முதியோருக்குக் கிறிஸ்தவர்கள் எவ்வாறு உதவிசெய்யலாம்
‘நாங்கள் சோர்ந்து போகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. . . . மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிறோம் நாம். . . . ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.’ இதை அப்போஸ்தலன் பவுல் கொரிந்தியருக்கு எழுதின தன்னுடைய இரண்டாம் கடிதத்தில் சொன்னார்.—2 கொரிந்தியர் 4:16-18.
பூர்வ காலங்களில், விசுவாசமிக்க ஆண்களும் பெண்களும் காணப்படாதவைகளை நோக்கியிருந்தனர்; இவை, அவர்களுடைய கடவுள் தம்முடைய குறிப்பிட்ட காலத்தில் செய்யப் போவதாக வாக்குக்கொடுத்த எல்லாக் காரியங்களையும் உட்படுத்தின. எபிரெயர் புத்தகத்தில், இப்படிப்பட்டவர்களைப்பற்றி மிகப் புகழ்ந்து பவுல் பேசுகிறார்; அவர்கள் தங்களுடைய மரணம்வரை தங்களுடைய விசுவாசத்தைக் காத்துக்கொண்டனர்—அவர்களில் சிலர் அதிக முதிர்வயது வரை வாழ்ந்தனர். அவர்களை நமக்கு முன்மாதிரிகளாக அவர் குறிப்பிட்டு, சொல்கிறார்: “இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளை அடையாமல், (வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளின் நிறைவேற்றத்தை காணாமல், NW) தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, . . . விசுவாசத்தோடே மரித்தார்கள்.”—எபிரெயர் 11:13.
இந்த வாக்குறுதிகளின் நிறைவேற்றத்திற்கு மிக அருகில், இன்று நாம் இருக்கிறோம். ஆனால் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைக் காண உயிரோடிருப்பார்களோ என்று நிச்சயமற்று இருக்கும் முதியோர் மற்றும் நோயுற்றவர்கள் நம் மத்தியில் இருக்கிறார்கள். இவர்களில் சிலர், தங்களுடைய சொந்த வாழ்க்கை காலத்தில், எல்லா வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தைக் காணாமல் விசுவாசத்தில் ஒருவேளை மரிக்கவுங்கூடும். இப்படிப்பட்டவர்களுக்கு 2 கொரிந்தியர் 4:16, 18-ல் உள்ள பவுலின் வார்த்தைகள் அதிக உற்சாகமளிப்பதாய் இருக்கக்கூடும்.
யெகோவா, முதிர்வயதினர் மற்றும் நோயுற்றவர்கள் உட்பட, தம்முடைய எல்லா உண்மையுள்ளவர்களையும், ஞாபகத்தில் வைத்திருக்கிறார். (எபிரெயர் 6:10) பைபிளில், உண்மையுள்ள முதியவர்கள் மரியாதையோடு பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள், மேலும் மோசேயின் நியாயப்பிரமாணத்தில், முதிர்வயதினருக்கு மரியாதைக் காட்டுவதைப்பற்றி விசேஷத்த வகையில் குறிப்பிடப்படுகிறது. (லேவியராகமம் 19:32; சங்கீதம் 92:12-15; நீதிமொழிகள் 16:31) ஆரம்பக் கிறிஸ்தவர்கள் மத்தியில், முதியவர்கள் மதிப்போடு நடத்தப்பட்டனர். (1 தீமோத்தேயு 5:1-3; 1 பேதுரு 5:5) ஓர் இளம் பெண் தன்னுடைய முதிர்வயதடையும் மாமிக்கு அன்பான அக்கறையையும், இருதயத்தைத் தொடும் தன்னல தியாகத்தையும் காண்பிப்பதைப்பற்றிய ஓர் அழகான பதிவை ஒரு பைபிள் புத்தகம் உடையதாயிருக்கிறது. அந்தப் புத்தகம், ரூத் என்ற பெயருடைய அந்த இளம் பெண்ணின் பெயரையே உடையதாயிருக்கிறது.
