ஒளியிலும் அன்பிலும் தொடர்ந்து நடந்துகொண்டிருங்கள்
முதல் யோவானிலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவா ஒளிக்கும் அன்புக்கும் ஊற்றுமூலர். நாம் ஆவிக்குரிய ஒளிக்குக் கடவுளை நோக்கியிருக்க வேண்டும். (சங்கீதம் 43:3) அன்பு அவருடைய பரிசுத்த ஆவியின் கனிகளில் ஒன்று.—கலாத்தியர் 5:22, 23.
அப்போஸ்தலனாகிய யோவானின் முதல் கடிதத்தில் ஒளியும் அன்பும் மற்ற காரியங்களும் கலந்தாராயப்படுகின்றன. அநேகமாய் இது பொ.ச. 98 போல் எபேசு பட்டணத்தில் அல்லது அதற்கு அண்மையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதை எழுதுவதற்கு ஒரு முக்கிய காரணம், கிறிஸ்தவர்களை விசுவாச துரோகத்திலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்கள் தொடர்ந்து ஒளியில் நடக்க உதவுவதற்குமாக இருந்தது. நம்முடைய அன்புக்கும், விசுவாசத்துக்கும், சத்தியத்துக்கு உண்மையாயிருப்பதற்கும் சவால்களை நாம் எதிர்ப்படுவதால், இந்தக் கடிதத்தை நாம் சிந்தித்துப்பார்ப்பது நிச்சயமாகவே நமக்கு உதவியாயிருக்கும்.
‘ஒளியில் நடக்க வேண்டும்’
உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய ஒளியில் நடக்க வேண்டும் என்பதை யோவான் தெளிவுபடுத்தினான். (1:1–2:29) அவன் சொன்னான்: “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை [தீமை, ஒழுக்கக்கேடு, பொய் மற்றும் பரிசுத்தமற்றவை எதுவும் இல்லை].” பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘ஒளியில் நடப்பதால்’ அவர்கள் கடவுளோடும், கிறிஸ்துவோடும், மற்றவர்களோடும் ஒரு “பங்கைக் கொண்டிருக்கின்றனர்.” அவர்கள் இயேசுவின் இரத்தத்தால் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்டுமிருக்கிறார்கள்.
நாம் பரலோக நம்பிக்கையுடைய அபிஷேகம்பண்ணப்பட்டக் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது பூமியில் நித்திய ஜீவனை எதிர்நோக்கியிருப்பவர்களாய் இருந்தாலுஞ்சரி, நாம் உலகத்தை அல்ல, ஆனால் நம்முடைய சகோதரர்களை நேசித்தால் மட்டுமே இயேசுவின் பலியிலிருந்து தொடர்ந்து நன்மை பெறுகிறவர்களாக இருப்போம். மேலும் நாம் பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிற “அந்திக்கிறிஸ்து” போன்ற விசுவாச துரோகிகளால் செல்வாக்குச் செலுத்துப்படுவதைத் தவிர்க்கவும் வேண்டும். சத்தியத்தைப் பற்றியிருப்பவர்களும் நீதியை அப்பியாசிக்கிறவர்களும் மட்டுமே நித்திய ஜீவனை அனுபவித்து மகிழ்வார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்க வேண்டாம்.
தேவனுடைய பிள்ளைகள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள்
யோவான் அடுத்து தேவனுடைய பிள்ளைகளை அடையாளங்காட்டினான். (3:1–4:21) ஒன்று, அவர்கள் நீதியைச் செய்கிறார்கள். அவர்கள் யெகோவா தேவனின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறார்கள். ‘அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள், மற்றும் ஒருவரிலொருவர் அன்புகூருகிறார்கள்.’ ‘தேவனைப் பற்றிய அறிவை’யுடைய ஒருவன் யெகோவாவின் நோக்கத்தையும் அவருடைய அன்பு எவ்விதம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் அறிந்திருக்கிறான். இதுதானே அவன் அன்பை வெளிப்படுத்திட உதவ வேண்டும். உண்மையில், “அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.” கடவுள் ‘நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பின’ போது தெய்வீக அன்பு வெளியானது. யெகோவா நம்மை அந்தளவுக்கு நேசித்தாரென்றால், நாமும் ஒருவரிலொருவர் அன்புகூர கடமைப்பட்டிருக்கிறோம். ஆம், கடவுளில் அன்புகூருவதாக உரிமைப்பாராட்டும் எவரும் தன்னுடைய ஆவிக்குரிய சகோதரனில் அன்புகூரவேண்டும்.
