உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 6/8 பக். 30
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1999
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு புரியாத புதிர்
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1999
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 6/8 பக். 30

எமது வாசகரிடமிருந்து

ஷேக்ஸ்பியர் பற்றிய சர்ச்சை  “வில்லியம் ஷேக்ஸ்பியர்​—⁠ஒரு புரியாத புதிர்” (ஆகஸ்ட் 8, 1998) என்ற கட்டுரை இன்னும் கூடுதலாக ஆராய என்னை தூண்டியது. எரிக் சாம்ஸ் எழுதிய ‘உண்மையான ஷேக்ஸ்பியர்: ஆரம்ப ஆண்டுகளை அலசுதல் என்ற ஆங்கில நூல் அக்கறைக்குரிய அநேக குறிப்புகளை குறிப்பிட்டது. உதாரணமாக, புராட்டஸ்டன்ட் இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் ஒரு கத்தோலிக்கராக இருந்திருக்கலாம் என புரிந்துகொள்வதன் அடிப்படையில் அநேக புதிர்களுக்கு விடை காணலாம். மத துன்புறுத்துதலின் காரணமாக அவர் தப்பியோடியது அவருடைய விடுபட்ட வருடங்களுக்கு விளக்கமளிக்கலாம். அதோடு, ஷேக்ஸ்பியரின் படைப்புகளில் அவருடைய ஆரம்பகால வாழ்க்கையின் பல அடையாளங்களை காணமுடியும். அவருடைய மகனின் பெயராகிய ஹேம்லட் என்பது உட்பட, அவருடைய பல்வேறு கதாபாத்திரங்களின் பெயர்கள் குடும்பத்திலிருந்தும் நண்பர்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை. அவருடைய நாடகங்கள் எண்ணற்ற விவரங்களைத் தருகின்றன; கசாப்பு போடுதல் போன்ற விஷயங்கள் அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கலாம்.

ஜே. ஏ., ஐக்கிய மாகாணங்கள்

இந்தக் கவிஞனைப் பற்றிய சர்ச்சையை அவ்வளவு சீக்கிரத்தில் தீர்க்க முடியாது என்றே தோன்றுகிறது. ஆனால் இந்தக் குறிப்புகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.​—⁠ED.

பறவை பிரியர்  “காக்-ஆஃப்-த-ராக்​—⁠அமேசான் காட்டின் ஆணழகன்” (செப்டம்பர் 22, 1998) என்ற கட்டுரையில் யெகோவாவின் அற்புத படைப்பை அருமையாக விவரித்ததற்கு நன்றி. உங்களுடைய கட்டுரை சிலகணத்திற்கு என்னை அமேசான் காட்டிற்கே அழைத்துச் சென்றுவிட்டது.

ஈ. எல். வி., பிரேஸில்

இந்தக் கட்டுரை ஒரு வித்தியாசமான முறையில் என் கவனத்தைக் கவர்ந்தது. உற்சாகமளிக்கும் ஒரு கோணத்தில் எழுதப்பட்டிருந்தது, இவையனைத்தையும் நம்முடைய மகிழ்ச்சிக்காக யெகோவா படைத்திருக்கிறார் என்பதையும் வலியுறுத்திக் காட்டியது!

எல். எச்., பார்படோஸ்

“பறவைகளைப் பார்வையிடுதல்​—⁠எல்லாருக்குமே இனியதோர் விருப்பவேலையா?” (ஜூலை 8, 1998) என்ற கட்டுரையை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். ஆனால், “வட/மத்திப அமெரிக்காவைச்” சேர்ந்த பறவை என நீங்கள் குறிப்பிட்ட தேன்சிட்டு தென் அமெரிக்காவிலும் சிறகடித்துப் பறப்பதைப் பார்க்கலாம்.

ஜே. பி., அர்ஜென்டினா

எங்கள் கட்டுரையில் கொடுக்கப்பட்ட விவரங்கள் எல்லாவற்றையும் விளக்குபவையல்ல, உங்களுடைய விளக்கத்தைப் பாராட்டுகிறோம்.​—⁠ED.

மனதை ஒருமுகப்படுத்துதல்  ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போது கவனம் செலுத்துவது எனக்கு எப்பொழுதுமே பிரச்சினையாக இருக்கிறது. ஆனால், “இளைஞர் கேட்கின்றனர் . . . நான் எவ்வாறு நன்றாக கவனம்செலுத்த முடியும்?” (செப்டம்பர் 22, 1998) என்ற கட்டுரை, வகுப்பில் என்னுடைய பழக்கத்தை மாற்றிக்கொள்வதற்கு உதவியது. அந்தக் கட்டுரையைப் படித்ததிலிருந்து, இந்தப் பிரச்சினையை நான் சமாளித்துவிட்டேன், இப்பொழுது அதிக கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்கிறேன்.

எம். ஏ. எம்., பிரேஸில்

கவனம் செலுத்துவது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தேவையானதெல்லாம் உந்துவிப்பும், சுயகட்டுப்பாடுமே என்பதை நான் உணரவில்லை. இதற்கு ஊக்கமான முயற்சி தேவை, ஆனால் அதை என்னால் செய்ய முடியும் என நினைக்கிறேன்!

டி. ஆர். ஏ., ஐக்கிய மாகாணங்கள்

விழித்தெழு! தகவல் சுரங்கம். என்னைப் போன்ற இளைஞர்களுக்கு ரொம்ப ‘இன்ட்ரஸ்டிங்கா’ இருக்கிறது. இந்தக் கட்டுரை எனக்கு பயனளித்தது, ஏனெனில் கவனம் செலுத்த முடியாதது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்கிறது. இதயங்கனிந்த நன்றி.

எம். என்., இத்தாலி

ரயில்கள்  “ரயில் பயணம் தொடருமா?” (அக்டோபர் 8, 1998) என்ற கட்டுரையை பக்கத்திற்குப் பக்கம் ரசித்து சுவைத்துப் படித்தேன். நான் சிறுவனாக இருந்தது முதற்கொண்டே ரயில்கள் என்றால் எனக்கு கொள்ளை ஆசை. 1800-கள் முதற்கொண்டு இப்பொழுது வரை ரயில் தொழில்நுட்ப வரலாற்றை பற்றி நீங்கள் கொடுத்த தகவல் மிக திருத்தமாக இருந்தது. அனுபவித்து படிக்கத்தக்க இந்தக் கட்டுரைக்கு நன்றி.

எல். எம்., ஐக்கிய மாகாணங்கள்

இந்த உலகிலேயே தொழில்நுட்பத்தில் முன்னேறிய ரயில் தொழிற்சாலை ஒன்றில் நான் வேலை பார்க்கிறேன். இப்படிப்பட்ட ‘எக்ஸலென்ட்’ கட்டுரையை எழுதியதற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் கொடுத்த தகவல் உண்மையானது, ஆதாரப்பூர்வமானது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீலுக்குப் பதிலாக அலுமினியம் போன்ற பொருட்களை சில அதிவேக ரயில்களில் பயன்படுத்துகிறார்கள் என்பதை குறிப்பிட விரும்புகிறேன். ஜெர்மனியில் சமீபத்தில் நடந்த ரயில் விபத்திலிருந்து தெரிய வந்துள்ளபடி, அதிவேகமே பாதுகாப்பை பறிக்கிறது.

ஐ. டி. சி., போர்ச்சுக்கல்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்