மனமுவந்து முன்வந்த ஓர் உதவியாளர்
வயதாகும் நகோமிக்கு வாழ்க்கை கசப்பாயிருந்தது. ஒரு பஞ்சம், அவளை தன் நண்பர்களையும் ஆஸ்திகளையும் யூதாவிலே விட்டுவிட்டு, தன்னுடைய சிறிய குடும்பத்தோடு வெளியேறி, யோர்தான் நதியின் கிழக்கே மோவாப் தேசத்திற்கு வாழ்வதற்கு வரும்படி செய்தது. இங்கு நகோமியின் கணவன் மரித்துவிடுகிறான்; அவர்களின் இரண்டு பையன்களோடு அவள் தனியே விடப்படுகிறாள். இவர்கள் காலப்போக்கில், வளர்ந்து, திருமணஞ்செய்கின்றனர்; ஆனால் அவர்களும் மரித்துவிடுகின்றனர். நகோமி தன் சந்ததியில் அவளைக் கவனிக்க யாரும் இல்லாமல் விட்டுவிடப்படுகிறாள்.
ஒரு புதிய குடும்பத்தை ஆரம்பிக்கவும் முடியாத அளவிற்கு அவள் அதிக வயதடைந்தவளாக இருந்தாள்; வாழ்க்கை அர்த்தமற்றதாகத் தோன்ற ஆரம்பித்தது. தன்னலமற்ற உணர்வோடு, தன்னுடைய இரண்டு மகன்களின் விதவைகள் ரூத்தையும் ஒர்பாளையும், அவர்களுக்குக் கணவர்களைக் கண்டுகொள்ளும்படி, அவர்களுடைய தாய் வீடுகளுக்கு அனுப்ப விரும்பினாள். அவள் தன்னுடைய சொந்த நாட்டிற்குத் தனியே திரும்பி வர விரும்பினாள். இன்றுங்கூட, சில முதியவர்கள், முக்கியமாகத் தங்களுடைய அன்புக்குரியவர்களை மரணத்தில் இழக்கும்போது, மன வருத்தமடைகின்றனர். நகோமியைப்போல, அவர்களைக் கவனிப்பதற்கு யாரேனும் தேவைப்படக்கூடும், ஆனாலும் அவர்கள் பாரமாக இருக்க விரும்புவதில்லை.
எனினும், ரூத் தன்னுடைய மாமியை தனியே விட்டுப்போகவில்லை. அவள் இந்த வயதான பெண்மணியை நேசித்தாள்; மேலும் நகோமி வணங்கிய கடவுளாகிய யெகோவாவையும் நேசித்தாள். (ரூத் 1:16) எனவே, இருவரும் சேர்ந்து யூதாவுக்குப் பிரயாணம் செய்தனர். அந்தத் தேசத்தில், வயல்வெளிகளில் அறுவடைக்குப் பின் கீழே சிந்தியிருக்கும் தானியக் கதிர்களை ஏழைகள் பொறுக்கிக்கொள்ளும் அல்லது சேகரித்துக்கொள்ளும் ஓர் அன்பான ஏற்பாடு யெகோவாவின் சட்டத்தின்கீழ் இருந்தது. இளம் வயதிலிருந்த ரூத், இந்த வேலைசெய்வதற்கு தன்னை மனமுவந்து அளித்து, சொன்னாள்: ‘நான் போக அனுமதியும்.’ இருவரின் நலனிற்காகச் சோர்ந்துபோகாமல் அவள் வேலைபார்த்தாள்.—ரூத் 2:2, 17, 18.
ரூத் யெகோவாவின்மீது கொண்டிருந்த விசுவாசமும், அன்பும் நகோமிக்கு பலமிக்க உற்சாகமளிப்பதாய் இருந்தது; அவள் சாதகமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்க ஆரம்பித்தாள். நியாயப்பிரமாணம் மற்றும் தேசத்தின் பழக்கவழக்கங்களையும்பற்றிய அவளுடைய அறிவு இப்போது உதவியாக இருந்தது. அவள் தன்னுடைய மனமுவந்து முன்வந்த உதவியாளருக்கு ஆலோசனை கொடுத்தாள்; இது அந்த இளம் பெண், மாண்டவன் மனைவியை உடன்பிறந்தான் மணந்துகொள்ளும் முறைப்படி, குடும்ப சுதந்தரத்தைப் பெறவும், குடும்பத்தின் வாரிசை தொடர்வதற்கு ஒரு மகனைப் பெற்றெடுக்கவும் உதவியது. (ரூத், அதிகாரம் 3) நோய்ப்பட்டவர்களையோ முதிர்வயதினரையோ கவனிப்பதற்கு தியாகங்களைச் செய்வோருக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக ரூத் இருக்கிறாள். (ரூத் 2:10-12) சபைக்குள்ளும் இன்று, நோயுற்றவர்களுக்கும் முதிர்வயதினருக்கும் இதைப்போலவே அதிகம் செய்யப்படலாம். எப்படி?
