உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g00 11/8 பக். 31
  • சத்தமிடும் வெண்பனி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சத்தமிடும் வெண்பனி
  • விழித்தெழு!—2000
  • இதே தகவல்
  • ஒரு குளிர்காலப் போர்வை
    விழித்தெழு!—1996
  • உறைபனியின் கதகதப்பில்
    விழித்தெழு!—2008
  • இரைச்சல்—இதைக் குறித்து நீங்கள் என்ன செய்யலாம்
    விழித்தெழு!—1997
  • திரும்பவும் மழையா!
    விழித்தெழு!—2004
மேலும் பார்க்க
விழித்தெழு!—2000
g00 11/8 பக். 31

சத்தமிடும் வெண்பனி

தண்ணீரின் மேற்பரப்பில் வெண்பனி விழும்போது, அது ஓசை எழுப்புவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வோசை நம் காதுகளில் விழுவதில்லை. தீ வண்டி வரும்போது எழுப்புகிற பெல் சத்தம்போல் இச்சத்தம் உச்சநிலையை அடைந்து, பட்டென அடங்கிவிடுகிறதாம். ஒரு நொடியை பத்தாயிரம் பகுதிகளாக பிரித்தால், அவற்றில் ஒரு பகுதி நேரம் எவ்வளவு குறைவோ, அதற்குள் ஓசை ஓங்கி ஒலித்து ஒடுங்கிவிடுகிறது.

மழைத்துளி அல்லது பனிக்கட்டி மழை தண்ணீரின் மேற்பரப்பில் விழும்போது, அது உள்ளே சென்றுவிடுகிறது. ஆனால் பனித்திவலை (snowflake) தக்கையாக இருப்பதால் தண்ணீரின் மேற்பரப்பில் படிந்துவிடுகிறது. படிந்த பனித்திவலை விரைவில் கரைந்து, ‘சத்தமிடுகிறது.’ இவ்வாறு பனித்திவலை சத்தமிடுகிற விஷயத்தை சுமார் 15 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டனர். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டார்கள். இப்போது, அலாஸ்காவில் ஒலி அலை (sonar) மூலம் சால்மன் மீன்கள் இடப்பெயர்ச்சி செய்வதை ஆராய்கிற உயிரியல் வல்லுநர்களுக்கு பனித்திவலையின் சத்தம் பெரும் தலைவலியாக உள்ளது. இந்தப் பனித்திவலையின் சத்தம், மீன்கள் கொடுக்கிற சிக்னல் சத்தத்தை அடக்கிவிடுகிறது அல்லது குழப்பிவிடுகிறது. இதனால், சோனாரை பயன்படுத்தி மீன்களின் தடயங்களை குறிக்கும் முயற்சிகள் வீணாகின்றன. எப்படி பனித்திவலை சத்தமிடும்?

இதை நியூ சயன்டிஸ்ட் பத்திரிகை விளக்குகிறது. பனித்திவலை தண்ணீர் மேல் மிதக்கும்போது தண்ணீருக்கு அடியில் சத்தம் வருவதில்லை. ஆனால் உடனே பனி கரையும்போது, நுண்துளை ஈர்ப்பாற்றல் (capillary action) விதிப்படி தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அப்போது ஒருவேளை பனித்திவலைகள் காற்று குமிழிகளை வெளிவிடுகின்றன அல்லது தண்ணீர் மேலே உயரும்போது அக்குமிழிகள் அமிழ்ந்துவிடுகின்றன. பிறகு, ஒவ்வொரு காற்றுக் குமிழியும் தண்ணீரின் சமநிலையை அடைகையில் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு அதிரும் ஒலி அலைகள் பெல் சத்தத்தை சத்தமாக ஒலிக்க செய்கின்றன.

[பக்கம் 31-ன் படத்திற்கான நன்றி]

Snow Crystals/Dover

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்