ்வுக்கும் க்ளுஜ்க்கும் போகும்படி தந்திரமாய் செயல்பட்ட அரசாங்கத்திற்கு துணைபோனது.”

ஜூலை 1996-ல் திட்டமிட்டிருந்த சர்வதேச மாநாட்டை ரத்து செய்யும்படி அரசாங்கத்தை தூண்டுவதற்காக சர்ச் செய்த பிரச்சாரத்தைப் பற்றி பிப்ரவரி 22, 1997, விழித்தெழு! இதழ் கூறியது. எப்படி உடனடியாக மாநாடுகளை க்ளுஜ்-நாப்போக்காவிலும், ப்ரசோவ்விலும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன என்றும், எப்படி அவற்றிற்கு 34,866 பேர் வந்தனர் என்றும் நீங்கள் அந்தப் பத்திரிகையில் படித்து தெரிந்துகொள்ளலாம். அது உலகறிந்த விஷயமாக ஆனதுதான் அதன் தனிச்சிறப்பு. “எது எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று ருமேனியாவின் ஆர்த்தடாக்ஸ் சர்ச் எதிர்பார்த்ததோ உண்மையில் அதுவே நற்செய்தியை இன்னும் விரிவாக பரப்பிவிட்டது” என்பதாக மாநாட்டு பிரதிநிதி சாட்சி ஒருவர் கூறினார்.

[பக்கம் 31-ன் படம்]

ப்ரசோவ்வில் நடந்த மாநாட்டில் வருகையாளர்கள் பாடல் பாடுகிறார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்