ஒழுங்கமைப்பது பயனுள்ளது
ஆரம்பக் கிறிஸ்தவச் சபையில், பொருளாதார உதவி தேவைப்பட்ட விதவைகளின் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. (1 தீமோத்தேயு 5:9, 10) அதைப்போலவே இன்று, சில சமயங்களில் மூப்பர்கள் விசேஷித்த கவனம் தேவைப்படும் நோய்ப்பட்டவர்கள், முதியவர்கள் ஆகியோரின் பட்டியலைப் போடலாம். சில சபைகளில் இதைச் செய்வதற்கு, ஒரு மூப்பர் விசேஷமாக நியமிக்கப்பட்டிருக்கிறார். பல முதியவர்கள் நகோமியைப்போல உதவியை நாட விரும்புவதில்லை, எனவே அப்படிப்பட்ட சகோதரர் சூழ்நிலையை ஆராய்ந்துபார்க்கும் திறமையுடையவராய் இருக்கவேண்டும்; மேலும்—சாதுரியமான, விவேகமான வழியில்—தேவையான காரியங்கள் செய்யப்படுவதை நிச்சயப்படுத்தவேண்டும். உதாரணமாக, ராஜ்ய மன்றம், நோயுற்றவர்களுக்கும் முதியோருக்கும் தேவைப்படும் போதுமான வசதிகளைக் கொண்டிருக்கிறதா என்று கவனிக்கலாம். நடைமுறையானதாய் இருந்தால், சக்கர நாற்காலிகளுக்கு ஒரு சாய்வுதளம், பொருத்தமான ஓய்வு அறை வசதிகள், கேட்க கஷ்டப்படுகிறவர்களுக்குக் காதுகளில் பொருத்தப்படும் ஒலிவாங்கிக் கருவிகள், மேலும் விசேஷித்த நாற்காலிகளுக்கு ஓரிடம் போன்ற தேவைகளை அவர் மனதில் வைத்துக்கொள்ளலாம். இந்தச் சகோதரர், ராஜ்ய மன்றத்திற்கு வந்து கூட்டத்தில் பங்குகொள்ள முடியாதவர்கள் அனைவரும் கூட்டங்களின் ஒலிப்பதிவுகளைப் பெற்றுக் கேட்பதற்கு அல்லது அவற்றை தொலைபேசி மூலமாகக் கேட்கும்படி ஏற்பாடு செய்யப்படும்படி கவனித்துக்கொள்ளவேண்டும்.
கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் போக்குவரத்து வசதி செய்துதரவேண்டிய ஒரு தேவையும் இருக்கும். ஒரு முதிர்வயதான சகோதரிக்கு ஒரு பிரச்னை வந்தது; ஏனென்றால் எப்போதும் அவரைக் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டுபோகும் நபர் அப்போது இல்லை. ஒரு போக்குவரத்து வசதியை இறுதியாகப் பெறுவதற்குள், அவர் பலரைத் தொலைபேசியில் அணுகவேண்டியதிருந்தது; இதன்விளைவாக அவர், மற்றவர்களைத் தொல்லைப்படுத்துவதுபோல் உணர்ந்தார். இப்படிப்பட்ட விஷயங்களைக் கவனித்துக்கொள்ளும் ஒரு மூப்பரோடு தொடர்புகொள்ளுதல், அவருடைய சங்கடங்களையெல்லாம் நீக்கியிருக்கும்.
