‘யெகோவாவில் நம்பிக்கை’ வைக்கும் இளைஞர்
இளைஞர் அழகில் ஏகபோக தனி உரிமை பெற்றில்லை, முதியோரும் ஞானத்தில் தனிப்பட்ட உரிமை பெற்றில்லை. (ஒப்பிடுக: நீதிமொழிகள் 11:22; பிரசங்கி 10:1.) பதிலாக, நிரந்தர அழகையும் உண்மையான ஞானத்தையும் பெற்றிருப்பவர்கள், யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, முழு இருதயத்தோடு அவரைப் பற்றி இவ்வாறு சொல்கிறவர்களே: “நீரே என் தேவன்.”—சங்கீதம் 31:14; நீதிமொழிகள் 9:10; 16:31.
உலகமெங்கும் அழகான மக்களின் அதிகரிக்கும் மக்கள்கூட்டம் இருக்கிறது. இவர்கள் இளைஞரும் முதிர்வயதினருமாய், கடவுளைச் சேவிப்பதன்மூலமும் கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலமும் அவர்களுடைய ஞானத்தைக் காண்பித்துவருகின்றனர். எடுத்துக்காட்டாக, எட்டு வயது ஸாப்ரீனாவை எடுத்துக்கொள்வோம்.
ஸாப்ரீனா ஜெர்மனியில் வசித்து வருகிறாள். இப்போது இரண்டாம் கிரேடில் இருக்கிறாள். அவளுடைய பள்ளிக்கு வருகிறவர்களில் அவள் ஒருத்தியே முதலாவது யெகோவாவின் சாட்சி. கவலைதரும்விதமாகவே, அவளுடைய வகுப்பு சகாக்களினுடைய நிந்தைகளுக்கு அவள் இலக்காக இருந்தாள். அவளுடைய ஆசிரியை மாணவர்களிடம் தங்களுக்குப் பிரியமான புத்தகம் ஒன்றை வகுப்பிற்குக் கொண்டுவரும்படி சொன்ன நாள் வரை அவ்வாறு இருந்தது. ஸாப்ரீனா என்னுடைய பைபிள் கதைப் புத்தகத்தைக் கொண்டுபோவது என தீர்மானித்தாள். முந்தின இரவில், அவள் பயவுணர்ச்சியில் இருந்தபோதிலும் வகுப்பிற்கு நன்றாகத் தயாரித்தாள். அவளுடைய வகுப்பில் 26 மாணவர்கள் இருந்ததால், அவளுக்கு அதிக நேரம் கொடுக்கமாட்டார்கள் என்பதை அறிந்திருந்தாள். ஆனால் அவளுடைய விளக்கத்தை யாரும் தடுத்துநிறுத்தக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்து, யெகோவா நிச்சயம் உதவிசெய்வார் என நம்பினாள். அந்தக் குறிக்கப்பட்ட நாள் வந்தபோது, யாரெல்லாம் புத்தகத்தைக் கொண்டுவந்திருக்கின்றனர், முதலில் அதை காண்பிக்க விரும்புவது யார் என்று ஆசிரியை கேட்டார். எதிர்பார்த்திராதபடி, ஸாப்ரீனா மட்டுமே ஒரு புத்தகத்தைக் கொண்டுவந்திருந்தாள். அவள் வகுப்புக்கு முன் நின்றுகொண்டு பேச ஆரம்பித்து, புத்தகத்திலிருந்து படித்து, படங்களைக் காண்பித்து, ஒவ்வொரு காரியமும் பைபிளை அடிப்படையாகக் கொண்டிருந்தது என்று விளக்கினாள். இறுதியில் அவள் கேட்டாள்: “இந்தப் புத்தகத்தைப் பெற விரும்புகிறவர்கள் யார்?” ஆசிரியைக்கு ஒரு பிரதியைக் கொடுத்தாள், அடுத்த சில நாள்களில் பத்து கூடுதலான புத்தகங்களை அவளுடைய வகுப்பு சகாக்கள் சிலரிடம் கொடுத்தாள். அவளுடைய உரையாடலைப் பற்றிய ஆசிரியையின் ஒரே குறிப்பு என்னவென்றால்: “இதைப்போல் ஒன்றை நான் கண்டதேயில்லை.” ஸாப்ரீனாவுடைய உழைப்பிற்காக அவர் A மார்க் கொடுத்தார்.