விசுவாசம் ‘உலகத்தை ஜெயிக்கிறது’
அன்புதானே கடவுளுடைய பிள்ளைகள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ள தூண்டுகிறது, ஆனால் விசுவாசத்தால்தான் அவர்கள் ‘உலகத்தை ஜெயிக்கிறார்கள்.’ (5:1–21) இந்த உலகின் தவறான யோசனைகளையும் வழிகளையும் மறுப்பதன் மூலமும் அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்வதன் மூலமும் கடவுளிலும் அவருடைய வார்த்தையிலும் அவருடைய குமாரனிலும் நாம் கொண்டிருக்கும் விசுவாசம் இந்த ‘உலகத்தை ஜெயிக்க’ நமக்கு உதவுகிறது. ‘உலகத்தை ஜெயிப்பவர்களுக்குக்’ கடவுள் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார் மற்றும் அவருடைய சித்தத்திற்கு இசைவாக இருக்கும் அவர்களுடைய ஜெபங்களுக்கும் அவர் செவிகொடுக்கிறார். “தேவனால் பிறந்த” எவனும் பாவத்தைப் பழக்கமாகச் செய்வதில்லையாதலால், சாத்தான் அப்படிப்பட்டவர்களிடத்தில் தன் பிடியைக் கொண்டில்லை. ஆனால் ‘இந்த உலகம் முழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது,’ என்பதை அபிஷேகம்பண்ணப்பட்டவர்களும், பூமிக்குரிய நம்பிக்கையுடைய யெகோவாவின் ஊழியர்களுமாகிய இரு வகுப்பினருமே நினைவிற்கொள்ள வேண்டும். (w91 4⁄15)
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
பாவங்களை நிவர்த்தி செய்கிற ஒரு கிருபாதார பலி: இயேசு “நம்முடைய [அவரைப் பின்பற்றும் அபிஷேகம்பண்ணப்பட்டவர்கள்] பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் [மனிதவர்க்கத்தின் மற்றவர்கள்] பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.” (1 யோவான் 2:2) அவருடைய மரணம் “நிவிர்த்தி செய்கிற” ஒன்றாய் (கிரேக்கு, ஹிலாஸ்மாஸ், “திருப்திப்படுத்தும் ஒரு வழி,” ஒரு “நிவாரணம்” என்பதைக் குறித்தது) இருந்தது, ஆனால் கடவுளுடைய பங்கில் புண்பட்ட உணர்ச்சிகளை ஆற்றுதல் என்ற கருத்தில் அல்ல. மாறாக, இயேசுவின் பலி பரிபூரண தெய்வீக நீதியின் தேவைகளைத் திருப்திப்படுத்தியது. எப்படி? கடவுள் “நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை [பாவத்தைச் சுதந்தரித்த மனிதனை] நீதிமானாக்குகிறவருமாய்” பாவத்தை மன்னிப்பதற்கு நீதியான ஆதாரத்தை அளிப்பதன்மூலம். (ரோமர் 3:23–26; 5:12) மனிதனுடைய பாவங்களுக்கு ஈடாக முழு திருப்தியை உண்டாக்கும் வழியை ஏற்படுத்துவதன் மூலம் மனிதன் யெகோவாவுடன் சரியான உறவை நாடவும் அடையவும் இயேசுவின் பலி அதை நிவிர்த்தி செய்கிற அல்லது கிருபாதார பலியாக்கியது. (எபேசியர் 1:7; எபிரெயர் 2:17) இதற்காக நாம் எல்லாரும் எவ்வளவு நன்றியாய் இருக்க வேண்டும்!