உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 12/1 பக். 3-4
  • குற்றச்செயல் ஏன் இவ்வளவு அதிகம்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • குற்றச்செயல் ஏன் இவ்வளவு அதிகம்?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இதே தகவல்
  • குற்றச்செயல் இல்லாதிருந்த காலம்
    விழித்தெழு!—1998
  • குற்றச்செயலுக்கு முடிவு இப்பொழுது சமீபம்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • குற்றச்செயலை ஒழிக்க போராடுதல்
    விழித்தெழு!—1996
  • குற்றச்செயலுக்குத் தீர்வு உண்டா?
    விழித்தெழு!—2008
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 12/1 பக். 3-4

குற்றச்செயல் ஏன் இவ்வளவு அதிகம்?

“பெரும்பாலான குற்றச்செயல்கள் சொத்துடைமைகளுக்கு எதிரானவை,” என்று பிரிட்டிஷ் அரசின் ஒரு சிற்றேடு கூறுகிறது. என்றபோதிலும் அந்த நாட்டில் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்மையான குற்றச்செயல்கள் “மிக வேகமாக அதிகரிக்கும் குற்றச்செயலின் வகை” என்று அறிக்கைசெய்யப்படுகிறது. இது எல்லாக் குற்றங்களிலும் 5 சதவீதமாக மட்டுமே இருந்தபோதிலும் அப்படி இருக்கிறது.

இந்நிலை உலகமுழுவதுமாகக் குற்றச்செயலின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துகொண்டிருப்பதற்கு முகம் பார்க்கும் கண்ணாடியாய்த் திகழ்கிறது. விமானக் கடத்தல்கள், ஆயுதங்களுடன் கொள்ளையடித்தல், கற்பழித்தல் மற்றும் மற்ற வன்முறைச்செயல்கள் உலகச் செய்தித்தாள்களில் இடைவிடாது இடம்பெறுகின்றன; அநேகமாக வன்முறையற்றச் சம்பவங்களைவிட மக்கள் கவனத்தை அதிகமாக ஈர்ப்பதாயிருக்கிறது. அப்படியென்றால், நீங்களும் உங்களுடைய உடைமைகளும் குற்றச்செயலின் குறியிலக்காக இருக்கக்கூடும் என்பது தெளிவாக இருக்கிறது. ஆனால் ஏன்? குற்றவாளிகளாக ஆவதற்கு ஆட்களைத் தூண்டுவது என்ன?

குற்றவாளிகளில் பலர் சந்தர்ப்பவாதிகளாகவே இருக்கின்றனர். இதன் பலனாக, கொந்தளித்தெழும் குற்றச்செயலுக்கு எதிரான முயற்சிகளின் ஒரு பாகமாக, அதிகாரிகள் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதற்கு மக்கள் கூடுதல் விழிப்புணர்வு கொண்டவர்களாய் இருக்கும்படி உற்சாகப்படுத்துகின்றனர். குற்றச் செயல்களைத் தடுப்பதற்கு அப்படிப்பட்ட வழிமுறைகள் பயன்படுத்தப்பட்டாலும், அவைதானே ஆட்கள் குற்றவாளிகளாவதிலிருந்து தடைசெய்கிறதா? இல்லை.

குற்றவாளியின் ஆள்தன்மை என்பது அதிக ஆய்வுக்குரிய ஒன்று. அக்கறைக்குரிய ஒரு காரியம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள், அதிக ஆர்வத்துடன் பின்வருமாறு சொல்லுகிறவர்களைக் குறித்து இளைஞரை எச்சரிக்குமிடத்து, ஒரு குற்றவாளியின் உள்ளெண்ணத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது: “வா; யாரையாவது கொல்லப் பார்ப்போம்! குற்றமற்ற அப்பாவி மக்களில் யாரையாவது தாக்கி வேடிக்கை பார்ப்போம்! நாம் பார்க்கும் போது அவர்கள் உயிரோடிருப்பார்கள், சுகமாயும் இருப்பார்கள், ஆனால் அவர்களை நாம் தீர்த்துகட்டினால், அவர்கள் செத்துக்கிடப்பார்கள்! நாம் சகல விதமான செல்வங்களையும் கண்டடைவோம், அந்தக் கொள்ளைப்பொருளால் நம் வீட்டை நிரப்புவோம்! வா, எங்களைச் சேர்ந்துகொள், நாம் திருடும் அனைத்தையும் பங்குபோட்டுக்கொள்வோம்.” (நீதிமொழிகள் 1:11–14, இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு) ஆம், பேராசை, பிறர் பொருளை இச்சித்தல், மற்றும் பொருளாசை எண்ணம் ஆகிய காரியங்கள் குற்றச்செயலைப் பேணிவளர்க்கின்றன.

