ஆவியுலகத் தொடர்பு இதில் கவர்ச்சி அதிகரித்து வருவதேன்?
பிரான்ஸ் என்பவர் உள்ளூர் புராட்டஸ்டாண்டு சர்ச்சில் ஒரு தூணாக இருக்கிறார். சர்ச்சில் ஏதாவது செய்வதற்கு வேலையிருந்தால், உதவும் கரம் கொடுக்க இவர் முதல் ஆளாக நிற்கிறார். வில்ஹெல்மினாவும் கூட கடவுள் பயமுள்ளவள். “நீங்கள் கட்டாயம் சர்ச்சுக்குப் போக வேண்டும்” என்று அவள் சொல்கிறாள். அவள் தவறாமல் போகிறாள். அதே விதமாக எஸ்தரும் ஒழுங்காக சர்ச்சுக்குப் போய் வருகிறாள். தன்னுடைய ஜெபங்களைச் சொல்லாமல் ஒரு நாள்கூட கடந்து போவதை அவள் அனுமதிப்பதில்லை. மூவருக்கும் ஒரு காரியத்தில் ஒற்றுமை உண்டு. அவர்கள் ஆவி மத்தியஸ்தர்களாகவும் கூட இருக்கிறார்கள்.
சூரினாமில் வாழும் இம்மூவர் மட்டுமே இப்படியாக இல்லை. உலகம் முழுவதிலும் ஆவியுலகத் தொடர்பில் இந்த திடீர் கவர்ச்சி வேகமாக வளர்ந்து வருகிறது. இதைச் சிந்தித்துப் பாருங்கள்: ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே ஆவியுலகத் தொடர்பின் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட சுமார் 30 பத்திரிக்கைகள், மொத்தமாக 1,00,00,000 அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் அதே விஷயத்தில் 20,00,000 பேருக்கு ஆர்வமிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆவியுலகத் தொடர்புடைய சம்பவங்களில் நம்பிக்கையுள்ளவர்களில், பெரிய நகரங்களில் வாழும் மக்களும், உயர் கல்வி பெற்றவர்களும், வாலிபர்களும் இடம் பெறுவதை நெதர்லாந்தில் அண்மை காலத்தில் செய்யப்பட்ட வாக்கெடுப்பு காண்பித்தது. மேலுமாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் குடியிருப்பவர்களின் விஷயத்தில் உண்மையாயிருப்பது போலவே, எண்ணற்ற தேசங்களில், ஆவியுலகத் தொடர்பு அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பாகமாகிவிட்டிருக்கிறது. மாயமந்திர அதிர்ச்சியும் ஆன்மீக ஆற்றலும் என்ற தங்களுடைய புத்தகத்தில் ஆசிரியர்கள் ஜான் வெல்டனும் கிளிஃபோர்ட் வில்சனும் பின்வருமாறு எழுதியது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை: “முன்னொருபோதுமில்லாத, மாயமந்திர மறுமலர்ச்சி காலத்தில் நாமிருக்கிறோம் என்பதாக பல்வேறுபட்ட தொகுதிகளிலுள்ள கருத்துரையாளர்களும் நினைப்பதாக தோன்றுகிறது.
ஆம், சோதிடம், தன் வயப்படுத்தும் வசீகர சாஸ்திரம், உள இயல் ஆய்வு, இயன்மிகை புலனுணர்வு, மாயவித்தை, கனவுகளுக்கு அர்த்தஞ் சொல்லுதல் போன்றவற்றின் வடிவில் ஆவியுலகத் தொடர்பும் மாய மந்திரமும் எல்லா வாழ்க்கைத் துறையிலுமுள்ள ஆட்களையும் கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. ஏன்?
ஒரு காரியமானது, சில கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகள் ஆவி உலகத்தோடு தொடர்பு கொள்வதை பொருட்படுத்தாமல், அதற்கு நடைமுறையில் ஆதரவளிக்கவும் செய்கின்றன. ஆவிகளோடு தொடர்பு கொள்வது கடவுளோடு நெருங்கி வருவதற்கு மற்றொரு வழியாக இருப்பதாக அவை தெரிவிக்கின்றன.
உதாரணத்துக்கு சூரினாமிலுள்ள வியாபாரியாகிய 70 வயது நிரம்பிய இசாக் அமெல்லோவை எடுத்துக்கொள்ளுங்கள். ஏழு வருடங்களாக அவர் சர்ச் கவுன்ஸிலில் மதிப்புக்குரிய உறுப்பினராகவும் அதே சமயத்தில் பிரபலமான ஆவி மத்தியஸ்தராகவும் இருந்து வந்தார். அவர் சொல்கிறார்: “ஒவ்வொரு சனிக்கிழமையிலும் எங்களுடைய முழு சர்ச் கவுன்ஸிலும் ஆவிகளிடம் தகவல் கேட்பதற்காக கிராமத்துக்கு வெளியே கூடிவருவோம். தொடர்ந்து இரவு முழுவதும் அதை செய்துகொண்டிருப்போம். அடுத்த நாள் காலை வரும்போது உதவி குரு கைக் கடிகாரத்தை கவனமாக பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஐந்து மணியானவுடன், நிறுத்திக் கொள்ளும்படியாக சைகையால் காட்டுவார். பிறகு நாங்கள் குளித்து உடை மாற்றிக்கொண்டு சர்ச்சுக்கு, ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு சரியாக நேரத்துக்கு விரைந்து செல்வோம். இந்த எல்லா ஆண்டுகளின்போதும் ஆயர் இதை கண்டனம் செய்யும் ஒரு வார்த்தையையும் ஒருபோதும் சொன்னதில்லை.”
சூரினாமில் ஆவியுலகத் தொடர்புக்கும் சர்ச்சுகளுக்குமிடையே உள்ள பிணைப்பை ஆராய்ந்த ஆலந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் R. வான்லையர், அநேகர் ஆவியுலகத் தொடர்பை “குறை நிரப்பிடும் மதமாக” கருதுவதாக உறுதி செய்கிறார். லீடன் பல்கலைக்கழகம் அண்மையில் பிரசுரித்திருந்த ஒரு ஆராய்ச்சியில், ஆவியுலகத் தொடர்பானது “விரிவான மத சம்பந்தமான ஒரு அமைப்பின் பாகமாக கிறிஸ்தவத்துக்கு பக்கத்தில் இடம் பெறுவதாக ஒப்புக் கொள்ளப்படுகிறது” என்பதாகவும்கூட அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் ஆவியுலகத் தொடர்பை கிறிஸ்தவ மண்டலம் ஏற்றுக் கொண்டிருப்பதானது இது கடவுளால் அங்கீகரிக்கப்படுகிறது என்பதற்கு உறுதியளிப்பதாக இருக்கிறதா? என்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆவிகளோடு தொடர்புகொள்வது அவரிடமாக உங்களை நெருங்கிவரச் செய்யுமா? பைபிள் உண்மையில் ஆவியுலகத்தோடு தொடர்புகொள்வதைப் பற்றி என்ன சொல்லுகிறது? (w87 9⁄1)
[பக்கம் 3-ன் படம்]
முழு சர்ச் கவுன்ஸிலும், ஆவிகளோடு தொடர்பு கொள்வதற்காக கூடிவந்தது இசாக் அமெல்லோவுக்கு நினைவிருக்கிறது