வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலிருந்து காட்சிகள்
வாருங்கள் கலிலேயா கடலைச் சுற்றிப்பாருங்கள்!
கலிலேயா கடலைவிட வெகுசில இடங்களே பைபிள் வாசிப்பவர்களின் மனதிற்கு அதிக உடனடியாக வருகின்றன. ஆனால் உங்கள் கண்களை மூடிக்கொண்டு, எங்கே யோர்தான் நதி நுழைகிறது மற்றும் வெளியே செல்கிறது அல்லது கப்பர்நகூம், திபேரியா போன்ற முக்கிய இடங்களைச் சுட்டிக்காண்பித்து, இந்த நன்னீர் கடலை நினைத்துப்பார்க்க முடியுமா?
கீழேயுள்ள, உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சியை, உள்ளே செருகப்பட்ட படத்தின் எண்களுடன் ஒப்பிட்டுக் கவனித்து ஆராய நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். எண் குறிக்கப்பட்ட எத்தனை இடங்களை நீங்கள் அடையாளங்காட்ட முடியும்? அவற்றில் எவ்வளவு அதிகத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக பைபிள் உங்களுக்கு நிஜமானதாயும் அர்த்தமுடையதாயும் இருக்கும். அதற்காக, ஒரு சுருக்கமான, அறிவூட்டும் சுற்றுலாவுக்கு வாருங்கள்.
இந்த உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சி, வடகிழக்குத் திசையை நோக்கியவண்ணம் உள்ளது. நாம் #1-ல் தொடங்குவோம். அது கடலின் எந்தப் பாகமாக இருக்கிறது? ஆம், சமாரியாவுக்கும் கீலேயாத்துக்கும் இடையில் கீழ்நோக்கி வந்து சவக் கடலில் சேரும்படியாக, யோர்தான் வெளிவரும் தெற்கு முனை. இடப்பக்கத்தில், கடலின் இந்த முனை ஓர் அண்மை காட்சியை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்; இது 1993 யெகோவாவின் சாட்சிகளுடைய நாட்காட்டியிலும் (1993 Calendar of Jehovah’s Witnesses) காண்பிக்கப்பட்டிருக்கிறது.
மத்தியதரைக் கடலுக்குச் சுமார் 200 மீட்டருக்குக் கீழ், செங்குத்தான பக்கங்களையுடைய பள்ளத்தாக்கின் ஆழத்தில் கலிலேயா கடல் அமைந்திருக்கிறது. உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சியை நீங்கள் ஆராய்கையில், அதன் கிழக்கத்திய கரையிலிருந்து (#7-ஐச் சுற்றி) எழும்பும் மலைகளைக் கவனியுங்கள். இந்தக் கடல் ஓர் ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது என்பதை அழுத்திக்காண்பிக்கும் வகையில், குன்றுகளும் மலைகளும் அருகிலுள்ள, அல்லது மேற்கத்திய கடற்கரையில் எழும்புகின்றன; இந்தக் கடல் சுமார் 21 கிலோமீட்டர் நீளமும், அதிகபட்சம் 12 கிலோமீட்டர் அகலமும் உடையது. கடற்கரைகளில் கிராமங்களுக்கும், திபேரியா (#2) போன்ற நகரங்களுக்கும்கூட இடமிருந்தது. திபேரியாவிலிருந்து படகுகளில் வந்த ஒரு கூட்டம், இயேசு அற்புதகரமாக 5,000 பேருக்கு உணவளித்திருந்த கடலின் அக்கரைக்குக் கடந்துசென்றது என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்.—யோவான் 6:1, 10, 17, 23.
திபேரியாவிலிருந்து கடற்கரை ஓரமாக வடக்கில் நீங்கள் செல்லுகையில், கெனேசரேத்தின் (#3) செழிப்பான பகுதியைக் கடந்து செல்கிறீர்கள்.a இந்தப் பகுதியில் இயேசு மலைப்பிரசங்கத்தைக் கொடுத்தார்; இங்கே காண்பிக்கப்பட்டபடி, அருகிலுள்ள கடற்கரையில்தான் அவர் பேதுருவையும் இன்னும் மூவரையும் “மனுஷரைப் பிடிக்கிறவர்கள்” ஆகும்படி அழைத்திருக்கவேண்டும். (மத்தேயு 4:18-22) தொடர்ந்து பயணப்படுகையில், நீங்கள் கப்பர்நகூமுக்கு (#4) வருகிறீர்கள்; இதுவே இயேசுவின் நடவடிக்கைகளுக்கு மையமாக இருந்தது; “தம்முடைய பட்டணம்” என்றுகூட குறிப்பிடப்படுகிறது. (மத்தேயு 4:13-17; 9:1, 9-11; லூக்கா 4:16, 23, 31, 38-41) கடலைச் சுற்றி கிழக்குப்பக்கமாக தொடர்ந்தால் நாம் (#5)-ஐக் கடக்கிறோம்; அங்கு யோர்தானின் மேற்புறம் கடலில் (கீழே) பாய்கிறது. பின்னர் பெத்சாயிதா (#6) பகுதிக்கு நீங்கள் வருகிறீர்கள்.