முதியவர்களைப் பார்க்கப்போவதில் தங்கள்தங்கள் முறைகளை எடுத்துக்கொள்ளும்படி வேறுபட்ட குடும்பங்களை இந்த மூப்பர் கேட்கலாம். இந்த வகையில், முதியோரைக் கவனித்தல் என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் பாகம் என்பதைப் பிள்ளைகள் உணர்ந்துகொள்வர். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்குப் பிள்ளைகள் கற்றுக்கொள்வது நல்லது. (1 தீமோத்தேயு 5:4) ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார்: “என் அனுபவத்தில், மிக குறுகிய எண்ணிக்கையினரான குழந்தைகளோ இளைஞரோ முதிர்வயதினரை அல்லது நோயுற்றவர்களைச் சந்திக்க போவதற்கு தானாக முன்வருகின்றனர்.” ஒருவேளை அவர்கள் அதைப்பற்றி சிந்திக்காமல் இருக்கலாம், அல்லது அவர்கள் ஒருவேளை என்ன செய்யவேண்டும் அல்லது என்ன சொல்லவேண்டும் என்பதைக் குறித்து நிச்சயமற்றவராக இருக்கலாம்; பெற்றோர்கள் அவர்களுக்கு இதைச் சொல்லிக்கொடுக்கலாம்.
ஆனாலும், ஒரு நண்பர் வருவதைப்பற்றி முன்கூட்டியே பெரும்பாலான முதியவர்கள் அறிய விரும்புவார்கள் என்பதை ஞாபகத்தில் வையுங்கள். இது பார்க்க வருபவரின் வருகையை எதிர்பார்த்திருக்கும் ஒரு கூடுதலான சந்தோஷத்தை அவர்களுக்குத் தருகிறது. பார்க்க வருபவர்கள், காபியோ கேக்கோ போன்ற சிற்றுண்டிகளைக் கொண்டுவந்து, பின்பு, உடனே சுத்தஞ்செய்தார்களென்றால், முதியோருக்கு வரும் கூடுதலான தொல்லை தவிர்க்கப்படலாம். ஒரு முதிர்வயதடைந்த தம்பதி, இன்னும் முழு பலத்தோடு, ஒவ்வொரு வாரமும் இடைவிடாமல் ஓர் உல்லாசப் பயண (பிக்னிக்) கூடையை நிரப்பிக்கொண்டு சபையில் முதிர்வயதாய் இருப்பவர்களை வரிசைக்கிரமமாகச் சந்தித்துவருகிறார்கள். அவர்களுடைய விஜயங்கள் அதிகமாகப் போற்றப்படுகின்றன.
முதிர்வயதினரின் வசதிக்காக, பல சபைகளில் சபை புத்தகப் படிப்புகள் பகல்நேரங்களில் நடத்தப்படுகின்றன. ஓர் இடத்தில் சில குடும்பங்களும், தனிப் பிரஸ்தாபிகளும் இப்படிப்பட்ட ஒரு தொகுதிக்கு உதவிசெய்ய முடியுமா என்று கேட்கப்பட்டனர்; அதன் விளைவு, முதியவர்களும் இளைஞரும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளும் ஒரு புத்தகப் படிப்பு தொகுதியானது.
இதைப்பற்றி, மூப்பர்கள் மட்டுமே அக்கறைகொள்ளவேண்டும் என்று விட்டுவிடக் கூடாது. நாம் அனைவருமே வியாதிப்பட்டோர், முதியவர்கள் ஆகியோரின் தேவைகளை அறிந்திருப்பது அவசியம். நாம் அவர்களை இராஜ்ய மன்றத்திலே வரவேற்கலாம், அவர்களோடு பேசுவதற்கு சிறிது நேரம் செலவழிக்கலாம். குறித்தசமயத்தில் சாதாரண கூட்டுறவுகொள்வதற்கு முன்வந்து ஏற்பாடுசெய்யலாம். அல்லது ஒரு பிக்னிக் அல்லது ஒரு நீண்ட விடுமுறையில் போவதற்கு நம்மோடு வரும்படி அவர்களை அழைக்கலாம். ஒரு சாட்சி தன்னுடைய காரில் தொழில் சம்பந்தமாக நகரத்திற்குள் போகும்போது, அடிக்கடி வயதான பிரஸ்தாபிகளையெல்லாம் கூட்டிக்கொண்டு சென்றார். முதியவர்கள் தொடர்ந்து மதிக்கப்படுகிறார்கள் என்று உணரவைக்கப்பட உதவிசெய்வது முக்கியமானது. நகோமி செய்ய விரும்பியதுபோல அவர்கள் சோர்ந்துபோக அனுமதியாதீர்கள்; இது வயதாகும் அல்லது முதுமையடையும் செயலை அதிகரிக்கும்.