உண்மையில், பல இளம் சாட்சிகள் பள்ளியில் நற்செய்தியின் சந்தோஷமிக்க பிரஸ்தாபிகளாக இருக்கிறார்கள். மற்றொரு எடுத்துக்காட்டு எரிகா, மெக்ஸிகோவிலுள்ள 11 வயது பிரஸ்தாபி. சிசுப்பருவத்திலிருந்தே அவள் யெகோவாவை நேசிக்கும்படி கற்பிக்கப்பட்டிருந்தாள். அவளுடைய வகுப்புப் பாடம் விநோதமானதாய் இருந்தது. அவளுடைய பள்ளி வேலைகளில் ஒன்று, எய்ட்ஸ், புகையிலை மற்றும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாதல் பற்றிய ஒரு கட்டுரையைத் தயாரிக்கவேண்டியதாக இருந்தது. விழித்தெழு! பத்திரிகையைப் பயன்படுத்தி அவள் நன்றாகத் தயாரித்தாள். முதல் மார்க்கையும் பெற்றாள். அவளுடைய ஆசிரியை அவளிடம் எங்கிருந்து குறிப்புகளைப் பெற்றாய் என்று கேட்டார். அந்தத் தலைப்புப்பொருள்கள் கொண்ட கட்டுரைகள் அடங்கிய பத்திரிகைகளை ஆசிரியையிடம் கொடுத்தாள். பின்பு ஆசிரியை, தலைப்புப்பொருள்களை முழுவகுப்போடும் கலந்தாலோசிக்க அந்தப் பத்திரிகைகளைப் பயன்படுத்தினார். எரிகாவின் நடத்தை, ஆசிரியர்களுக்கு அவள்தரும் மரியாதை, அவளுடைய சிறந்த மதிப்பெண்கள் ஆகியவற்றின் காரணமாக அவள் பரிசுகளுக்கும், சான்றிதழ்களுக்கும், பகுதியளவு படிப்பூதியத் தொகைகளுக்கும் தகுதிபெற்றாள். எனினும் அவள் தன்னை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அடையாளப்படுத்தி, பைபிள் இலக்கியங்களைக் கொடுத்து, கடவுளுடைய பெயரை மேன்மைப்படுத்தினதை அவளுடைய பெரிய சாதனைகளாக அவள் உணர்கின்றாள்.
பின்பு, நியூ ஜீலாந்தில் வாழும் ஷன்னன் என்ற 10 வயது பையன் ஒருவன் இருக்கிறான். அவனுக்கு ஒரேயொரு நல்ல கண்தான் உண்டு. அவன் குழந்தையாய் இருந்தபோது புற்றுநோயினால் மற்றொரு கண்ணை இழந்திருந்தான். ஷன்னன் ஏழு வயதானபோது, அவனுடைய அம்மா யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். எனினும் அவள் தன்னுடைய பைபிள் பாடங்களை ஆரம்பித்த வெகுசில நாள்களுக்குள் ஒரு மனிதனோடு திருமணம் செய்யாமல் கூடிவாழ ஆரம்பித்தாள்; தன்னுடைய பைபிள் படிப்புகளையும் நிறுத்திவிட தீர்மானித்தாள். ஷன்னன் தன்னுடைய பைபிள் படிப்புத் தொடர்ந்து நடத்தப்படும்படி கெஞ்சினான். அவனுடைய விருப்பத்திற்கு அனுமதியளிக்கப்பட்டது. சாட்சிகள் தொடர்ந்து வந்தனர். இறுதியில், வீட்டிலிருந்த எல்லா, மூன்று அங்கத்தினர்களும் பைபிளைப் படித்து ஆவிக்குரிய முன்னேற்றத்தை அடைந்தனர். சட்டப்பிரகாரமாகத் திருமணம் செய்த பின்பு, ஷன்னனின் அம்மா மற்றும் ஒன்றுவிட்ட தகப்பனும் முழுக்காட்டுதல் பெற்றனர்.
ஒரு நாள் ஷன்னனும் வட்டாரக் கண்காணியின் மனைவியும் சேர்ந்து வெளி ஊழியத்தில் ஈடுபட்டனர். ஒரு வீட்டுக்காரர் ஷன்னனிடம், “உன் கண்ணுக்கு என்ன நேர்ந்தது,” என்று கேட்டார். “அதில் புற்றுநோயை நான் பெற்றேன், அது நீக்கப்படவேண்டியதிருந்தது,” என்று அவன் சொன்னான். “சீக்கிரத்தில் யெகோவா எனக்குப் புதிய ஒன்றை பரதீஸில் கொடுப்பார், அதைப் பற்றி சொல்லத்தான் நாங்கள் இங்கு உங்களிடத்தில் வந்திருக்கிறோம்.”