கலிலேயா கடலைப் பற்றிய அறிவு, பைபிள் பதிவுகளைப் புரிந்துகொள்ள, கற்பனை செய்து பார்க்க எப்படி உங்களுக்கு உதவ முடியும் என்று எடுத்துக்காட்ட இந்த ஒருசில இடங்களைக்கூட நாம் பயன்படுத்தலாம். பெத்சாயிதா பகுதியில், இயேசு 5,000 பேருக்கு உணவளித்து, அவரை ராஜாவாக்கும்படி ஒரு கூட்டம் முயன்றபின், அவர் அப்போஸ்தலர்களைக் கப்பர்நகூமிடமாக ஒரு படகில் அனுப்பினார். அவர்களுடைய பயணத்தின்போது, புயல் காற்று மலைகளிலிருந்து அடித்துவந்து, அலைகளை வேகமாக எழும்பச்செய்து, அப்போஸ்தலர்களை அச்சுறுத்திக்கொண்டு இருந்தது. ஆனால் இயேசு கடலில் அவர்களிடம் நடந்துவந்து, புயலை அமைதிப்படுத்தி, கெனேசரேத்தின் அருகே அவர்கள் பத்திரமாகக் கரை சேரும்படி செய்தார். (மத்தேயு 14:13-34) திபேரியாவிலிருந்து வந்தவர்கள் திரும்பவும் கப்பர்நகூமுக்குக் கடந்து சென்றனர்.—யோவான் 6:15, 23, 24.
கடலின் கிழக்குப் பக்கத்தைச் சுற்றி தொடர்கையில், “கெர்கெசேனர் நாடு [அல்லது, கதரேனருடைய நாடு]” என்று பெரும்பாலும் குறிப்பிடப்பட்டதை நீங்கள் கடந்து செல்கிறீர்கள். இங்கே இரு மனிதர்களிடமிருந்து இயேசு பேய்களை விரட்டினார் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த ஆவிகள் கொடுமையில் பிரியமுள்ளவையாய் ஒரு பெரிய பன்றி கூட்டத்திற்குள் புகுந்து, ஓர் உயர்ந்த மேட்டிலிருந்து கடலுக்குள் வீழ்ந்தன. அதன்பிறகு அந்த மனிதரில் ஒருவன் அருகாமையிலுள்ள கிரேக்கு பேசும் தெக்கப்போலி பட்டணங்களில் சாட்சிபகர்ந்தான். இயேசு படகின்மூலம் கலிலேயாக் கடலை கடந்து, இந்தப் பகுதிக்கு வந்து, இங்கிருந்து திரும்பியும் சென்றார்.—மத்தேயு 8:28–9:1; மாற்கு 5:1-21.
கடலின் கீழ்ப்பக்கத்திடமாக நீங்கள் உங்கள் சுற்றுலாவை நிறைவு செய்கையில், யோர்தான் நதியின் கீழ்ப்பாகத்திற்கு மிகுந்த தண்ணீரைக் கொண்டுவரும் ஒரு பெரிய ஆற்றின் (யார்முக் என்று அழைக்கப்படுவதன்) அருகே கடந்து செல்கிறீர்கள்.
பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் மீன் பிடித்துக்கொண்டிருக்கையில் இயேசு உயிர்த்தெழுதலுக்குப்பின் காணப்பட்டது (கீழே) போன்ற, கலிலேயா கடலைச் சுற்றி நடந்த சில சம்பவங்களுக்கு ஓர் இடத்தை பைபிள் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. அது கப்பர்நகூமுக்கு அருகில் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எப்படி இருந்தாலும், இந்த முக்கியமான கடலைப்பற்றிய உங்களுடைய அறிவு அந்தச் சாத்தியத்தைக் கற்பனை செய்யும்படி உங்களுக்கு உதவுகிறது.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம் ஏப்ரல் 1, 1992-ல், “கெனேசரேத்து—‘அதிசயமானது அழகானது’” என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் படம்]
1
2
3
4
5
6
7
வ
தெ
கி
மே
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 24-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 24, 25-ன் படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
[பக்கம் 25-ன் படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.