உடல் ஊனமுற்றவர்கள் அல்லது நோயுற்றவர்களுமாகிய இளைஞருக்கும் நம்முடைய உதவி தேவை. சுகப்படுத்த முடியாதபடி நோயுற்றிருக்கும் மூன்று பையன்களையுடைய ஒரு சாட்சி, இவர்களில் இரண்டு பேர் இதுவரை மரித்துவிட்டனர், சொல்கிறார்; “நீண்ட காலமாக வியாதிப்பட்டிருக்கும் ஒருவரைத் தொடர்ந்து கவனிப்பது, ஒரு சபைக்குக் கடினமாக இருக்கக்கூடும். நம்பிக்கைக்குரிய இளம் பிரஸ்தாபிகளைத் தங்களுடைய படுத்தப்படுக்கையாய் இருக்கும் நண்பரோடு, தினவாக்கியத்தைக் கலந்துபேசும்படியும், ஒவ்வொரு நாளும் பைபிளிலிருந்து ஓர் அதிகாரத்தை வாசிக்கவும் நீங்கள் ஏன் நியமிக்கக் கூடாது? இளைஞர், பயனியர்கள் உட்பட, தங்கள்தங்கள் முறைகளை எடுத்துக்கொள்ளலாம்.”
மரணம் தவிர்க்க முடியாததுபோல் தோன்றுகையில்
நோயோ துன்புறுத்தலோ எதுவாக இருந்தாலும் யெகோவாவின் ஊழியர்கள் மரணத்தைத் தைரியமாக எதிர்ப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் சீக்கிரத்தில் மரிக்கப்போவதாக உணர்ந்தால், வித்தியாசமான உணர்ச்சிகளை அவர்கள் உணர்வது இயல்பானதே. அவர்களுடைய மரணத்திற்குப்பின், அவர்களுடைய உறவினர்களும் மாற்றம், துக்கம், மற்றும் மேற்கொள்ளுதல் போன்ற காலப்பகுதியைக் கடந்து போகவேண்டியதிருக்கிறது. எனவே, வியாதிப்பட்டிருப்பவர், யாக்கோபு, தாவீது, பவுல் ஆகியோரைப்போல மரணத்தைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவது நல்லதாகத் தோன்றுகிறது.—ஆதியாகமம், அதிகாரங்கள் 48, 49; 1 இராஜாக்கள் 2:1-10; 2 தீமோத்தேயு 4:6-8.
மருத்துவராக இருக்கும் ஒரு சாட்சி எழுதுகிறார்: “இதைக்குறித்து நாம் வெளிப்படையாக இருக்கவேண்டும். ஒரு நோயாளி தான் குணப்படுத்தப்படமுடியாதபடிக்கு நோயுற்றிருக்கிறார் என்பதை அறிவதிலிருந்து அவரையோ அவளையோ தடுப்பது, எந்தவித நன்மையையும் தருவதாக என் உத்தியோக அனுபவத்தில் நான் ஒருபோதும் காணவில்லை.” இருந்தபோதிலும் நோயாளி தானே என்ன அறிய விரும்புகிறார், மேலும் அவர் இதை எப்போது அறிய விரும்புகிறார் என்று புரிந்துகொள்வது நமக்கு அவசியம். சில நோயாளிகள் சாகப்போகிறோம் என்பதை அறிந்திருப்பதாகத் தெளிவாகவே சொல்கிறார்கள்; மேலும் இதைப்பற்றிய அவர்களுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அவர்கள் கலந்துபேசவேண்டிய அவசியமிருக்கிறது. மற்றவர்கள் நம்பிக்கையோடு இருப்பதாக வலியுறுத்துகிறார்கள், அவர்களுடைய நண்பர்களும் அவர்களோடு நம்பிக்கையோடிருக்கிறார்கள்.—ரோமர் 12:12-15-ஐ ஒப்பிடுங்கள்.