இந்த 20-வது நூற்றாண்டில் போதை மருந்து துர்ப்பிரயோகமும் சுகபோகத் தத்துவமும்கூட அநேகருடைய சிந்தனையை ஆண்டுவருகிறது. அனாவசியமான கூடுதல் செலவுகளை ஈடுகட்ட பணம் தேவை, இது மற்றவர்களைப் பாதித்தாலும் அல்லது அந்தப் பணத்தைப் பெறுவதற்காக அவருடைய உயிரை எடுப்பதாயிருந்தாலும் கவலைப்படுவதில்லை. இந்தக் ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ “அவர்கள் கால்கள் குற்றச் செயலுக்கு விரைகிறது, இரத்தஞ்சிந்தப் பொறுமையற்றிருக்கிறார்கள்,” என்பது அநேகருடைய விஷயத்தில் உண்மையாயிருக்கிறது.—2 தீமோத்தேயு 3:1, 3, 4; நீதிமொழிகள் 1:16, புதிய ஆங்கில பைபிள்.

ஒரு குற்றச் செயல் என்பது “விசேஷமாக ஒழுக்கநெறிக்கு எதிரான மோசமான குற்றமாகும்,” என்று வெப்ஸ்டர்ஸ் ஒன்பதாவது புதிய கல்லூரி அகராதி (Webster’s Ninth New Collegiate Dictionary) கூறுகிறது. நாம் ஒழுக்கநெறி முறிந்துவிட்ட ஒரு சகாப்தத்தில் வாழ்கிறோம். “தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிற” ஆட்களைக் குறித்து பவுல் அப்போஸ்தலன் எபேசிய கிறிஸ்தவர்களை எச்சரித்தான். “அவர்கள் புத்தியிலே அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.” அதுபோல, நாமும் இன்று இதற்குச் செவிகொடுக்க வேண்டும்.—எபேசியர் 4:17–19.

கொடுங்காம உணர்ச்சிகளைத் தூண்டிடும் வீடியோ காட்சிகளின் பெருக்கமும், போர்களை மேன்மைப்படுத்துவதும், தகாத இன்பங்களை தன்னலமாய் நாடிச்செல்லுவதுமான காரியங்கள் அனைத்துமே சிலரைக் குற்றச்செயலிழைப்பவர்களாகவும், அதே சமயத்தில் குற்றமற்ற அப்பாவி மக்களை அவர்களுடைய குற்றச்செயல்களின் குறியிலக்காகவும் ஆக்குவதில்லையா? ஆனால் இந்தக் குற்றச்செயல் என்னும் சிலந்திக்கூட்டை இன்னும் அதிகச் சிக்கலாக்கும் ஒன்று இருக்கிறது. அது என்ன?

பிசாசாகிய சாத்தான். இன்றைய உலகின் பண்பாகத் திகழும் யோசனையற்ற வன்முறை மற்றும் குற்றச்செயல் என்னும் தீயை அவனுடைய கோபம் மூட்டிவிடுகிறது. (1 யோவான் 5:19; வெளிப்படுத்துதல் 12:12) அனைத்து மக்களையும் உண்மையான கடவுளாகிய யெகோவாவிடமிருந்து விலக்கிவிட வேண்டும் என்பது அவனுடைய நோக்கம். அவன் அநேகருடைய காரியத்தில் வெற்றிகொள்ளக்கூடும் என்றாலும், கடவுளுடைய உண்மையான ஊழியர்களின் உத்தமத்தை முறிப்பதில் தோல்வியுறுவான் என்று பைபிள் தீர்க்கதரிசனமாக வெளிப்படுத்துகிறது. கடைசியாக, சாத்தான் நீக்கப்படுவான். சாத்தான் நீக்கப்பட்டாலும், அது குற்றச்செயலுக்கு முடிவைக் குறித்திடுமா? குற்றச்செயலுக்கு முடிவு இப்பொழுது சமீபமாயிருக்கிறதா? (w89 8/15)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்