பாகம் 9
பூமி எப்போது பூஞ்சோலையாக மாறும்?
இன்று நடக்கிற கெட்ட காரியங்களை வைத்தே கடவுளுடைய அரசாங்கம் சீக்கிரத்தில் வரப்போகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். லூக்கா 21:10, 11; 2 தீமோத்தேயு 3:1-5
இன்று இருக்கிற உலக நிலைமைகளைப் பற்றி பைபிள் முன்பே சொல்லியிருக்கிறது. மக்கள் பண ஆசை பிடித்தவர்களாக இருப்பார்கள், கொடூரமாக நடந்துகொள்வார்கள், சுகபோகமாக வாழ ஆசைப்படுவார்கள், அப்பா-அம்மா பேச்சை பிள்ளைகள் கேட்க மாட்டார்கள் என்று சொல்லியிருக்கிறது.
அதோடு, பெரிய நிலநடுக்கங்கள், போர்கள், பஞ்சங்கள், பயங்கர வியாதிகள் ஆகியவை இருக்கும் என்று பைபிள் சொல்லியிருக்கிறது. இதெல்லாம் இப்போது நடக்கிறது.
கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தி உலகம் முழுவதும் பிரசங்கிக்கப்படும் என்றும் இயேசு சொன்னார். —மத்தேயு 24:14.
அக்கிரமத்துக்கும் அநியாயத்துக்கும் கடவுளுடைய ஆட்சி முடிவுகட்டும். 2 பேதுரு 3:13
கெட்டவர்கள் எல்லாரையும் யெகோவா சீக்கிரத்தில் அழிப்பார்.
சாத்தானுக்கும் அவனுடைய பேய்களுக்கும் தண்டனை கிடைக்கும்.
கடவுள் சொல்வதைக் கேட்கிறவர்கள் மட்டும்தான் தப்பிப்பார்கள். சமாதானமான பூஞ்சோலை பூமியில் வாழ்வார்கள். அங்கே பயம் இருக்காது. எல்லாரையும் நம்பலாம், எல்லாரும் அன்பாக இருப்பார்கள்.