மரணத்திற்கு அருகாமையில் இருக்கும் ஒருவர் அவ்வளவு சோர்வடைந்து அல்லது மனங்குழம்பி இருப்பதால், அவராய் ஜெபஞ்செய்ய கஷ்டப்படுபவராய் இருப்பார். இப்படிப்பட்ட ஒரு நோயாளி, ரோமர் 8:26, 27-லிருந்து கடவுள் ‘வாக்குக்கடங்காத பெருமூச்சுகளை’ புரிந்துகொள்வார் என்று அறிவது ஒருவேளை ஆறுதலளிப்பதாக இருக்கும். அப்படிப்பட்ட அழுத்தங்களின் சமயங்களில், ஒரு நபருக்கு ஜெபஞ்செய்ய வார்த்தைகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் இருக்கும் என்று யெகோவா அறிந்திருக்கிறார்.
முடியும்போது, ஒரு நோயாளியோடு சேர்ந்து ஜெபிப்பது முக்கியமானது. ஒரு சகோதரர் சொல்கிறார்: “என் அம்மா மரிக்கும்போது பேசவுங்கூட பலமில்லாது இருந்தாள், அவளுடைய கைகளை மடக்கி காட்டுவதன்மூலம் அவளோடு நாம் ஜெபிக்கவேண்டும் என்று அவள் சைகை காட்டினாள். எங்கள் ஜெபத்திற்குப் பின்பு, ராஜ்ய பாட்டுகளில் ஒன்றைப் பாடினோம், ஏனென்றால் என் அம்மா எப்போதும் இசையை விரும்பினாள். முதலில் நாங்கள் பாட்டின் மெட்டை ஒலித்தோம், பின்பு அமைதலாக வார்த்தைகளைப் பாடினோம். அவள் அதை நன்றாக அனுபவித்தாள். சந்தேகமின்றி, யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய வாழ்க்கையோடு ஒன்றிப்போகச் செய்யும் இந்தப் பாட்டுகள், வேறுவகையில் வெளிப்படுத்த கடினமாக இருக்கும் உணர்ச்சிகளை உட்படுத்துகின்றன.”
மரித்துக்கொண்டிருக்கும் நபரோடு பேசுவது, அன்பு, சாதுரியம், உணர்ச்சி ஆகியவற்றை தேவைப்படுத்துகின்றன. பார்க்கப்போகிறவர், கட்டியெழுப்பும், விசுவாசத்தைப் பலப்படுத்தும் விஷயங்களைச் சொல்வதற்குத் தயாரித்துச் செல்லலாம்; அவர் மற்றவர்களைப்பற்றியும், அவர்களுடைய பிரச்னைகள்பற்றியும் எதிர்மறையான பேச்சைத் தவிர்க்கவேண்டும். மேலும், பார்க்கப்போயிருக்கும் காலம் நியாயமானதுக்கும் பொருத்தமானதுக்கும் இசைவாக சரிப்படுத்தப்படவேண்டும். நோயாளி உணர்ச்சியிழந்த நிலையில் இருந்தாலும், சொல்லப்படுகிறதை அவர் கேட்கும் நிலையில் இருப்பார் என்பதை நினைவில் வைப்பது நல்லது. எனவே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதைக்குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்.
நாம் பங்கெடுக்கும் ஒரு பொறுப்பு
நோயுற்றவர்களையும், முதிர்வயதினர்களையும் கவனிப்பது ஒரு பெரிய பொறுப்பாகும். நோயாளியுடன் நெருங்கியிருப்பவர்களை அது உடல்சார்பாகவும், உணர்ச்சிப்பூர்வமாகவும் பாதிக்கிறது. சபையில் உள்ள மற்றவர்களிடமிருந்து புரிந்துகொள்ளுதலையும் உதவியையும் பெறும் தேவையும் தகுதியும் அவர்களுக்கு இருக்கிறது. ஒருவேளை சில கூட்டங்களைத் தவறவிட்டிருந்தாலும் அல்லது ஒரு காலப்பகுதிக்கு வெளி ஊழியத்தில் அவர்களுடைய பங்கு குறைவுபட்டாலும், வியாதிப்பட்டிருக்கும் குடும்ப அங்கத்தினர்களை அல்லது உடன் விசுவாசிகளைக் கவனித்துக்கொள்பவர்கள் சரியானதைச் செய்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:8-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.) சபையின் புரிந்துகொள்ளும் தன்மையினால் அவர்கள் பலப்படுத்தப்படுவார்கள். சில சமயங்களில் ஒரு சகோதரரோ சகோதரியோ தற்காலிகமாகக் கவனிக்கலாம், இது பொதுவாகக் கவனித்துக்கொள்பவர் கூட்டத்திற்கு போய்வர அல்லது பிரசங்க வேலையில் சில புத்துயிரளிக்கும் மணிநேரங்களை அனுபவிக்க உதவிசெய்யும்.
ஒருவேளை, நீங்கள்தானே சுகமில்லாமல் இருந்தால், நீங்களும் சில காரியங்களைச் செய்யமுடியும். உங்களுடைய இயலாமைக்குறித்த நம்பிக்கையற்றத் தன்மையும், உதவியற்ற தன்மையும் உங்களை கோபமடையச் செய்யக்கூடும், ஆனால் கோபம் ஒருவரைத் தனியே பிரித்து, மற்றவர்களை ஒதுக்கிவைக்கிறது. அதற்குப் பதில், நீங்கள் போற்றுதலுணர்வைக் காட்டி, ஒத்துழைக்கலாம். (1 தெசலோனிக்கேயர் 5:18) வலியில் உள்ளவர்களுக்காக ஜெபியுங்கள். (கொலோசெயர் 4:12) பைபிளின் அதிசயமான சத்தியங்களைப்பற்றி தியானஞ்செய்யுங்கள், பார்க்க வருகிறவர்களோடு இவற்றை கலந்துபேசுங்கள். (சங்கீதம் 71:17, 18) கடவுளுடைய மக்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தும் வளர்ச்சியோடு தொடர்ந்து ஆவலோடு முன்னேறுங்கள். (சங்கீதம் 48:12-14) இந்த மகிழ்ச்சிதரும் முன்னேற்றங்களுக்காக யெகோவாவிற்கு நன்றி செலுத்துங்கள். மறையும் சூரியன், மதிய சூரியனைவிட அதிக இதமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் வெளிச்சத்தைக் கொடுப்பதுபோல், இப்படிப்பட்ட விஷயங்களின்மீது தியானஞ்செய்வது, நம்முடைய வாழ்க்கையின் இந்த இறுதி நாட்களுக்கு அல்லது வருஷங்களுக்கு, அவற்றிற்கே உரித்தான அழகைக் கொடுக்கும்.
நாம் அனைவருமே, ஒரு தலைக்கவசத்தைப்போல நம்முடைய மனதைக் காப்பாற்றும் அந்த நம்பிக்கையைக் காத்துக்கொள்வதற்கு, விசேஷமாகக் கஷ்டமான காலங்களில் போராடவேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:8) உயிர்த்தெழுதல் நம்பிக்கையிலும் அதன் பலமான அடிப்படையிலும் தியானிப்பது நல்லது. நாம் வியாதிப்படுதலோ, முதிர்வயதால் உண்டாகும் பலவீனமோ இல்லாது இருக்கும் நாளிற்காக, நம்பிக்கையோடும், ஆவலான எதிர்பார்ப்போடும் காத்திருக்கலாம். பின்பு, ஒவ்வொருவரும் சுகமாய் இருப்பார்கள். இறந்தவர்களும் திரும்பி வருவர். (யோவான் 5:28, 29) இந்தக் ‘காணப்படாதவைகளை,’ நாம் நம்முடைய விசுவாச மற்றும் நம்முடைய இருதய கண்களினால் காண்கிறோம். அவற்றின் காட்சியை ஒருபோதும் இழக்காதிருப்போமாக.—ஏசாயா 25:8; 33:24; வெளிப்படுத்துதல் 21:3, 4.